
மியூச்சுவல் ஃபண்ட்
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரூ.38,21,816 கோடியாக இருந்தது. இது 2022 டிசம்பரில் ரூ.40,76,170 கோடி யாக அதிகரித்துள்ளது. அதாவது, ஓராண்டுக் காலத் தில் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.2,54,354 கோடி அதிகரித்து உள்ளது. இது சுமார் 6.6% வளர்ச்சி ஆகும். மேலும், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய் திருக்கும் சிறு முதலீட்டாளர் களின் எண்ணிக்கை 11.18 கோடியாக உயர்ந்துள்ளது.

சிறிய நிறுவனங்கள் அமோக வளர்ச்சி...
கடந்த 2022-ம் ஆண்டில் சிறிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில அமோக வளர்ச்சி பெற்றுள்ளன. இதற்கு முக்கியமான காரணம், சிறிய நிறுவனங் களின் ஃபண்ட் திட்டங்கள் தந்த கணிசமான வருமானம் ஆகும். இதனால் இந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது முன்பைவிட மிகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை 6.6% வளர்ச்சி கண்டி ருக்கும் நிலையில், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட், கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட், பராக் பரிக் மியூச்சுவல் ஃபண்ட், குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட், பிஜிம் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங் களின் நிர்வகிக்கும் தொகை வளர்ச்சி 15 சதவிகிதம் முதல் 220 சதவிகிதமாக உள்ளது.

விழிப்புணர்வு உயர்வு...
எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பாரத் பாண்ட் இ.டி.எஃப் என்கிற கடன் சந்தை சார்ந்த எக்ஸ் சேஞ்ச் டிரேட் ஃபண்ட் மூலம் அதிக எண்ணிக்கை யிலான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சில பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளும் கடந்த 2022-ம் ஆண்டில் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைத் தந்துள்ளன.
கொரோனா பாதிப்புக்குப் பிறகு பராக் பரிக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிஜிம் மியூச்சுவல் ஃபண்ட் நிறு வனம், இணை நிறுவனமாக செயல்பட்ட டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தை நீக்கிய பிறகு, புதிய குழுவுடன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.

மிக அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள்...
மிகக் குறைவான நிர்வகிக்கும் தொகையைக் கொண்ட குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கடந்த 2022-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடைந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன.
லார்ஜ் அண்ட் மிட்கேப் பிரிவைச் சேர்ந்த மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20% வருமானம் தந்திருக்கிறது. இதுவே ஐந்தாண்டுக் காலத்தில் 13.5% வருமானம் தந்துள்ளது. லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட் பிரிவு ஐந்தாண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 9.5% மட்டுமே வருமானம் தந்திருக்கிறது.
பராக் பரிக் ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 22% வருமானம் தந்திருக்கிறது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றிருந்த சர்வதேச நிறுவனப் பங்குகள் சரியாகச் செயல்படாத நிலை யிலும் இந்த ஃபண்ட் நல்ல வருமானத்தைத் தந்திருப்பது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் 15 சதவிகிதமாகதான் இருக்கிறது.
குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முக்கியமான ஃபண்ட் குவான்ட் ஆக்டிவ் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்ட் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் 37% வருமானம் தந்திருக்கிறது. இதன் ஃபண்ட் பிரிவு சராசரி வருமானம் இதே காலக் கட்டத் தில் 17 சதவிகிதமாக இருக்கிறது.
ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருவதால், இன்னும் அதிகமான முதலீட்டாளர்களைப் பெற நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன!