Published:Updated:

கடன் ஃபண்டுகள்... 60 வயதுக்குப் பிறகான முதலீட்டுத் தேர்வு!

கடன் ஃபண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
கடன் ஃபண்டுகள்

கடன் ஃபண்டுகள்

கடன் ஃபண்டுகள்... 60 வயதுக்குப் பிறகான முதலீட்டுத் தேர்வு!

கடன் ஃபண்டுகள்

Published:Updated:
கடன் ஃபண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
கடன் ஃபண்டுகள்

டி.எஸ்.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் & சி.இ.ஓ, எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் அஸெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்.

சம்பள அதிகரிப்பு, போனஸ் அல்லது ஓய்வூதியத் தொகுப்பு நிதி என நமக்குக் கூடுதலாக எப்போதெல்லாம் தொகை கிடைத்ததோ, அதை வங்கி வைப்பு நிதிகளில் (Bank FD) போட்டு வைத்த நாள்களை நினைவுபடுத்திப் பாருங்கள். நம் தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தங்கள் பத்திரப்படுத்த நினைத்த பணத்தை எஃப்.டி-களில் முதலீடு செய்து வைத்தார்கள்.

டி.எஸ்.ராமகிருஷ்ணன் 
நிர்வாக இயக்குநர் & சி.இ.ஓ, எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் அஸெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்.
டி.எஸ்.ராமகிருஷ்ணன் நிர்வாக இயக்குநர் & சி.இ.ஓ, எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் அஸெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்.

அந்தக் காலத்தில், பாதுகாப்பு, வசதி மற்றும் நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்குதல் போன்ற விஷயங்களில் வங்கி எஃப்.டிகளுக்கு நிகராக வேறு எந்த முதலீடுகளும் நெருங்கி வரவில்லை. ஆனால், இன்றைய வேகமான முன்னேற்ற உலகில், உயர்ந்த பணவீக்க விகித நிலையில் எஃப்.டி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் சாதகமாக இல்லை. இப்போது முதலீட்டாளர்களுக்கு தங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப கூடுதல் வருமானத்தைப் பெற பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

முன்பு மிகவும் பிரபலமாக இருந்த எஃப்.டி-கள் இப்போது அதன் பளபளப்பை இழந்துவிட்டன. பதிலாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருகிறது.

கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்....

கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ரிஸ்க் அடிப்படையில் பார்த்தால், வழக்கமான எஃப்.டிகளுக்கு மிக நெருக்கமாகக் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Debt fund) திட்டங்கள் உள்ளன. கடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது, எஃப்.டியைவிட அதிக வருமானம் மற்றும் குறைவான வரியைக் கட்டுவதாக இருக்கிறது. கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள், 3 ஆண்டுகள் மற்றும் அதற்குமேல் முதலீட்டைத் தொடரும்பட்சத்தில் பணவீக்க விகிதச் சரிக்கட்டல் பலனைப் (Indexation Benefit) பெறுகிறார்கள்.

கடன் ஃபண்டுகள்...  60 வயதுக்குப் பிறகான முதலீட்டுத் தேர்வு!

கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் தினசரி, மாதாந்தர, காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்யும் முறையான முதலீட்டுத் திட்டம் (Systemic Investment Plan - SIP) இருக்கிறது. மேலும், இது அதே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஒரு ஃபண்டிலிருந்து இன்னொரு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றுவதற்கான விருப்பத்தையும் முறையான பரிமாற்றத் திட்டம் (Systemic Transfer Plan - STP) மூலம் வழங்கி வருகிறது.

குறிப்பாக, பணி ஓய்வு பெற்றவர்களுக்குக் கடன் முறை யாகத் திரும்பப் பெறும் திட்டம் (Systemic Withdrawal Plan - SWP) மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. இதில் முதலீட்டாளர் தனது முதலீட்டை ஒவ்வொரு மாதமும் தேவைக்கேற்ப சிறு தவணைகளாகத் தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிப் பெற முடியும்.

அந்த வகையில் பணி ஓய்வுக்குப் பிறகு 60 வயதில் சிறந்த முதலீட்டுத் திட்டமாகக் கடன் ஃபண்டுகள் இருக்கின்றன. கடன் பத்திரங்களின் தரம் மற்றும் வருமான எதிர்பார்ப்பை உறுதிசெய்வதற்காகக் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் தொழில் வல்லுநர்களால் நிர்வகிக்கப் படுகின்றன.

பணவீக்க விகிதச் சரிக்கட்டல் பலன் என்பது என்ன?

பணவீக்க விகிதச் சரிக்கட்டல் பலனில், முதலீட்டாளர் மூலதன ஆதாய வரிக்கான (Capital Gains Tax) பணவீக்க விகிதத்தை ஈடுகட்டும் வகையில், கடன் ஃபண்ட் திட்டத்தில் வாங்கிய என்.ஏ.வி மதிப்பைச் சரி செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

உதாரணமாக, ஒருவர் 2016–ம் நிதியாண்டில் கடன் ஃபண்டில் என்.ஏ.வி மதிப்பு ரூ.100-ல் முதலீடு செய்கிறார். அவர் 2020-ம் நிதியாண்டில் என்.ஏ.வி மதிப்பு ரூ.125-ஆக இருக்கும் போது யூனிட்டுகளை விற்கிறார். அவர் என்.ஏ.வியை 1.137 மடங்கு (நிதி ஆண்டு 2020 மற்றும் நிதி ஆண்டு 2016-க்கான பணவீக்கக் குறியீட்டின் விகிதம்) சரி செய்ய அனுமதிக்கப்படுகிறார். அதன்படி, பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, அவர் ரூ.100-க்கு வாங்கிய யூனிட்டின் விலை ரூ.113.7-ஆக அதிகரித்து இருக்கும்.

கடன் ஃபண்டுகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு (3 ஆண்டுகளுக்கும் மேலாக யூனிட்டுகளை வைத்திருக்கும் பட்சத்தில்) பணவீக்க விகிதச் சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி விதிக்கப்படுகிறது.

எந்த முதலீடு லாபம்?

ஒரே முதிர்வுக் காலம் மற்றும் ஒரே வருமானம் கொண்ட எஃப்.டி மற்றும் கடன் ஃபண்டு களில் முதலீடு செய்யும்போது, பணவீக்க விகித சரிக்கட்டல் மற்றும் வருமான வரி அனுகூலம் (Tax Efficient) காரணமாக எஃப்.டி-யைவிட கடன் ஃபண்ட் 1% அதிகமாக வருமானம் கொடுக் கிறது. (பார்க்க, மேலே உள்ள அட்டவணை)

அதே நேரத்தில், மூன்று ஆண்டுக் காலத்தில் எஃப்.டி-யைவிட கடன் ஃபண்டுகள் இன்னும் கூடுதல் வருமானம் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.

கடன் ஃபண்டுகள்...  60 வயதுக்குப் பிறகான முதலீட்டுத் தேர்வு!

வட்டி விகித ரிஸ்க், கடன் ரிஸ்க் மற்றும் முதலீட்டுக் கால ரிஸ்க் (Interest Rate Risk, Credit Risk and Duration Risk) ஆகியவற்றைக் கையாளுவதில் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களால் கடன் ஃபண்டுகள் நிர்வகிக்கப்படுகிறது. எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி, எஸ்.டபிள்யூ.பி போன்ற முதலீட்டு உத்திகள் மற்றும் பல அம்சங்கள் சிறு முதலீட்டாளர்களுக்குக் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்ய உகந்ததாக அமைந்துள்ளது.

உயரும் வட்டி விகித சூழ்நிலையில் கடன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும். மேலும், அது எஃப்.டி உடன் ஒப்பிடும்போது, மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட காலத்தில் வரி அனுகூலம் கொண்டதாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism