Published:Updated:

கெமிக்கல் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

கெமிக்கல் துறை
பிரீமியம் ஸ்டோரி
கெமிக்கல் துறை

முதலீடு

கெமிக்கல் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

முதலீடு

Published:Updated:
கெமிக்கல் துறை
பிரீமியம் ஸ்டோரி
கெமிக்கல் துறை

உலக முதலீட்டாளர்கள் வணிக சுழற்சி முதலீட்டை (Business cycle Investment) நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அதாவது, குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து அதில் சில காலத்துக்கு முதலீடு செய்வது, பின்பு வேறு ஒரு துறையின் சிறந்த பங்குகளில் முதலீடு செய்வது என்பதாக வரை யறை செய்யப்படுகிறது. இந்த முறையில் லாபம் அதிகம் கிடைப்பதாக சில முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் இந்திய ரசாயனத் துறை (chemical sector) பங்குகளில் சில ஆண்டு களுக்கு முதலீடு செய்யலாம் என்று அந்த நிறுவனங்கள் கணித்துக் கூறுகின்றன. தொடர்ந்து அதிகரிக்கும் ரசாயனத் தேவைகள் மற்றும் உலக ரசாயன சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்புகள், இந்திய ரசாயனத் துறைக்கும் அந்தத் துறை சார்ந்த பங்கு நிறுவனங்களுக்கும் நல்ல தொரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கெமிக்கல் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

வளர்ச்சியைக் காட்டும் சல்பியூரிக் அமிலம்...

ரசாயன நிறுவனங்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியில் போதுமான பங்களிப்பை அளிக்கின்றன. சல்பியூரிக் அமிலத்தைப் பயன்படுத்தும் அளவை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடும் அளவுக்கு ரசா யனப் பொருள்கள் நாட்டின் வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ளன.

ரசாயனத் துறையில் இந்தியா...

ரசாயன உற்பத்தியில் இந்தியா, ஆசியாவில் மூன்றா வது நாடாகவும் உலக அளவில் ஆறாவது நாடாக வும் உள்ளது. அடிப்படை ரசாயன உற்பத்தியில் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது. 80,000 வகையான ரசாயனப் பொருள்களை இந்தியா உற்பத்தி செய்கிறது. சில மாதங்கள் முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘2014 - 2021 ஆண்டுக் காலத் தில் இந்தியாவின் ரசாயனப் பொருள்கள் ஏற்றுமதி 106% வளர்ச்சி அடைந்திருக்கிறது’’ என பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 5.4 சதவிகிதத்தை இந்தத் துறை தனது பங்களிப்பாகக் கொண்டுள்ளது. 2025-ம் ஆண்டு இந்திய ரசாயனப் பொருள்கள் ஏற்றுமதியில் மொத்த மதிப்பு இரு மடங்காக அதாவது, 300 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி அடையும் என்று அரசு மற்றும் வல்லுநர்கள் தரப்பு கணித்துள்ளது. 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்ட துறையாக இந்திய ரசாயனத் துறை இருப்பது இந்தத் துறை சார்ந்த பங்குகளுக்குக் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. 2020-21 காலகட்டத்தில் மட்டும் 1,900 கோடி அமெரிக்க டாலர்கள் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு முதலீடாகக் கிடைத்துள்ளது.

கெமிக்கல் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

வளமான வாய்ப்புகள்...

தொடர்ந்து அதிகரித்து வரும் தொழிற்சாலைத் தேவைகளுக்காக ரசாயன நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் திறனை அதிகரித்து வருகின்றன. 2008-ல் உலக அளவில் ஏற்பட்ட மந்தநிலைக்கு முன்பு வரை ரசாயனத் துறையை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, அந்த நாடுகளில் ஏற்பட்ட தொய்வை ஆசிய நாடுகள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டன. அதிலும் குறிப்பாக, சீனா தனது ரசாயன ஏற்றுமதி அளவை 2000-ல் இருந்த 6 சதவிகிதத்திலிருந்து 2017-ல் 37 சதவிகிதமாக வளர்ச்சி காணச் செய்தது.

சீனாவின் மலிவு விலை உற்பத்தி மற்றும் விற்பனை அந்த புரட்சிக்கு முக்கியமான காரணியாக அமைந்தது. இந்திய நிறுவனங்களால் அந்தப் போட்டியை பெரிய அளவில் எதிர்கொள்ள முடியவில்லை. 2% அளவிலான வளர்ச்சியை அதே காலகட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கொண்டிருந்தன.

ஆனால், சீனாவின் வடக்கு மாகாணங்களில் ஏற்பட்ட மாசுபாட்டைக் குறைக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. புதிய சுற்றுசூழல் கொள்கைகளால் 40% ரசாயன ஆலைகள் சீனாவில் மூடப்பட்டுவிட்டன. 2005 - 15 காலகட்டத்தில் சீன நிறுவனங்களின் ஊதிய செலவுகள் 20% வரை அதிகரித்துவிட்டன. இதே காலகட்டத்தில் இந்தியா வில் 4% வரை மட்டுமே ஊதியங்கள் உயர்த்தப் பட்டுள்ளன. சீனாவின் சமீபத்திய பொருளாதார மந்தநிலை மற்றும் சீன - அமெரிக்க வர்த்தகப் போரால் சீன நிறுவனங்கள் கடந்த காலங்களைப் போல மலிவு விலையிலும், வேகமான உற்பத்தியாலும் தாங்கள் அடைந்திருந்த ஏற்றுமதிப் புரட்சியை இழக்கத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளும் சீனாவை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை. சீனாவின் போட்டித்தன்மை குறைந்துள்ள இந்தச் சூழ்நிலை, இந்திய ரசாயன நிறுவனங் களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

கெமிக்கல் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

எதிர்காலம் மற்றும் பங்குகளின் நிலை...

கொரோனா ஏற்படுத்திய அனுபவங்களால் உலக நாடுகள் தங்கள் தேவைகளுக்கு ஒரே நாட்டை சார்ந்திருக்க விரும்ப வில்லை. ஏற்கெனவே உலக அளவில் மருந்து உற்பத்தித் துறையில் 40% சதவிகிதமும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 55% சதவிகிதமும் தனது பங்களிப்பாகக் கொண்டுள்ள வகையில் சிறப்பாகச் செயலாற்றிவரும் இந்தியாவின் பக்கம் உலக நாடுகள் தங்கள் கவனத்தைத் திரும்பியுள்ளன. இது இந்திய ரசாயன நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது.

இந்திய அரசும் ரசாயனத் துறையில் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்ப உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் ‘பொருள் தயாரிப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை’ (PLI) போன்ற திட்டங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தத் துறை நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள்களை வாங்க இறக்குமதியை அதிகம் நம்பியிருப் பதால், அரசு அதைக் கவனத்தில்கொண்டு வரிச் சலுகை களை ஏற்படுத்தும் விஷயங்களிலும், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரசாயன நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நல்ல வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. குறிப்பாக, தீபக் நைட்ரேட் நிறுவனம் 1,200 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சியையும், அல்கயில் அமைன்ஸ் 1,020 சதவிகிதமும், பாலாஜி அமைன்ஸ் 990 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசை வகை தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் போட்டியில்லாத நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கை எப்போதும் வாங்கலாம் என பங்கு ஆலோசனை நிறுவனங்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த நிறுவனம் பங்குச் சந்தை யில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 640 ரூபாயிலிருந்து 2,750 ரூபாய் என்கிற அளவில் வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்த ஓரண்டுக்குள் 3,700 ரூபாயைத் தொட வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராக இருக்கும் காலக்ஸி சர்பக்டன்ட்ஸ் நிறுவனம் 1,000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளது. இதன் அடுத்த டார்கெட் 5,000 ரூபாய் என பங்கு ஆலோசனை நிறுவனங் கள் கணித்துள்ளன. இந்தத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சில பங்குகள் குறித்த விவரம் அட்டவணையில் தந்திருப்பதைப் பார்க்கவும்.

கெமிக்கல் பங்குகள் ஒரு துறை சார்ந்த பங்குகள் என்ப தால், ரிஸ்க் அதிகம். அந்தரிஸ்க் நமக்கு ஏற்றதா என்று பார்த்து, முதலீடு செய்வது அவசியம்!