Published:Updated:

ஓராண்டில் 180% லாபம் தந்த கமாடிட்டி ஃபண்ட்..! முதலீட்டாளர்கள் இனி வாங்கலாமா?

M U T U A L F U N D

பிரீமியம் ஸ்டோரி

ஆகாஷ்

ஓராண்டுக் காலத்தில் 100%, 200% லாபம் தந்த பங்குகள் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால், ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஓராண்டுக் காலத்தில் 180% லாபம் தந்திருக்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதுதானே! ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. கமாடிட்டி ஃபண்டுதான் ஒரே ஆண்டில் இவ்வளவு லாபம் தந்துள்ளது. இது ஒரு செக்டார் ஃபண்ட். இரும்பு, காப்பர், ஆயில் என முக்கிய கமாடிட்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனப் பங்கு களை மட்டுமே வாங்கி முதலீடு செய்யும் கமாடிட்டி வகை ஃபண்ட்.

கடந்த ஓராண்டுக் காலத்தில் இந்த கமாடிட்டிப் பொருள்களின் விலை ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு நடவடிக்கை பிறப்பிக்கப் பட்டதால், இந்த கமாடிட்டி பொருள் களின் விலை ஏகத்துக்கும் உயர்ந்த தால், இவற்றைத் தயாரிக்கும் நிறுவனப் பங்குகளின் மதிப்பும் விறுவிறுவென உயர்ந்தது. இதனால் இந்த ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை சம்பாதித்துத் தந்திருக்கிறது.

ஓராண்டில் 180% லாபம் தந்த
கமாடிட்டி ஃபண்ட்..! முதலீட்டாளர்கள் இனி வாங்கலாமா?

உதாரணமாக, இந்த ஃபண்ட் மிக அதிகமாக முதலீடு செய்துள்ள டாடா ஸ்டீல் பங்கு விலை, கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.269 என்ற அளவில் வர்த்தகமானது. அதே பங்கு இப்போது ரூ.1,216 என்ற அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகிறது. இது ஏறக்குறைய ஐந்து மடங்கு உயர்வு. இதேபோல, இன்டால்கோ நிறுவனப் பங்கு விலை ஓராண்டுக் காலத்துக்கு முன் ரூ.114-ஆக இருந்தது, தற்போது ரூ.425-ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ள கமாடிட்டி நிறுவனப் பங்குகள் அனைத்துமே குறைந்தது 300% - 400% வரை லாபம் தந்திக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. கமாடிட்டி ஃபண்ட் 2019-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. இரும்பு, காப்பர், அலுமினியம், கச்சா எண்ணெய் எனப் பல்வேறு கமாடிட்டிகளின் விலை குறைவாக இருந்தபோது இந்த ஃபண்ட் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது சிறப்பம்சம் ஆகும். தவிர, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலக அளவில் ஊரடங்கு காரணமாக பங்குச் சந்தை கணிசமான இறக்கத்தைக் கண்டது. அப்போது பல்வேறு கமாடிட்டி உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலையும் கடுமையாகக் குறைந்தன. குறைந்த விலையில் அதிகமான பங்குகளை இந்த ஃபண்ட் நிறுவனம் வாங்கியது தான் இவ்வளவு லாபம் கொடுக்க முக்கியக் காரணம் என்கிறார்கள் ஃபண்ட் ஆய்வாளர்கள்.

இது மட்டுமல்ல, இதே போன்ற கமாடிட்டி துறை சார்ந்த வேறு சில ஃபண்டுகளும் கடந்த ஓராண்டில் 100% அளவுக்கு லாபம் தந்திருக்கிறது. உதாரணமாக, டி.எஸ்.பி நேச்சுரல் ரிசோர்சஸ் ஃபண்ட் கடந்த ஓராண்டில் 112 சதவிகிதமும், எஸ்.பி.ஐ மேக்னம் கமா ஃபண்ட் 104 சதவிகிதமும், டாடா ரிசோர்சஸ் அண்ட் எனர்ஜி ஃபண்ட் 94 சதவிகிதமும் லாபம் தந்துள்ளன.

‘‘இவ்வளவு லாபம் தந்த இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யாமல் இருந்துவிட்டோமே” என்று நினைக் காதீர்கள். பங்குச் சந்தையாக இருந்தாலும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாக இருந்தாலும் சரி, கடந்த காலத்தில் கிடைத்த வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இரும்பு, காப்பர், அலுமினியம் போன்ற கமாடிட்டிகளின் விலை இனிவரும் நாள்களில் ஏறுமா அல்லது இறங்குமா என உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, மிக மிக அதிகமாக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் தவிர, மற்றவர்கள் இது மாதிரியான ஃபண்டுகளிலிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது’’ என்கிறார்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் .

நஷ்டமே வேண்டாம் என்கிறவர் கள், செக்டார் ஃபண்டுகள் பக்கம் வராமல் இருப்பதே நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு