Published:Updated:

கோல்டு இ.டி.எஃப் Vs சில்வர் இ.டி.எஃப் உங்களுக்கு ஏற்றது எது?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

கோல்டு இ.டி.எஃப் Vs சில்வர் இ.டி.எஃப் உங்களுக்கு ஏற்றது எது?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இந்தியாவில் முதல் கோல்டு இ.டி.எஃப் 2007-ம் ஆண்டில் அறிமுகமானது. இதன்பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் சுமார் ஒரு மாதத்துக்குமுன் சில்வர் இ.டி.எஃப் திட்டம் அறிமுகமாகி இருக்கிறது.

பொதுவாக, தங்கத்தை சர்வதேச சொத்து என்பார்கள். காரணம், இதன் விலை லண்டன் புல்லியன் மார்க்கெட் சங்கத்தால் நிர்ணயிக்கப் படுவதாகும். இதன் விலை, வணிக தினத்தில் காலை 10.30 மணி மற்றும் 3 மணிக்கு என ஒரு நாளைக்கு இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. வெள்ளி விலை அது உற்பத்தியாகும் நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.

ஹசன் அலி 
நிறுவனர் 
Siptiger.com
ஹசன் அலி நிறுவனர் Siptiger.com

தங்கமும் வெள்ளியும்

இந்தியாவில் தற்போது தங்கம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. காரணம், தங்கம் இருக்கும் சுரங்கம் எதுவும் இப்போது நம் நாட்டில் இல்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன்மூலம் இந்தியாவின் தங்கத் தேவை நிறைவேற்றப்படுகிறது. பலரும் தங்கத்தின் விலை உயர்வைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் நோக்கத்துடன், தங்கத்தை நாணயமாக வாங்க ஆரம்பிக்கவே, இந்திய பணம் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தது. இதைக் குறைக்கவே மத்திய அரசு டிஜிட்டல் தங்கத்தை ஆதரிக்கத் தொடங்கியது. அது தங்கத்தின் விலை உயர்வு நன்மையுடன் ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும் கோல்டு பாண்டை அறிமுகப்படுத்தியது.

வெள்ளியும் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வெள்ளி உற்பத்தியில் ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. தங்கம் என்பது ஆபரண நகை (செயின், கம்மல், மூக்குத்தி, நெக்லஸ், மோதிரம் என ஏகப்பட்ட பொருள்கள்), முதலீடு, செல்போன், சிம் கார்டு போன்ற தொழில்நுட்பத் தயாரிப்புகளில் அதிகம் பயன் படுகிறது. வெள்ளி என்பது ஆபரணம் (கொலுசு, மோதிரம், விளக்கு போன்றவை), பாத்திரங்கள் தொழிற்சாலை பயன்பாடு ஆகியவற்றில் பயன்படுகிறது. வெள்ளி தொழிற் சாலைகளில் மிக அதிகமாகப் பயன்படுகிறது.

மஞ்சள் உலோகமான தங்கம் கிட்டத்தட்ட கரன்சிபோல் செயல்படுகிறது. இதை விற்று அல்லது அடமானம் வைத்து பணம் பெறுவது மிக எளிது. வெள்ளி அந்த அளவுக்கு இன்னும் மதிப்பான பொருளாக உயரவில்லை. தங்க அடமானக் கடனை அனைத்து வங்கிகளும் வழங்கிவரும் நிலையில் ஒன்றிரண்டு வங்கிகள் தான் வெள்ளிப் பொருள்களுக்கு அடமானக் கடன் வழங்குகின்றன. அதே சமயத்தில், கோல்டு இ.டி.எஃப் மற்றும் சில்வர் இ.டி.எஃப் இரண்டையும் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

கோல்டு இ.டி.எஃப் Vs சில்வர் இ.டி.எஃப் உங்களுக்கு ஏற்றது எது?

விலை அதிகரிப்பு

பொதுவாக, வெள்ளியைவிட தங்கம்தான் விலை வேகமாக உயர்ந்து வருவதாக நாம் நினைக்கிறோம். ஆனால், குறிப்பிட்ட சில காலத்தில் தங்கத்தைவிட வெள்ளியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. உதாரணமாக, 2008 முதல் 2011 வரையில் தங்கத்தின் விலை 166% அதிகரித்துள்ளது. ஆனால், இந்தக் கால கட்டத்தில் வெள்ளியின் விலை 448% உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு என்பது உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறைவு, போர் பதற்றம், பெருந்தொற்று பரவல் போன்ற நிச்சயமற்ற காலத்தில் இருக்கும். உலக அளவில் தங்கம் வெட்டி எடுப்பது மிகக் குறைவாக இருக்கிறது. தங்கம் வெட்டி எடுக்கும் சுரங்கங் களின் ஆழம் மிக அதிகமாக சென்றுகொண்டிருப்பதால், அதற்கான செலவு மிகவும் அதிக மாக இருக்கிறது. தங்கத்தின் விலைக்கு இணையாக செலவு செய்ய வேண்டியிருப்பதால், தங்கம் வெட்டி எடுப்பது குறைந்திருக்கிறது. இதனால் புதிய தங்கம் சந்தைக்கு வருவது குறைவாக இருக்கிறது. ஆனால், தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.

சில்வர் இ.டி.எஃப்

இந்தியாவைப் பொறுத்தவரை, டிஜிட்டல் தங்கம் என்கிறபோது டீமேட் வழியாக முதலீடு செய்யும் கோல்டு இ.டி.எஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக முதலீடு செய்யும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் (ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்) திட்டங்கள் உள்ளன. இதேபோல்தான், சில்வர் இ.டி.எஃப் மற்றும் சில்வர் சேவிங்ஸ் ஃபண்ட் (ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் சில்வர் ஃபண்டை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபண்ட் அறிமுகம் செய்ய, அடுத்து நிப்பான் இந்தியா மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.

தங்கத்தைப் பணவீக்க விகிதம் மற்றும் பங்குச் சந்தை இறக்கத்திலிருந்து முதலீட்டுக் கலவையின் வருமானத்தைப் பாதுகாக்கும் என்பார்கள். இப்போது இந்தப் பட்டியலில் வெள்ளியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கோல்டு இ.டி.எஃப் Vs சில்வர் இ.டி.எஃப் உங்களுக்கு ஏற்றது எது?

தங்கமா, வெள்ளியா?

தங்கத்தைப் போலவே, வெள்ளியையும் ஆபரணமாக வாங்குவதைவிட டிஜிட்டல் வடிவில் வாங்குவது லாபகரமாக இருக்கிறது. பழைய தங்க நகையை நகைக்கடையில் மாற்றும்போது அல்லது விற்கும் போது பழையது என்பதற்காக மதிப்பில் ஓரிரு சதவிகிதம் கழிப்பார்கள். இதுவே வெள்ளிப் பொருள்களுக்கு வேறு கடை களில் வாங்கியிருக்கும்பட்சத்தில் சுமார் 45%, அதே கடையில் வாங்கியிருக்கும்பட்சத்தில் 35% எனக் கழிக்கப்படும். எனவே, வெள்ளியைப் பொறுத்தவரை, நாணயம், கட்டியாக வாங்கினால் கழிவு குறைவாக இருக்கும். வெள்ளியை முதலீடாகப் பார்க்கும்பட்சத்தில் டிஜிட்டல் முறையில் வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும்.

2022 பிப்ரவரி 28 அன்று ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.5,148 ஆகவும், வெள்ளி ஒரு கிராம் விலை 69.90-ஆக இருந்தது. அதாவது, ஒரு கிராம் வெள்ளியின் விலையைப் போல் 73.65 மடங்காக ஒரு கிராம் தங்கத்தின் விலை இருக்கிறது. இந்த விகிதம் 2000 மே மாதத்தில் 55 மடங்காகவும் 2010 மே மாதத்தில் 65.4 ஆகவும் 2020 மே மாதத்தில் 105.8 ஆகவும் இருந்தது.

உலக வெள்ளி சர்வே (world silver survey) அறிக்கையின்படி, 50% வெள்ளி கனரகத் தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில் அதாவது, ஸ்மார்ட் போன், மாத்திரைகள், வாகன மின்சார கருவிகள், சோலார் பேனல்கள் உள்ளிட் டவை தயாரிப்பில் பயன்படுகிறது. தங்கத்தை எடுத்துக்கொண்டால், 80% ஆபரணத் தயாரிப்பில் பயன் படுகிறது. சிறிதளவு முதலீடாக வாங்கப்படுகிறது. தங்கத்தின் தொழிற்சாலை பயன்பாடு குறைவாக இருக்கிறது.

வெள்ளியானது தொழில் துறையில் மிக அதிகமாகப் பயன்படுவதால், பொருளாதார வளர்ச்சி குறையும் சிக்கல் ஏற்படும் காலத்தில், வெள்ளிக்கான தேவை குறைந்து அதன் விலை குறையக் கூடும். இந்தக் காலகட்டத்தில் நிச்சயமற்ற நிலை காணப்படு வதால், தங்கத்தின் விலை உயரக் கூடும்.

பொதுவாக, தங்கத்தின் விலை உயரும்போது கூடவே வெள்ளி யின் விலையும் உயரும் என்பார் கள். ஆனால், இது பொருளாதார வளர்ச்சி மேம்பட்டிருக்கும் காலத்தில்தான். பணவீக்க விகிதம் அதிகரிக்கும் காலத்தில் தங்கத்தை விட வெள்ளியின் விலை அதிக மாக உயர வாய்ப்புள்ளது.

மேலும், தேவை அதிகரித்து, அளிப்பு குறைவாக இருக்கும் காலத்தில் வெள்ளியின் விலை மிகவும் அதிகரிக்கும். கோவிட் 19 காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டது. அப்போது வெள்ளி உற்பத்தி குறைந்துபோனது. ஆனால், மருந்துப் பொருள்கள், ஸ்மார்ட் போன்கள் தேவை அதிகரித்ததால், வெள்ளியின் தேவையும் அதிகரித்தது. இதனால், 2020-ம் ஆண்டில் தங்கத்தின் விலை 28% அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலை 52% உயர்ந்தது.

உண்மையில், தங்கத்தைவிட வெள்ளியானது பணவீக்க விகித இழப்பைச் சரிக்கட்டுவதாக இருக்கிறது. பொதுவாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாற்றம் ஒரே திசையில் சென்றாலும், தங்கத்துடன் ஒப்பிடும்போது வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

தங்கம் என்பது உலக அளவில் அரசுகள், மத்திய வங்கிகள் ஆகியவற்றிடம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இதனால், தங்கத்தின் விலை நீண்ட காலத்துக்கு நிலையாக இருக்கிறது. ஆனால், வெள்ளி அப்படி அல்ல. அது வெவ்வேறு பொருள்களாக உருவாகி சென்றுவிடுகிறது. அதன் விலையானது தொழிற்சாலை தேவையைப் பொறுத்துதான் அமைகிறது.

கோல்டு இ.டி.எஃப் Vs சில்வர் இ.டி.எஃப் உங்களுக்கு ஏற்றது எது?

யாருக்கு எது ஏற்றது?

நிறுவனப் பங்குகள், பாண்டுகளின் வருமானப் போக்குக் கும் வெள்ளியின் விலைப்போக்குக்கும் இடையே குறைவான பொருத்தம்தான் இருக்கிறது. இதனால், முதலீட்டுக் கலவையைப் பரவலாக்க (Portfolio Diversify) வெள்ளி இ.டி.எஃப்பை பயன்படுத்தலாம். அதே சமயத்தில், தங்கம் அளவுக்கு இது வலிமையான பரவலாக்கமாக இருக்காது. தங்கத்தின் வருமானத்துக்கும் பங்குச் சந்தையின் வருமானத்துக்கும் இடையே ஏழாம் பொருத்தம் ஆகும். அதாவது, இவற்றின் விலைப்போக்கு பெரும்பாலும் வேறு வேறு திசையில்தான் இருக்கும்.

வெள்ளியின் விலை அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட் பட்டது என்பதால், அது டிரேடர்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது. நிலையற்ற காலத்தில் ஹெட்ஜ்ஜாக தங்கம் மற்றும் வெள்ளி இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் பங்குச் சந்தை முதலீட்டைப்போல் அதிக வருமானத்தைத் தருவதாக இல்லை. அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கோல்டு இ.டி.எஃப் ஏற்றதாக இருக்கிறது.

அதேநேரத்தில், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், இளைஞர்களுக்கு சில்வர் இ.டி.எஃப் சரியானதாக இருக்கிறது. தங்கமும் வெள்ளியும் சேர்ந்து ஒருவரின் முதலீட்டுக் கலவையில் 10% - 15% இருக்கலாம். இதில் தங்கம் 10%, வெள்ளி 5 சதவிகிதமாக இருப்பது நல்லது.