Published:Updated:

அட்சய திரிதியை... தங்கம் வாங்க தகதக டிப்ஸ்!

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம்

அட்சய திரிதியை... தங்கம் வாங்க தகதக டிப்ஸ்!

தங்கம்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம் வாங்குவதற்கென்றே இருக்கும் ஒரு திருவிழா என்றால், அது அட்சய திரிதியைதான். மே 3-ம் தேதி, அட்சய திரிதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் எனப் பலரும் நம்புகிறார்கள். அட்சய திரிதியை நெருங்கி வரும் இந்த நேரத்தில், தங்கம் விலை கடந்த 10 நாள்களாகக் குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது. இந்த நிலையில் தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,504 குறைந்துள்ளது.

அட்சய திரிதியை அன்று பலரும் தங்கம் வாங்குவார்கள். அப்படி வாங்கும்போது என்னென்ன விஷயங்களைப் பார்த்து வாங்க வேண்டும் என்று பார்ப்போம்.

அட்சய திரிதியை... தங்கம் வாங்க தகதக டிப்ஸ்!

அடிப்படையே ஹால்மார்க்தான்!

`ஹால்மார்க்’ முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும். 22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் ஆபரணத்தில், 7.328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 0.672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற் காகச் செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்’ எனப்படும் தங்கத்துக்குத் தரும் பணத்தையே கொடுத்து ஏமாறுகிறார்கள் சிலர். இந்த விஷயத்தில் இனி ஜாக்கிரதையாக இருங்கள். சமீபத்தில் இந்திய அரசாங்கம் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்கியுள்ளது. ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வாங்கவே வேண்டாம்!

எடையில் ஏமாற்றம்!

தங்க நகைகள் வாங்கும்போது நாம் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், எடை போடும்போது நாம் ஏமாற வாய்ப்பு உண்டு. அதாவடு, தங்க நகையை எடை போடும்போது, 6.78 கிராம் எடை இருந்தால், அதை ரவுண்டாக 7 கிராம் என்று கணக்கிடுவார் கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். பல கடைகளில் மில்லி கிராம் தங்கம் அளவில் வாடிக்கை யாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதனால் ஒருமுறைக்கு நான்குமுறை எடையைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.

கண்டுபிடிக்கும் வழிகள்!

நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். உதாரணமாக, தங்கத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் எண் 958 என்று இருந்தால், அது 23 காரட் தங்கம் என்று அர்த்தம். அதுவே 916 எனில், 22 காரட் தங்கம், 875 எனில், 21 காரட் தங்கம் என்று அர்த்தம்.

தங்கத்தின் மதிப்பீடும், ஹால் மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப் பிட்டிருக்க வேண்டும். உதாரணமாக, `A’ என இருந்தால், அந்தத் தங்கம் 2000-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம். `B’ - 2001, ‘C’ - 2002, ‘D’ - 2003, ‘E’ - 2004, ‘F’ - 2005, ‘G’ - 2006, ‘H’ - 2007, ‘J’-2008. இதுபோல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளலாம். ‘X’ என இருந்தால் 2022-ம் ஆண்டு தயாரிக்கப் பட்ட தங்கம் என்று அர்த்தம். மேலும், நகை வியாபாரிக்குரிய அடையாள குறியீடும் இருக்க வேண்டும்.

எக்ஸ்.ஆர்.எஃப் மெஷின்!

தங்கத்தின் தன்மையை ஆராய பல்வேறு வழி முறைகளைப் பின்பற்று கின்றனர். அதில் ஒன்று, எக்ஸ்.ஆர்.எஃப் (XRF: x-ray-fluorescence). இதன் மூலமாக ஆபரணத்தில் எவ்வளவு சதவிகிதம் தங்கம், காப்பர், சில்வர் உள்ளது என்பது போன்ற அனைத்துத் தகவல்களும் துல்லியமாகக் கிடைக்கும். பெரிய கடைகளில் இந்த மெஷின்கள் உள்ளன. ஆனால், இது மக்களுக்குத் தெரிவதில்லை. நீங்கள் வாங்கும் தங்கத்தை எக்ஸ்.ஆர்.எஃப் மெஷினில் வைத்துப் பரிசோதித்த பிறகு வாங்குவது நல்லது.

புகார் செய்யுங்கள்!

தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ ஏற்பட்டால், இந்தியத் தர நிர்ணய ஆணையத்திடம் meenu@bis.org.in என்ற இ-மெயில் முகவரியில் புகார் செய்யலாம். இந்தப் புகார் மீது நடவடிக்கை இல்லை எனில், உங்களுக்கு அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

ஆக, இந்த அட்சய திரிதியை அன்று இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து தங்கம் வாங்குங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism