Published:Updated:

கிரிப்டோகரன்சி வர்த்தகம்... 5 தங்க விதிமுறைகள்..!

கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
கிரிப்டோகரன்சி

வர்த்தகம்

கிரிப்டோகரன்சி வர்த்தகம்... 5 தங்க விதிமுறைகள்..!

வர்த்தகம்

Published:Updated:
கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
கிரிப்டோகரன்சி

கோவிட் காலத்தில் எல்லோரின் கவனத்தையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது கிரிப்டோ கரன்சி. இதில், இந்தியாவில் 10 கோடிக்கு மேலானவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். கிரிப்டோகரன்சி வர்த்தகம் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 2008-ல் அறிமுகம் ஆனது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் பின்பற்ற வேண்டிய ஐந்து தங்க விதி முறைகளை (Goldern Rules) இங்கே பார்ப்போம்.

எம்.சதீஷ் குமார்
நிறுவனர், http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

1. டாப் கரன்சிகளில் மட்டுமே முதலீடு...

கிரிப்டோகரன்சி என்று எடுத்துக்கொண்டால், இன்றைக்கு 2,500-க்கும் மேற்பட்ட வகைகள் இருக் கின்றன. இதில் முதல் வரிசையில் பிட்காயின், எத்ரியம் (Ethereum), எக்ஸ்.ஆர்.பி (XRP), டீதர் (Tether), கார்டெனொ (Cardano), ஸ்டெல்லர் (Stellar), யு.எஸ்.டி காயின், டோகோகாயின் (Dogecoin), செய்ன்லிங் (Chainlink) ஆகியவை உள்ளன.

இவற்றில் முதல் மூன்று இடங்களில் உள்ள கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய வேண்டும். அதிகம் வர்த்தகம் ஆகும் கிரிப்டோகரன்சி களில் மட்டுமே முதலீடு செய்வது எப்போதும் நல்லது. அண்மைக்காலத்தில் புதுப் புது கிரிப்டோகரன்சிகள் அறிமுகமாகிக்கொண்டிருக் கின்றன. இந்தப் புது கிரிப்டோ கரன்சிகளில் டிமாண்ட் மற்றும் சப்ளை சுத்தமாக கிடையாது. இது போன்ற கிரிப்டோகரன்சிகளில் போட்ட பணத்தை அவை இழப்பில் இருந்தாலும் விற்று பணமாக்க முடியாது.

2. முதலீட்டுத் தொகையில் 2% முதலீடு...

கிரிப்டோக்களின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டதாகும். லூனா (LUNA) என்கிற கிரிப்டோ கரன்சி கிட்டத்தட்ட 99% வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அந்த அளவுக்கு இழப்பை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பது மிக முக்கியம்.

மேலும், இதில் ஒருவரின் மொத்த முதலீட்டில் சுமார் 2% தொகையைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஒருவரின் மொத்த முதலீடு ரூ.10 லட்சம் எனில், அவர் ரூ.20,000 தான் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் ஒரே கிரிட்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூடாது. மேலும், ஒரே நேரத்திலும் முதலீடு செய்யக் கூடாது. முதலீட்டுத் தொகையைக் குறிப்பிட்ட காலத்தில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கிற முதலீட் டாளராக இருந்தால் உங்கள் மொத்த முதலீட்டில் அதிக பட்சம் 5% தொகையை முதலீடு செய்ய வேண்டும்.

கிரிப்டோகரன்சி வர்த்தகம்...
5 தங்க விதிமுறைகள்..!

3. புது கிரிப்டோகரன்சிகளில் முதலீட்டைத் தவிர்க்கவும்...

நிறைய புதிய கிரிப்டோ கரன்சிகள் தினமும் அறிமுக மாகி வருகின்றன. இவற்றின் மதிப்பு குறைவாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் பல கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு மிக அதிகமாக இருக்கின்றன. அவற்றின் மதிப்பு உயர்வது கடினம். புது கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு அதிகம் உயர்வதற்கு வாய்ப் பிருக்கிறது எனப் பலரும் சொல்லக்கூடும். அதை நம்பி முதலீடு செய்யக் கூடாது. நீங்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்து அதன் பிறகு, முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.

4. நீண்ட கால முதலீடு...

கிரிப்டோடோகரன்சி வர்த்தகம் என்பது குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்தைக் கொண்டது.முதல் இடத்தில் இருக்கும் பிட்காயின் மதிப்புகூட மிக இறக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 2021 நவம்பர் மாதத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 49 லட்சம் ரூபாயாக இருந்தது. அண்மையில் அதன் மதிப்பு ரூ.23 லட்சத்துக்கு இறங்கி இன்றைக்கு 14 லட்சம் ரூபாய் அளவுக்கு வர்த்தகம் ஆகிவருகிறது. எனவே, இந்த சொத்துப் பிரிவில் முதலீடு செய்பவர்கள் நீண்ட கால நோக்கத்துடன் இருப்பது நல்லது.

5. லாபத்தை வெளியே எடுங்கள்...

கிரிப்டோகரன்சி வர்த்தகம் மிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. எனவே, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஓரளவுக்கு நல்ல லாபம் இருக்கும்போது, லாபத்தை மட்டுமாவது வெளியே எடுக்கும் பழக்கத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது சிறிய சிறிய லாபம் சேர்ந்து ஆண்டு இறுதியில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதே போல், மதிப்பு மிகவும் இறங்கிக் காணப்பட்டால் கூடுதலாக முதலீடு செய்ய தயங்கக் கூடாது.

மேலே கூறப்பட்ட இந்த 5 தங்க விதிமுறைகளை பின்பற்றி கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் செய்தால் ஒருவர் லாபம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது. இந்த விதிமுறைகளை நீங்கள் கறாராகப் பின்பற்றுவதன்மூலம் நீங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் சம்பாதித்த மாதிரியும் இருக்கும். அதே சமயம், அதில் அதிக பணத்தைப் போட்டு, நஷ்டம் அடைவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கும். எதில் பணம் போடுவதாக இருந்தாலும், அதில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டால், என்றும் லாபம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை!