Published:Updated:

குறையும் தங்கம் விலை... இ.டி.எஃப்பில் முதலீ டு வெளியேற்றம் ஏன்?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம்

குறையும் தங்கம் விலை... இ.டி.எஃப்பில் முதலீ டு வெளியேற்றம் ஏன்?

தங்கம்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம் விலை குறைந்துவரும் இந்தச் சமயத்தில், கடந்த ஜூலை மாதத்தில் ரூ.61.5 கோடியை கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து வெளியில் எடுத்திருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். தங்கம் விலை குறையும் போது கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் அதிகமான முதலீடுகள் வருவதற்குப் பதிலாக, அதிக முதலீடு வெளியேறியிருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் ஆரம்பித்தது முதல் உயரத் தொடங்கிய தங்கம் விலை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,416-க்கு வர்த்தகமானது. இதனால், தங்கத்தில் நேரடியாக வாங்குவதற்குப் பதிலாக, கோல்டு இ.டி.எஃப் ஃபண்டு களில் அதிக அளவு முதலீடு செய்யத் தொடங்கினார்கள் முதலீட்டாளர்கள். டிசம்பர் 2020-லிருந்து ஜூன் 2021 வரை யிலான காலத்தில் கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் ரூ.3,537 கோடியை முதலீடு செய்தனர்.

குறையும் தங்கம் விலை... இ.டி.எஃப்பில் முதலீ டு வெளியேற்றம் ஏன்?

ஆனால், தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 8,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. உலக அளவில் பங்குச் சந்தை முன்னேற்றம் காணும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 80 டாலர் வரை குறைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் கோல்டு இ.டி.எஃப் மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ரூ.61.5 கோடி வெளியேறிய அதே சமயத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.22,584 கோடியையும், டெப்ட் ஃபண்டுகளில் ரூ.73,694 கோடி ரூபாயையும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். தங்கத்தின் விலைப்போக்கு சரிவில் இருக்கும் வரை, இந்த நிலை தொடரும் என்றே இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

தங்கம் வாங்கினால் லாபமா என்கிற வீடியோவைப் பார்க்க: https://youtu.be/Gz2aBKmZm4c