கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே செயலி மூலமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு எஃப்.டி என்கிற வைப்புநிதி வசதியை வழங்க இருக்கிறது. கூகுள் பே மூலம் நிலையான வைப்பு நிதிகளில் முதலீடு செய்ய ஃபின்டெக் சேதுவுடன் இணைந்துள்ளது,
ஆரம்ப நிலையில் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் திட்டங்களை மட்டும் அளிக்கிறது. இதில் ஓராண்டு கால முதலீட்டுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 6.35% ஆகும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் பயனர்கள், ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் ஆதார் அடிப்படையிலான கே. ஒய்.சி (KYC) விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லையென்றாலும், கூகுள் பே செயலியின் மூலமாக ஈக்விடாஸ் எஃப்.டி-ல் முதலீடு செய்யலாம் என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சம். ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைந்தவுடன், வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். எஃப்.டி முடியும்போது அதே வங்கி கணக்கு பணம் வந்து சேரும்.

கூகுள் பே-யின் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மட்டுமன்றி பிற வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் சேவைகளும் கூகுள் பே-க்கு வரலாம். இதேபோல பிற UPI ஆப்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையைத் தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வைப்பு நிதி 7-29 நாட்கள், 30-45 நாட்கள், 46-90 நாட்கள், 91-180 நாட்கள், 181-364 நாட்கள் மற்றும் 365 நாட்கள் உட்பட 3.5% முதல் 6.35% வட்டி விகிதங்களை கொண்டிருக்கிறது.