Election bannerElection banner
Published:Updated:

LIC ஐ.பி.ஓ வெளியீட்டில் பாலிசிதாரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு... அரசு சொல்வது என்ன?

LIC Chennai
LIC Chennai

ஒரு லட்சம் கோடி பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வெளியிடுகிறதென்றால், அதில் அதன் பாலிசிதாரர்களுக்கு 10% பங்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வருகிற 2021-22-ம் நிதி ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என கடந்த பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய பங்குகள் சந்தையில் வரும்போது, பாலிசிதாரர்களுக்கு அதில் 10% இடஒதுக்கீடு கிடைக்கும் என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

இதன்மூலம் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, ஐ.பி.ஓ வெளியீட்டின்போது பங்கு வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதாவது, உங்களிடம் எல்.ஐ.சி பாலிசி இருந்தால், அதன் ஐ.பி.ஓ வெளியீட்டில் நீங்கள் பங்கேற்கலாம். அதாவது, அந்த பங்குகளை வாங்க, மற்ற முதலீட்டாளர்களைவிட உங்களுக்கு ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு லட்சம் கோடி பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வெளியிடுகிறது என்றால், அதில் அதன் பாலிசிதாரர்களுக்கு 10% ஒதுக்கீட்டில் பங்குகள் கிடைக்கும்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியான புதிதில், அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு, அந்த நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்தும் பாலிசிதாரர்களிடம் இருந்தும் மிகப் பெரிய எதிர்ப்ப்பு கிளம்பியது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்படியிருக்கும்போது, அவர்களின் வாயை அடைக்க, புதிய பங்கு வெளியீட்டில் 10% இட ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் முன்வந்திருக்கிறதா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

எல்.ஐ.சி-யின் 64-வது பிறந்தநாள், பங்குகளை விற்கப்போகும் அரசு... என்னாகும் எல்.ஐ.சியின் எதிர்காலம்?

2021-22 -ம் நிதி ஆண்டில் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், மொத்தம் 1.75 லட்சம் கோடி ரூபாயை திரட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான், இந்த எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியிடப்படுகிறது. ஆனால், நடப்பு 2020-2021-ம் நிதி ஆண்டில் 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியை, பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 32,000 கோடி ரூபாயை மட்டும் திரட்டியுள்ளதாக பட்ஜெட்டில் மத்திய அரசு கணக்கு காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு