Published:Updated:

உச்சத்தில் இருந்து இறங்கிய தங்கம் விலை... இப்போது வாங்கலாமா?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

G O L D

உச்சத்தில் இருந்து இறங்கிய தங்கம் விலை... இப்போது வாங்கலாமா?

G O L D

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதக் கடைசி வாரத்தில் 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4,500-ஆக வர்த்தகமானது. தற்போது 2021-ம் ஆண்டிலும் அதே விலையிலேயே காணப்படுகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் 7-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் அதிகபட்சமாக ரூ.5,416 என அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது கிராம் ஒன்றுக்கு சுமார் ரூ.1,000 வரை குறைந்து காணப்படுகிற நிலையில், சராசரி முதலீட்டாளர் களிடையே மீண்டும் விலை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் காணப்படுகிறது. அதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றனவா என்று பார்ப்போம்.

ஷியாம் சுந்தர் 
கமாடிட்டி 
நிபுணர்
ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

அமெரிக்கப் பொருளாதாரம்...

அமெரிக்கப் பொருளாதாரத்தின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஆகியவை குறுகிய காலத்தில் மேம்பட்டு வருவதாகக் கருதுவதற்கு முகாந்திரங்கள் இருந்தாலும், வட்டி விகிதங்களை முன்பு திட்டமிட்டிருந்த காலத்துக்கு முன்பாகவே உயர்த்தப் பட வாய்ப்பிருக்கிறது என்கிற செய்திகள் உலா வந்தன. அதாவது, அடுத்த வருடக் கடைசியில் இதற்கான முயற்சிகளில் அமெரிக்க ஃபெடரல் ஈடுபடலாம் என்கிற கருத்து மேலோங்கியது. இதற்கு நேர்மாறாக 2023-ம் ஆண்டு வரையிலும் வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்பில்லை என்கிற கருத்தும் நிலவுகிறது. அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் மீதான வருமானம் அதிகரிப்பது சற்று தணிந்திருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை...

உலகளவில் அமெரிக்காவை அடுத்து, ஆசிய நாடுகளில் இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது கவலைக்குரிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது. ‘ரிஸ்க் அஸெட்’ என்று சொல்லப்படக்கூடிய பங்குச் சந்தைகளில் அவ்வப்போது சறுக்கல்கள் காண வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வின் முதல்கட்ட அலை முடிந்த நிலையில், பொருளாதாரம் மீண்டு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப் பட்டது. இது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரண மாக பணப் புழக்கம் அதிகரித்து, அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் சரி, அவற்றின் ஒரு பகுதி நமது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் சரி, முதலீடுகள் அதிகரித்ததின் காரணமாக பங்குச் சந்தைக் குறியீடுகள் புதிய உச்சத்தை எட்டின. இத்தகைய நிலையில், கொரோனா குறித்த தற்போதைய செய்திகள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. மேலும், நிலைத்த வருமானம் தரக்கூடிய டெபாசிட்டுகளின் மீதான வருமானம் குறைந்துகொண்டே வருவதால், அத்தகைய முதலீடு களிலிருந்து ஒரு பகுதி தங்கத்தை நோக்கி வரக்கூடும் என்ற கருத்துகளும் மேலோங்கி நிற்கின்றன.

தங்கம்
தங்கம்

கோல்டு இ.டி.எஃப் முதலீடுகளில் சரிவு மற்றும் மத்திய வங்கிகளின் பங்களிப்பு...

முடிவடைந்த நிதியாண்டில், இந்தியாவில் தங்கம் சார்ந்த பி.டி.எஃப் முதலீடுகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளன. கொரோனா தாக்கத்தால் பொருளா தாரப் பின்னடைவு ஏற்படலாம் என்கிற அச்சத்தால், முதலீட் டாளர்கள் சென்ற நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது, 2019-20-ம் நிதி யாண்டுடன் ஒப்பிடும்போது, 2020-21-ம் நிதியாண்டில் (சுமார் 328%) ரூ.6,918 கோடியாக அதிகரித்துள்ளது. 2019-20-ம் நிதியாண்டில் ரூ.1,613 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆண்டில், உலக அளவில் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் வெளியேறினாலும், அதை ஈடுகட்டும் விதமாக ஒரு சில நாடுகளின் மத்திய வங்கிகள் பங்களிப்பு மற்றும் விலை இறக்கம் கண்டுள்ளதால் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நுகர்வு அதிகரிக்கும் என்ற நம்பிக்கைகள் ஆகியவை முன்னெடுத்து நிற்கின்றன. சீனாவின் புது வருடக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அங்குள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் செய்த வியாபாரம் 2020-ம் ஆண்டில் சர்வதேச விலையை ஒப்பிடும்போது, தள்ளுபடி விலையில் வர்த்தகமானது, ஆனால், 2021-ம் ஆண்டில் சர்வதேச விலையைவிட அதிக விலையில் வர்த்தகமாகி வருவது (அதாவது பிரீமியத்தில்) குறிப்பிடத்தக்க செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

2021-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், ஒட்டுமொத்த அளவில் மத்திய வங்கிகள் 17 டன்கள் என்ற அளவுக்கு தங்கத்தை விற்பனை செய் திருந்தாலும், கஜகஸ்தான், உஸ்பெகிஸ் தான், கொலம்பியா மற்றும் இந்திய உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் 8.8 டன்கள் என்ற அளவுக்கு தங்கத்தில் முதலீடுகள் செய்துள்ளன. சென்ற வாரம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரி 63 டன்கள் தங்கத்தில் முதலீடு மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. வெவ்வேறு காலகட்டங்களில், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தின் மீதான முதலீடுகளை மேற்கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

தங்கம் நம்பிக்கை தரும் முதலீடா?

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, தங்கத்தை ஒரு மாற்று முதலீடாகப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. முதலீட்டாளர் கள் தங்களின் போர்ட் ஃபோலியோவில் குறைந்தது 10% முதலீடாக வைத்திருக்கலாம். கொரோனாவின் தாக்கம், அவ்வப்போது மாறுபட்ட வடிவில் பொருளாதரத்தை புரட்டி எடுத்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை யைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிச்சயமற்ற தன்மைதான், உலகப் பொருளாதாரத்துக்கும், அதனால் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் காட்டுகிற நிதானமான போக்குக்கும், அது சார்ந்த பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கும், அமெரிக்க டாலரின் ஏற்ற, இறக்கத்துக்கும் காரணமாக இருக்கின்றன.

கோவிட்19-க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படிருந்தாலும், அது முழுமையடைந்து, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி, அச்சம் நீக்கி, பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்ப வெகுகாலம் ஆகும் என்பதால், தங்கத்தை நம்பிக்கை தரும் முதலீடாகவே பார்க்கலாம்.

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக இறக்கம்!

தங்கத்தின் சர்வதேச விலையானது, ஏப்ரல் தொடக்கத்திலிருந்து பெரிய மாற்றம் ஏதுமில்லாமல், ஒரு டிராய் அவுன்ஸ் 1,700 முதல் 1,750 டாலர்களுக்குள்ளாகவே வர்த்தகம் நடைபெற்றாலும், இந்தியாவில், ஏப்ரல் முதல் இரண்டு வாரத்தில் கிராம் ஒன்றுக்கு சுமார் ரூ.2,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததுதான். கடந்த மார்ச் இறுதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.45 –ஆக இருந்தது, ஏப்ரல் மத்தியில் அதாவது, இரண்டு வாரத்துக்கு உள்ளாக ரூ.75.14-ஆக இறக்கமடைந்ததால், இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்தது. பங்குச் சந்தைகளில், அதிக ஏற்ற, இறக்கங்கள் காணும்போதெல்லாம், தங்கத்தின் விலையிலும் அதற்கேற்றவாறு மாறுதல்களைக் காண முடிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism