பிரீமியம் ஸ்டோரி

ஆகாஷ்

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதையொட்டி டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க, முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ரூ.100-க்குக்கூட தங்கம் வாங்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் பெருகியிருக்கின்றன.

முன்பெல்லாம் தங்கம் வாங்க வேண்டும் எனில், பவுன் கணக்கிலேயே வாங்க முடிந்தது. பிற்பாடு, ஒரு கிராம் அளவுக்கு வாங்கலாம் என்கிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறி யது. இப்போது ஆன்லைனில் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கம் வாங்கிச் சேர்க்க முடியும் என்பதால், ரூ.100-க்குக்கூட தங்கம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பெரிய தங்க நகை நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் டிஜிட்டல் மூலம் தங்கம் விற்க ஆக்மென்ட் நிறுவனத்து டனும், டாடாவின் தனிஷ்க் நிறுவனம் பி.சி. ஜுவல்லர் நிறுவனத்துடனும் கூட்டணி அமைத்துள்ளன. பேடிஎம், அமேசான் பே, போன் பே போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே டிஜிட்டல் முறையில் தங்கம் விற்று வருகின்றன.

பண்டிகைக் காலத்தில் ரூ.100-க்கும் வாங்கலாம் தங்கம்!

ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்குவது மிக எளிது என்றாலும், இது இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்பட வில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி, சில புரோக்கர்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் விற்கத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்குவதில் உள்ள ரிஸ்க்கை எதிர்கொள்ள விரும்பாதவர்கள், சாவரின் கோல்டு பாண்ட் திட்டத்திலோ, கோல்டு இ.டி.எஃப் திட்டத்திலோ முதலீடு செய்வதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு