Published:Updated:

டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு... என்னென்ன லாபங்கள்? நிபுணர்களின் வழிகாட்டல்...

வ.நாகப்பன், ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், ஜீவன் கோஷி

MEETING

டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு... என்னென்ன லாபங்கள்? நிபுணர்களின் வழிகாட்டல்...

MEETING

Published:Updated:
வ.நாகப்பன், ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், ஜீவன் கோஷி

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் `டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு..!’ (கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் & கோல்டு இ.டி.எஃப்) என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தின. இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி, “ஆபரண நகையை வாங்கி விற்கும்போது செய்கூலி, சேதாரம். ஜி.எஸ்.டி, பழைய நகைக்கான கழிவு ஆகியவை இருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 15% - 20 சதவிகிதமாக இருக்கின்றன. அந்த வகையில், ஒரு முறை தங்கத்தை வாங்கி விற்றால் இழப்பு சுமார் 20 சதவிகிதமாக இருக்கிறது. இதுவே டிஜிட்டல் வழியில் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப்-ஆக வாங்கி விற்றால் 1-2.5% மட்டுமே செலவாகும். விலை ஏற்றத்தால் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும்” என்றார்.

வ.நாகப்பன், ஜீவன் கோஷி
வ.நாகப்பன், ஜீவன் கோஷி

டாலர் போல் எதிர்காலத்தில் தங்கம் கரன்சியாக மாற வாய்ப்பிருக்கிறதா என இந்துமதி என்கிற வாசகி கேள்வி கேட்க, முதலீட்டு ஆலோசக்கர் வ.நாகப்பன் விளக்கமாக பதில் அளித்தார். “தங்கம் கையிலிருந்தால் உலக நாடுகள் அனைத்திலும் அதைப் பணமாக மாற்ற முடியும். அந்த அளவுக்கு இப்போதே அது கரன்சி போல்தான் செயல்படுகிறது. ஆனால், உலக மத்திய வங்கிகள் தங்கத்தை கரன்சியாக ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைபடுத்துவது எளிதான காரியமல்ல’’ என்றார்.

வீடியோவில் காண: https://www.facebook.com/watch/live/?v=835977800659322&ref=watch_permalink

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism