Published:Updated:

`சென்ற ஆண்டு 77.7 டன்; இந்த ஆண்டு 11 டன்!’ -தங்கம் இறக்குமதி வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

தங்கம்
தங்கம்

தங்க நகை விற்பனையை விரிவாக்கம் செய்வதற்காக, நகைக் கடை உரிமையாளர்கள், தங்க நகைகளை ஆன்லைனில் விற்பனை செய்யவும் ஆரம்பித்தார்கள். இருப்பினும், மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாதான் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இருந்து வருகிறது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் அனைத்து கடைகளும், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் தங்க நகைக் கடைகளும் மார்ச் மாதத்திலிருந்து திறக்கப்படாமல் இருக்கின்றன. விற்பனையை விரிவாக்கம் செய்வதற்காக, நகைக் கடை உரிமையாளர்கள், தங்க நகைகளை ஆன்லைனில் விற்பனை செய்யவும் ஆரம்பித்தார்கள். இருப்பினும், மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

தங்கம் விலை... ஏற்றம் எதுவரை..? - தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது, மக்களுக்கு என்றைக்குமே மோகம் அதிகம்தான் என்றாலும், வேலையிழப்பு, சம்பளம் குறைவு, ஊரடங்கினால் தொழில் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மக்களிடம் இன்று பணப்புழக்கம் குறைந்திருக்கிறது. அதனால், தங்க நாணயங்களை வாங்கவோ, ஆபரணத்தங்கத்தை வாங்கி பயன்படுத்தவோ மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தங்க நுகர்வானது குறைந்துள்ளதால், நகை வியாபாரிகள் சில மாதங்களாகவே தங்க இறக்குமதியை குறைத்துக் கொண்டார்கள்.

Gold
Gold

அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் தங்க இறக்குமதி 86 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2019-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 77.7 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 11 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. டாலர் மதிப்பில் கணக்கிட்டால் கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் 2.7 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், கடந்த ஜூன் மாதத்தில் 608.8 மில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

இதுவே கடந்த ஏப்ரல் மாதத்தில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 110.18 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த மாதமான மே மாதத்தில் 1.4 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த 2019-ம் ஆண்டின் மே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை விட 99 சதவிகிதம் குறைவாகும்.

தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருக்கும் அதே சமயம், தங்க இறக்குமதி தொடர்ந்து குறைந்து வருவது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

அடுத்த கட்டுரைக்கு