Published:Updated:

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை - காரணம் இதுதான்!

தங்கம் ( Image by Nawal Escape from Pixabay )

இன்றைய தங்கத்தின் விலை மேலும் 200 ரூபாய் குறைந்து சவரனுக்கு 37,720 ரூபாயும், கிராம் ஒன்றுக்கு 4,715 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை - காரணம் இதுதான்!

இன்றைய தங்கத்தின் விலை மேலும் 200 ரூபாய் குறைந்து சவரனுக்கு 37,720 ரூபாயும், கிராம் ஒன்றுக்கு 4,715 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Published:Updated:
தங்கம் ( Image by Nawal Escape from Pixabay )

தங்கத்தின் விலை தற்போது தினசரி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சில நாள்களில் உயர்ந்தும், சில நாள்களில் குறைந்தும் இருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்துள்ளது.

Gold coins (Representational Image)
Gold coins (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4,835 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 38,680 ரூபாய்க்கும், ஜூன் மாதம் 11, 12, 13-ம் தேதிகளில் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று தங்கத்தின் விலை குறைந்து கிராம் ஒன்றுக்கு 4,740 ரூபாய்க்கும், ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு நாளிலேயே தங்கத்தின் விலை 760 ரூபாய் குறைந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேற்றைய விலை இப்படி இருக்க, இன்றைய தங்கத்தின் விலை மேலும் 200 ரூபாய் குறைந்து சவரனுக்கு 37,720 ரூபாயும், கிராம் ஒன்றுக்கு 4,715 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

ஜெயந்திலால் சலானி
ஜெயந்திலால் சலானி

``திடீரென தங்கத்தின் விலை வீழ்ச்சியடைவதற்கு உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே வரும் பணவீக்கம் முக்கிய காரணமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மத்திய வங்கியில் தொழில்துறை, வர்த்தகம் மற்றும் பொருளாதார குறியீடுகள் குறித்த அறிவிப்புகள் பாதகமாக உள்ளதால் தங்கம் விலை வீழ்ச்சியடைந்திருக்கலாம்” என சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism