என்னுடைய வயது 40. நான் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். மூன்று மற்றும் ஐந்து வயதாகும் என்னுடைய இரண்டு குழந்தைகளின் மேற்படிப்புக்காகத்தான் இந்த முதலீடுகளைச் செய்து வருகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் முதல் 60 லட்சம் வரை எனக்குத் தேவையாக இருக்கும். நான் எதிர்பார்க்கும் வருமானத்தை அடைய நான் செய்துவரும் முதலீடுகள் போதுமானவையா, என் போர்ட்ஃபோலியோவில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா?

என் முதலீடுகள்... எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, எடெல்வைஸ் மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.5,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.3,000, கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட் ரூ.2,000, மிரே அஸெட் எமெர்ஜிங் ஃபண்ட் ரூ.3,000, கோட்டக் மிட்கேப் ஃபண்ட் ரூ.5,000

- ரத்ன குமார், மெயில் மூலமாக

“உங்கள் முதலீட்டில் பெரிதாக மாற்றம் எதுவும் செய்யத் தேவையில்லை. இருப்பினும், எடெல்வைஸ் மல்ட்டிகேப் ஃபண்டைத் தொடர்ந்து கண்காணித்து வரவும். அதிலுள்ள பங்குகள் நன்றாக இருக்கிறது. ஆனாலும், ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் அதற்குப் பதிலாக, யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். உங்கள் முதலீடுகளுக்குத் தொடர்ந்து 12% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் ரூ.63 லட்சத்தைத் தொடக்கூடும்.”

என் வயது 39. நான் நடுத்தர வருமானப் பிரிவைச் சேர்ந்தவன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்து வருகிறேன். அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் திட்டம் உள்ளது. என்னுடைய முதலீட்டு போர்ட்ஃபோலியோ சரியாக உள்ளதா, புதிதாக மாற்றங்கள் ஏதும் தேவையா?

என் முதலீடுகள்... கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட் ரூ.6,000, கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.7,000, ஆக்ஸிஸ் எல் அண்ட் டி ஈக்விட்டி ஃபண்ட் ரூ.7,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000, கோட்டக் செலக்ட் மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.5,000.

- லஷ்மணன், மெயில் மூலமாக

“உங்களுடைய முதலீட்டு போர்ட் ஃபோலியோவில் சிறிய அளவில் மாற்றம் செய்துள்ளேன். இந்த மாறுதலுக்கேற்ப செயல்படவும். மாற்றம் ஏன் அவசியம் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் மிட் அண்ட் ஸ்மால்கேப் எக்ஸ்போஷர் குறைவாக உள்ளது என்பதுதான் மாற்றம் செய்யக் காரணம்.

கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.3,000 மற்றும் இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் ரூ.3,000 முதலீடு செய்யுங்கள். மற்றபடி மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.”

என்னுடைய வயது 32. நான் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்து வருகிறேன். நான் என்னுடைய ஓய்வுக்காலத்துக்கும் குழந்தைகளின் மேற்படிப்புக்கும் முதலீடு செய்துவருகிறேன். இன்னும் கூடுதலாக ரூ.4,000 முதலீடு செய்யவும் திட்டம் உள்ளது. கூடுதல் முதலீட்டுக்கு ஆலோசனை சொல்லவும். நான் இப்போது முதலீடு செய்துவரும் என்னுடைய போர்ட்ஃபோலியோ சரியாக உள்ளதா..?

என் முதலீடுகள்... ஆக்ஸிஸ் புளூசிப் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.1,000, மிரே அஸெட் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பேங்கிங் ஃபண்ட் ரூ.1,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ரெகுலர் கோல்டு சேவிங்ஸ் ரூ.500, நிப்பான் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ரூ.500.

- எஸ்.சிவம், மெயில் மூலமாக

“உங்கள் தற்போதைய முதலீட்டில் ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக நீங்கள் கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.

புதிதாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள 4,000 ரூபாயை யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000, எடெல்வைஸ் யூ.எஸ் டெக்னாலஜி ஃபண்டில் ரூ.1,000 மற்றும் இன்வெஸ்கோ மிட்கேப் ஃபண்டில் ரூ.1,000 எனப் பிரித்து முதலீடு செய்யவும்.”

என்னுடைய வயது 46. எனது ஓய்வுக்காலத்துக்குப் பயன்படும் வகையில் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் தலா ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். என் போர்ட்ஃபோலியோவில் ஏதேனும் மாறுதல் தேவையா அல்லது அப்படியே தொடரலாமா?

நான் முதலீடு செய்துள்ள ஃபண்டுகள்... ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் ஃபோகஸ்டு 25 ஃபண்ட், சுந்தரம் செலக்ட் ஃபோகஸ்டு ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட், கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், டி.எஸ்.பி மிட்கேப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், எடெல்வைஸ் மல்ட்டிகேப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட், எல் அண்ட் டி அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட்.

- தி.சங்கர், மெயில் மூலமாக

“உங்களுடைய ஈக்விட்டி போர்ட் ஃபோலியோவை ஆராய்ந்து பார்த்தால் 65% லார்ஜ்கேப் ஃபண்டுகளும் மீதம் 34% மிட்கேப் ஃபண்டுகளும் உள்ளன. இது மிகவும் கன்ஸர்வேட்டிவ்வான போர்ட்ஃபோலி யாகவாக உள்ளது.

உங்களுக்கு 46 வயதுதான் ஆகிறது. உங்கள் ஓய்வுக்காலத்துக்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது போர்ட்ஃபோலியோவில் 20% லார்ஜ்கேப், 40% மல்ட்டிகேப், 30% மிட்கேப் மற்றும் 10% ஸ்மால்கேப் என்ற வகையில் முதலீடுகள் இருக்குமானால் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

எனவே, உங்கள் போர்ட்ஃபோலியோவில் சில மாறுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப முதலீடுகளை அமைத்துக் கொள்ளவும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவில் மோதிலால் ஆஸ்வால் 25 ஃபண்டும், சுந்தரம் செலக்ட் ஃபோகஸ் ஃபண்டும் லாபத்தில் இருந்தால் விற்றுவிடவும். அந்த ஃபண்டுகள் மூலம் வரக்கூடிய தொகையை இரண்டு லார்ஜ்கேப் ஃபண்டுகளிலும் பிரித்து முதலீடு செய்யவும்.

எடெல்வைஸ் மல்ட்டிகேப் ஃபண்டை விற்றுவிட்டு அதற்குப் பதிலாக யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.