Published:Updated:

ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட்... அதிக வருமானத்துக்கு கைகொடுக்குமா..?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட்... அதிக வருமானத்துக்கு கைகொடுக்குமா..?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

சேமிப்பு எனில், வெறும் வங்கி, போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு, நிலம், வீடு என்று இருந்த நிலை மாறி, இன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கவர்ன்மென்ட் பாண்ட், கார்ப்பரேட் பாண்ட் என முதலீடுகள் பரவலாகி வருகின்றன.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

இவையெல்லாம் போதாது என்கிற மாதிரி புதிய முதலீடுகளைத் தேட, அதற்கொரு களமாக உருவாகி இருக்கிறது ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Alternative Investments) என்னும் மாற்று முதலீடுகள்.

சிறிய அளவில் தோன்றிய இந்த முதலீடுகள் மார்ச் 2021-ல் ரூ.2 லட்சம் கோடியை எட்டின. மே 2022 வரை 900 ஆல்டர்நேட்டிவ் இன் வெஸ்ட்மென்ட் பிளாட்ஃபார்ம் கம்பெனிகள், செபியில் (SEBI) தங்களை ரெஜிஸ்டர் செய் துள்ளன. இனி வருடம்தோறும் இவை சுமார் 25% வளர்ச்சி பெறும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், மற்ற முதலீடுகள் தரும் வருமானம் 5-10% எனில், இந்த ஆல்டர்நேட்டிவ் இன் வெஸ்ட்மென்ட்ஸ் தரும் வருமானம் 12 – 25 சதவிகிதத்துக்கும் அதிகம் (வரிக்குப் பின்).

ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட்... அதிக வருமானத்துக்கு கைகொடுக்குமா..?

ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனிகள்...

இதுவரை பெரும் பணக்காரர்களுக்கும், வங்கி போன்ற நிறுவனங்களுக்கும் மட்டுமே கிடைத்த வாய்ப்புகள் இன்று சிறு முதலீட் டாளர்களுக்கும் கிடைக்க இன்வெஸ்ட்மென்ட் பிளாட்ஃபார்ம் நடத்தும் சில ஃபின்டெக் கம்பெனிகள் உதவுகின்றன. இந்த வலை தளங்கள் சிறு முதலீட்டாளர்களுக்கும், பணம் தேவைப்படுவோருக்கும் நடுவே பாலமாக விளங்குகின்றன. பணம் தேவைப்படுவோரின் பின்புலம், நம்பகத்தன்மை, வருமானம், கிரெடிட் ஹிஸ்டரி, லைஃப்ஸ்டைல் போன்ற வற்றை சோஷியல் மீடியா போன்ற நூதன வழிகளில் ஆராய்ந்து தெரிவிப்பதுடன், சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டிய முறை, தொகை, வட்டி விகிதம், காலஅளவு போன்றவற்றையும் நிர்ணயம் செய்கின்றன. இதற்காக ஒரு சிறு அளவு கமிஷனையும் நுகர்வோரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன.

இந்த ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட் மென்ட்டில் பல வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஃப்ராக்‌ஷனல் (Fractional) ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் என்றாலே அதிக முதலீடு தேவைப்படும் ஒன்று. அதிலும் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் முதலீடுகள் எனில், பணம் கோடிகளில் தேவைப்படும். ஆனால், மைர் கேப்பிடல் போன்ற நிறுவனங்கள் இந்த முதலீடுகளை சின்னச் சின்ன கூறுகளாகப் பிரித்து சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் தருகின்றன.

இந்த வலைதளங்களில் பல முதலீடுகள் காணக் கிடைக்கும். ஒரு முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் ஆபீஸ் கட்டடத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனில், அதன் மதிப்பு ரூ.50 கோடி - ரூ.60 கோடி தேவைப்படும். இதில் ஒருவர் முதலீடு செய்ய விரும்பினால் ரூ.10 லட்சம் முதல் ரு.30 லட்சம் வரை தர வேண்டியிருக்கும். அங்கு வாடகைக்கு எடுத்திருக் கும் பெரும் நிறுவனங்களின் பெயர்கள், அவர்களுடனான ஒப்பந்தங்கள், முதலீடு செய்ய வேண்டிய தொகை, காலஅளவு போன்ற விவரங்கள் வலை தளத்தில் தெரிவிக்கப்படும். தேவையான அளவு முதலீட் டாளர்கள் சேர்ந்த பின் ஓர் அமைப்பை (Special Purpose Vehicle) உருவாக்கி அதன் பெயரில் கட்டடத்தில் முதலீடு செய்யப்படும். அதன் பின் அந்தக் கட்டடத்தை நிர்வகிக் கும் பொறுப்பு ஒரு சொத்து நிர்வாகியிடம் தரப்படுகிறது. வரக்கூடிய வாடகையில் வரிகள், செலவுகள் போக மீதியான தொகை முதலீட்டாளர்களுக்கு மாதம்தோறும் பிரித்துத் தரப்படுகிறது. இந்த வருமானம் வருடத்துக்கு சுமார் 8 - 10 சதவிகிதமாக உள்ளது.

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட் மென்ட் டிரஸ்ட் (REIT)போலவே, இது உருவாக்கப்பட்டு இருந்தாலும், இதில் ரெரா, செபி போன்றவற்றின் மேற் பார்வை இல்லாததால் ரிஸ்க் அதிகம். மொத்த முதலீடும் ஒரே பெரிய சொத்தில் செய்யப் படுவதால், வாடகைதாரர் வெளியேறினாலோ, கட்டடத் துக்கு சேதாரம் ஏற்பட்டாலோ வருமானம் பாதிக்கப்படும்.

இதே விதத்தில் கிடங்குகள், லாரிகள் போன்ற சொத்து களில் முதலீடு செய்வதை லீஸ் மற்றும் இன்வென்டரி ஃபைனான்ஸிங் என்கிறார்கள். க்ரிப் இன்வெஸ்ட் போன்ற நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு உள்ளன.

ஆல்டர்நேட்டிவ் கடன் முதலீடுகள்...

கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் அதிக வருமானம் தரும் கார்ப்பரேட் பாண்டு களை சீனியர் செக்யூர்ட் பாண்டுகள், சப் ஆர்டினேடட் கடன், வென்ச்சர் கடன் போன்ற வகைகளாகப் பிரித்து சிறுகூறுகளாக முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வின்ட் வெல்த் போன்ற நிறுவனங்கள் இன்று மக்களுக்கு நன்கு அறிமுக மாகியுள்ளன. இவர்கள் தரும் சில பாண்டுகளில் வட்டி வருமானம் வருடத்துக்கு 11.50% வரை கிடைக்கிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வட்டியுடன் 33% அசலும் திருப்பித் தரப்படும்.

இதில் பங்கு கொள்ளும் பல கம்பெனிகளின் பாண்டு கள் மிகக் குறைவான தரக் குறியீடு (Credit Rating) கொண் டிருப்பது கண்கூடு. AA- விடக் குறைந்த தரக் குறியீடு கொண்ட எந்த பாண்டும் கையை சுட்டுவிடக் கூடியவை என்பதை டி.ஹெச்.எஃப்.எல்., யெஸ் பேங்க் போன்ற நிறுவனங்கள் வெளியிட்ட பாண்டுகளின் வீழ்ச்சி உணர்த்தியுள்ளது.

ஆல்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட்... அதிக வருமானத்துக்கு கைகொடுக்குமா..?

இன்வாய்ஸ் டிஸ்கவுன்டிங்...

கோடிக்கணக்கான பெறுமானமுள்ள பொருளை விற்ற ஒருவருக்கு பணம் உடனே வராது. பொருள் சென்று சேர்ந்து, தரம் உறுதிப் படுத்தப்பட்டபின்பே பணம் வரும். இதற்கு ஒரு சில மாதங்கள் ஆகும். ஆனால், மேற்கொண்டு வியாபாரம் செய்ய பணம் தேவைப்படும் நிலையில் அவர் அந்த பில்லை, வங்கி போன்ற நிறுவனங்களில் தந்து சற்றுக் குறைவான தொகையைப் பெற்றுக்கொள்வார்; பொருளை வாங்கிய கம்பெனி குறித்த காலத்தில் அந்த பில் தொகையை வங்கிக்குத் தரும். இது காலங்காலமாக வங்கிகளில் நடந்துவரும் விஷயம். இதையும் கூறு போட்டு சிறு முதலீட்டாளர் களுக்கு ஜிராஃப், ட்ரேட்க்ரெட், க்ரெடெக்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை. கால அளவு 30 முதல் 90 நாட்கள். 11 முதல் 15% வரை வருமானம் கிடைக்கலாம்.

ஆனால், குறித்த காலத்தில் பணம் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொருளின் தரம் குறித்து சச்சரவு எழுந்தால், குறைவான தொகை மட்டுமே கிடைக்கும். நினைத்தமாத்திரத்தில் வெளியேற முடியாது.

பி-டு-பி லெண்டிங்

இந்தக் காலத்து இளைஞர்களின் டார்லிங்காக விளங்கும் இந்த முதலீட்டு வகையில் ஒரு தனிநபர் இன்னொரு தனிநபருக்குக் கடன் தருவதாகும். ஃபேர்சென்ட், லெண்ட் பாக்ஸ், அப்ஸ்டார்ட் போன்ற வலைதளங்கள் மூலம் கடன் தருகிறார். பணம் தேவைப்படுவோரின் ரிஸ்க் புரஃபைலைப் பொறுத்து 12-35% வரை விதவிதமான வட்டி விகிதங்கள் உள்ளன. காலஅளவு மூன்று மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை. இங்கு ஒருவர் இன்னொரு வருக்கோ, ஒருவரே பலருக்கோ கடன் தரலாம். இங்கு கிடைக்கும் வட்டி விகிதங்கள் வங்கி வட்டி விகிதத்தைவிட அதிகம் என்பதால், இத்தளங் களில் கடன் தர பல முதலீட்டாளர்கள் முன் வருகிறார்கள்.

ஆனால், அடமானமாக எதுவும் இங்கு தரப்படுவ தில்லை என்பதால், முதலீட்டாளரின் பணத் துக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஒருவர் கடனைத் திருப்பித் தராமல் போனால், அந்த வலைதளம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர, முதலீட்டாளர் முதலீடு செய்த பணத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இது போன்ற ஆல்டர்நேட்டிவ் முதலீடுகளில் உத்தரவாதம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. சற்று அதிக வருமானத்துக்காக ரிஸ்க் எடுக்க எண்ணு பவர்கள் தங்கள் முதலீட்டில் 5%-க்கு மிகாமல் ஆல்டர்நேட்டிவ் முதலீடுகளைச் செய்வது நல்லது!