Published:Updated:

பிட்காயின்... நம்பி பணத்தைப் போடலாமா? நாணயம் விகடன் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்

எஸ்.ராமச்சந்திரன், மெய்யா நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ராமச்சந்திரன், மெய்யா நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிட்காயின்... நம்பி பணத்தைப் போடலாமா? நாணயம் விகடன் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published:Updated:
எஸ்.ராமச்சந்திரன், மெய்யா நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ராமச்சந்திரன், மெய்யா நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்

ஆகாஷ்

இன்றைய இளைஞர்கள் அதிகம் கவனிக்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் யாரெல்லாம் பணம் போடலாம், பணம் போடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைக் கடந்த 29-ம் தேதி அன்று நாணயம் விகடனும், ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சும் இணைந்து நடத்தின.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய இன்ஃபோசிஸ் நாலேஜ் சென்டரின் மூத்த ஆலோசனை அதிகாரி எஸ்.ராமச்சந்திரன், ‘‘பிட்காயினின் மதிப்பை அளவிட முடியாது. அதன் விலையை வைத்து மட்டுமே அதில் வர்த்தகம் செய்யும் முடிவை எடுக்க முடியும்’’ என்றார்.

எஸ்.ராமச்சந்திரன், மெய்யா நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்
எஸ்.ராமச்சந்திரன், மெய்யா நாகப்பன், ஜி.அர்ஜுன் விஜய்

அடுத்து பேசிய நிதிஷ் தேசாய் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் டாக்ஸ் மற்றும் ஸ்பெஷல் ஃபைனான்ஸ் பிரிவின் தலைவர் மெய்யா நாகப்பன், ‘‘பிட்காயின் வர்த்தகம் குறித்து தெளிவான விதிமுறை எதுவும் இல்லை. இது குறித்த புதிய விதிமுறைகள் எப்படி வரும் என்று தெரியாது. இதை வர்த்தகம் செய் பவர்களை வரித்துறை இப்போது கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது நல்லது’’ என்றார்.

இறுதியாக பேசிய ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சின் இணை நிறுவனரான அர்ஜுன் விஜய், ‘‘பிட்காயினை நீர்க்குமிழியுடன் (Bubble) ஒப்பிடுகிறார்கள். கடந்த காலத்தில் பிட்காயினின் விலை குறைந்தாலும், மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது குற்றம் செய்பவர்கள் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது 1% மட்டுமே. பிட்காயினின் விலை அதிகமாக இருப்பதால், அதிகம் பணம் வைத்திருப்பவர் களே வாங்க முடியும் என நினைக்கிறார்கள். குறைந்தளவு பணம் வைத்திருப்பவர்களும் இதை வாங்கலாம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ‘‘இது ரிஸ்க் மிகுந்த முதலீடு. இதை நன்கு புரிந்துகொண்ட பின்பே இதில் ஈடுபடலாமா, வேண்டாமா என்கிற முடிவை எடுக்க வேண்டும்’’ என நாணயம் விகடன் சார்பில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஃபேஸ்புக் வலைதளத்தில் பார்க்க: https://bit.ly/38qfWVV