Published:Updated:

ஆப் டிரேடிங்... யாருக்கு ஏற்றதாக இருக்கும்?

ஆப் டிரேடிங்
பிரீமியம் ஸ்டோரி
ஆப் டிரேடிங்

ஆப் டிரேடிங்

ஆப் டிரேடிங்... யாருக்கு ஏற்றதாக இருக்கும்?

ஆப் டிரேடிங்

Published:Updated:
ஆப் டிரேடிங்
பிரீமியம் ஸ்டோரி
ஆப் டிரேடிங்

உலகம் எந்த அளவுக்கு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறதோ, மக்களும் தங்களை மாற்றிக்கொள்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். முன்பெல்லாம் வங்கிச் சேமிப்பு, தங்கம் என்று மட்டுமே யோசித் தவர்கள் இன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கமாடிட்டி என்று முன்னேறியிருக் கிறார்கள். இப்போது அடுத்தகட்டமாகத் தாங்களே நேரடியாகப் பங்குகளை வாங்குவது, விற்பது என்கிற அளவுக்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்த முக்கியமான வளர்ச்சிக்குக் காரணம், டிஜிட்டல் யுகத்தின் வளர்ச்சியே. ஒரு காலத்தில் பேப்பர் வடிவில் பங்குகள் வர்த்தகம் ஆகின. இன்று விரல்நுனியில் மொபைலில் இருந்த இடத்திலிருந்தே பங்குகளை வாங்கலாம், விற்கலாம் என்கிற அளவுக்குத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முதலீட்டாளர்களுக்குச் சாதக மாக மாறியுள்ளது.

அதே சமயம், புதிது புதிதாக வரும் தொழில்நுட்பங்களும், புதிய நிறுவனங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும், அவற்றின் நன்மை, தீமைகள் என்னென்ன, யாருக்கு எது சரியானது என்ற தெளிவு இல்லாமல் போனால் சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த நிலையில், ஆப் டிரேடிங் செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் என்னென்ன விஷயங் களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற கேள்வியைப் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். அவர் மிகத் தெளிவாக விஷயங்களை விளக்கிச் சொன்னார்.

ஆப் டிரேடிங்... யாருக்கு ஏற்றதாக இருக்கும்?

ஆப் டிரேடிங்க்கைத் தேர்வு செய்யும் புதிய முதலீட்டாளர்கள்...

“மொபைல் பயன்பாடு அதிகரித்துவிட்டதன் விளைவாக எல்லா நிறுவனங்களுமே அதிலும் தங்களின் சேவை இருக்க வேண்டும் என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இதன் விளைவாக, டிரேடிங் சேவை தரும் மொபைல் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் முதலீட்டாளர்கள் டீமேட் கணக்குத் தொடங்குவதிலிருந்து, பங்குகளை வாங்கி, விற்பது வரை ஒவ்வொன்றுக்கும் தரகு நிறுவனங்களை அணுக வேண்டியிருந்தது. ஆனால், இப்போது கையிலிருக்கும் மொபைல் மூலமாகவே அனைத்தையும் செய்துவிடும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டன. இதில் பிரச்னை என்ன எனில், யாருக்கு எது பொருத்தமானது என்பது தெரியாமல் இருப்பதுதான்.

உதாரணமாக, மொபைல் பேங்கிங் வசதி மிகவும் எளிமை யானதுதான். ஆனால், மிகவும் வயதான மூத்த குடிமக்களுக்கு மொபைல் பயன்பாடு பற்றிப் போதிய தெளிவு இல்லாத பட்சத்தில் மொபைல் பேங்கிங் அவர்களுக்குச் சரியாக இருக்குமா என்று கேள்வி எழும். இன்றும் பலர் வங்கிகளில் மணிக் கணக்கில் காத்திருந்துதான் தங்களின் சேவையைப் பெறு கிறார்கள். அதேபோலதான் பங்கு வர்த்தகத்தில் ஏற்கெனவே அனுபவமுள்ள நபர்கள், எப்படி பங்குகளை வாங்குவது, விற்பது, பணத்தை எப்படி டிரேடிங் அக்கவுன்ட்டுக்கு மாற்றுவது, பே அவுட் நடைமுறைகள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள், டிரேடிங் ஆப் மூலமாக முதலீடு களை மேற்கொள்ளலாம்.

ஆனால், இப்போது சிக்கல் என்னவெனில், மொபைல் டிரேடிங் ஆப்களைப் பயன் படுத்தி பங்கு முதலீடுகளை மேற்கொள்ளும் பெரும்பாலா னோர் யார் என்று பார்த்தால், முதல்முறையாக, புதிதாக பங்குச் சந்தைக்குள் முதலீடு செய்ய வந்திருப்பவர்கள். பங்குச் சந்தை குறித்த எந்த அனுபவமும் இல்லாமல் புதிதாக வருபவர்கள், எளிமையாக இருக்கிறது என்ப தற்காகவும், தரகுக் கட்டணம் குறைவாக அல்லது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது என்பதற் காகவும் ஆப் மூலம் டிரேடிங் செய்ய நினைக்கிறார்கள்.

லட்சக்கணக்கான கோடி களில் பணம் புரளும் பங்குச் சந்தையில் வர்த்தகச் சேவைகளை இலவசமாக வழங்குகிறார்கள் எனில், நாளைக்கு ஏதேனும் பிரச்னை வந்தால், அதற்கான தீர்வு என்ன என்பது குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

நன்கு தெரிந்து வர்த்தகம் செய்வது...

அதற்காக ஆப் மூலமாக வர்த்தகம் செய்யவே கூடாது என்று அர்த்தமில்லை. முதலில் பங்கு வர்த்தகத்தில் பங்குகளை வாங்கி விற்பது, பணப் பரிமாற்ற நடைமுறைகள் உள்ளிட்ட சில அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தரகு நிறுவனங்கள் மூலம் சில காலம் வர்த்தகம் மேற் கொண்டுவிட்டு, பின்னர் நீங்களாகவே ஆப் மூலமாக வர்த்தகம் மேற்கொள்ளலாம். தரகு நிறுவனங்களுக்குத் தரும் குறைந்தபட்ச கட்டணத்தை மிச்சப்படுத்துவதற்காக அனுபவ மில்லாமல் ஆப் மூலமாக வர்த்தகம் செய்து பெரிய அளவில் இழப்புகளைச் சந்திக்கும் நிலைக்கு யாரும் ஆளாகக்கூடாது.

சிக்கல் வந்தால்...

இந்தச் செயலிகள் மூலமாக வர்த்தகம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு நீங்கள் யாரையும் நேரடியாகக் கேட்க முடியாது. வாடிக்கையாளர் சேவை மையத் தைத் தொடர்புகொண்டுதான் பேச வேண்டும். வாடிக்கை யாளர்கள் சேவை மைய அதிகாரி போன் எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியே எடுத்தாலும் அவருக்கு உங்களுடைய சிக்கலைப் புரிய வைப்பதும் சவால்தான்.

ஆனால், நேரடித் தரகு நிறுவ னங்கள் மூலமாகவோ, பங்குத் தரகு சேவைகள் வழங்கும் தனி நபர்கள் மூலமாகவோ வர்த்தகம் மேற்கொள்ளும்போது சிக்கல்கள் வந்தால் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி சிக்கலைத் தீர்க்கலாம்.

ஆப் டிரேடிங்... யாருக்கு ஏற்றதாக இருக்கும்?

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

அதே சமயம் ஆப் மூலமாக வர்த்தகம் செய்யும் முன், நீங்கள் பயன்படுத்தும் ஆப், பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணைய மான செபியிடம் பதிவு செய்துள்ளதா என்று பாருங்கள். என்.எஸ்.இ, பி.எஸ்.இ பதிவு எண்களைச் சரிபாருங்கள்.

முடிந்தவரை பல ஆண்டு அனுபவமுள்ள தரகு நிறுவனங்களின் மொபைல் செயலிகளைத் தேர்வு செய்யலாம். இப்போது புதிதாக வரும் டிரேடிங் செயலிகள் பெரும்பாலும் செயலி மூலமாக மட்டுமே சேவையை வழங்கி வருகின்றன. இவற்றில் வர்த்தகம் செய்ய விரும்பினால், ஆரம்பத்தில் குறைவான தொகையில் வர்த்தகம் செய்து பாருங்கள். பே அவுட் முடிந்து கணக்குக்கு பணம் வந்து சேர எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்று பாருங்கள்.

என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய விரும்பினார். ஆனால், அவர் ஆப் மூலம் பங்கை விற்று, அந்தப் பணம் வந்தபின் எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய நினைக்க, ஐ.பி.ஓ முடியும் கடைசி நாள் வரை பணம் வரவே இல்லை. இப்படியும் பல சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டி வரலாம். எனவே, எல்லாவற்றையும் கவனித்து செயல்பட வேண்டும். தவிர, இந்தச் செயலிகள் மூலமாகப் பரிந்துரை செய்யப்படும் பங்குகளை வாங்கும்போதும் தெளிவாக முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.

ஆக, பங்குச் சந்தை முன்அனுபவம் இல்லாதவர்கள், சிறு முதலீட்டாளர்கள் ஆப் மூலமாக வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்பது தெளிவாகத் தெரிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism