Published:Updated:

லாபம் ஈட்டுபவர், நஷ்டம் செய்பவர்... நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

லாபம் ஈட்டுபவர், நஷ்டம் செய்பவர்... நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

மக்களைப் பொறுத்தவரை, பொதுவாக இரு பிரிவாகப் பிரிக்கலாம். முதலாவது வகை மனிதர்கள் பயணிகளைப் (Traveller) போன்றவர்கள். இரண்டாவது வகை மனிதர்கள் நாடோடிகள் (Wanderer) அல்லது வழிப்போக்கர்கள் ஆவார்.

முதலீட்டாளர்களையும் பயணி (Traveller), நாடோடி (Wanderer) எனப் பிரிக்கலாம். இதில் முதலீட்டாளர்கள் பயணிகள் போலவும், மற்றவர்கள் நாடோடிகள் போலவும் செயல்படுவார்கள்.

ஹசன் அலி 
நிறுவனர், 
Siptiger.com
ஹசன் அலி நிறுவனர், Siptiger.com

இலக்கும் பயணத் திட்டமும்...

ஒரு பயணிக்கு, தான் எங்கே போக வேண்டும் என்கிற இலக்கு தெரியும். தவிர, ஒரு பயணத் திட்டமும் இருக்கும். நாடோடிக்கு, தான் எங்கே போகப்போகிறோம் என்பது தெரியாது. அவருக்கு இலக்கு எதுவும் இல்லாத தால், பயணத் திட்டமும் இருக்காது!

அஸெட் அலொகேஷன்...

பயணிக்கு எந்தெந்த வாகனங்களில் (விமானம், ரயில், பஸ், கார், ஆட்டோ) பயணம் செய்யப்போகிறோம் என்பது தெரியும். அதாவது, இந்த வகை முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்), கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள்), தங்கம் போன்றவற்றில் எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பதுடன், அதற்கேற்றத் திட்டமும் இருக்கும்.

நாடோடிகள், கிடைக்கும் வாகனங்களில் பயணம் செய்வார்கள்; அவர்களுகென எந்தத் திட்டமும் இல்லாததால், இந்த வகை முதலீட்டாளர்கள் அவர்கள் விரும்பியபடி ஏதேதோ திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.

சந்தை சுழற்சி...

பயணிக்கு எங்கெங்கே நின்று, தங்கிச் செல்ல வேண்டும் என்பது தெரியும். இது போன்ற முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையின் சுழற்சி தெரியும். அதற்கேற்ப செயல்பட்டு அவர்கள் முதலீட்டில் லாபம் ஈட்டுவார்கள்.

நாடோடிகளுக்கு பெரும்பாலும் தவறான பாதையில் சென்று எங்காவது அவர்களின் பயணம் தடைப்பட்டு நிற்கும். இது போன்ற முதலீட்டாளர்கள் தவறான சந்தை சுழற்சியில் முதலீடு செய்து அல்லது முதலீட்டை வெளியே எடுத்து இழப்பைச் சந்திப்பார்கள்.

லாபம் ஈட்டுபவர், நஷ்டம் செய்பவர்... நீங்கள் எந்த வகை முதலீட்டாளர்?

மதிப்பு முதலீடு...

பயணி, பயணத்தில் எங்கெங்கு விலையில் தள்ளுபடி கிடைக்கும் என்பதை அறிந்து அதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த செலவைக் குறைப்பார். இந்த வகை முதலீட்டாளர், சந்தை இறக்கத்தில் நல்ல நிறுவனப் பங்குகளின் விலை இறக்கத்தில் இருக்கும்போது அதில் முதலீடு செய்வார். மேலும், பங்கின் விலை மலிவாக, மதிப்பாக (Value) இருக்கிறதா என்பதை அறிந்து அப்போது முதலீடு செய்வார். இதே போல், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு களிலும் முதலீடு செய்வார். இதனால் இவர்களின் முதலீடு நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக லாபம் தருவதாக இருக்கும்.

நாடோடி போகிற போக்கில் எல்லா வற்றையும் செய்வதால், அவருக்கு தள்ளுபடி என்பது எங்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதே போன்ற முதலீட்டாளர்களும் சரியான விலை யில் நிறுவனப் பங்குகளில் முதலீடு, சரியான என்.ஏ.வி-யில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்க மாட்டார்கள். இதனால், இவர்களின் லாபம் என்பது உறுதியான தாக இருக்காது.

குறுகிய கால பங்கு, ஃபண்ட் முதலீடு...

பயணி எந்த விஷயத்தையும் நீண்ட கால திட்டத்துடன்தான் செயல்படுத்துவார். எங்கு சுற்றுலா செல்ல திட்ட மிட்டாலும், அலசி ஆராய்ந்துதான் முடிவு எடுப்பார்கள். இதேபோல்தான் இந்தப் பிரிவு முதலீட்டாளரும் பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி ஃபண்டைப் பொறுத்தவரை, நீண்டகால முதலீட்டாளராக இருப்பார்.

நாடோடியிடம் எந்த ஒரு முன் திட்டமும் இருக்காது. இது போன்ற முதலீட்டாளர்கள் குறுகிய கால முதலீட் டாளர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் அதிக விலையில் வாங்கி குறைந்த விலையில் விற்று நஷ்டப்படுவார்கள்.

இலக்கை அடைதல்...

பயணி அவரின் சரியான திட்டமிடல் மற்றும் உத்திகள் மூலம் அவர் இலக்கை அடைந்து சந்தோஷம் அடைவார். நாடோடி எப்போதும் அவர் இலக்கை அடையாமல், எங்காவது சுற்றிக்கொண்டு அலைவார். இதேபோல்தான், இலக்கு இல்லாத முதலீட்டாளர்களின் நிலையும்; அவர்கள் இழப்பை சந்திப்பவர்களாக இருப்பார்கள்.

முதலீட்டில் நீங்கள் யார்? நாடோடியாக இருந்தால் பயணியாக மாற இன்றே முயற்சி செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism