Published:Updated:

இந்தியாவில் வேகமான வளர்ச்சி... இ.டி.எஃப்-கள் மூலம் பேசிவ் முதலீடுகள்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

இந்தியாவில் வேகமான வளர்ச்சி... இ.டி.எஃப்-கள் மூலம் பேசிவ் முதலீடுகள்..!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

சிந்தன் ஹரியா, ஹெட்- புராடக்ட் டெவலப்மென்ட் & ஸ்ட்ராடஜி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏ.எம்.சி

கோவிட் 19 பரவல் மற்றும் பாதிப்பு, உலக அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, பேசிவ் அடிப்படையில் நிர்வகிக்கும் முதலீட்டுத் திட்டங்களின் (Passively Managed Products) வளர்ச்சி ஆகும்.

சிந்தன் ஹரியா 
ஹெட்- புராடக்ட் டெவலப்மென்ட் & ஸ்ட்ராடஜி, 
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏ.எம்.சி
சிந்தன் ஹரியா ஹெட்- புராடக்ட் டெவலப்மென்ட் & ஸ்ட்ராடஜி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏ.எம்.சி

பேசிவ் முதலீடு என்றால்..?

பேசிவ் முதலீடு என்பது ஃபண்ட் மேனேஜர்களுக்கு அதிகம் வேலை வைக்காத ஏதாவது ஒரு பங்குச் சந்தை அல்லது கடன் சந்தை குறியீட்டைப் பின்பற்றி முதலீடு செய்வதாகும். இந்த வகை முதலீடு இந்தியாவில் அண்மைக் காலத்தில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

இண்டெக்ஸ் ஃபண்டுகள் முதல் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஃபண்டுகள் (Exchange-Traded Funds -ETFs) வரையிலான முதலீடுகள் பேசிவ் முதலீட்டின்கீழ் வருகின்றன. இந்த முதலீடுகளின் மீது முதலீட் டாளர்களின் ஆர்வம் முன்பை விட மிகவும் அதிகரித்திருக்கிறது. மேலும், நிர்வகிக்கப்படும் தொகை யும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்டு இ.டி.எஃப்-கள் உள்ளிட்ட இ.டி.எஃப்-கள் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் மூலம் இந்தியாவில் நிர்வகிக்கப்படும் தொகை முறையே ரூ.1,84,534 கோடி மற்றும் ரூ.8,082 கோடியாக இருந்தது. இது 2021 மே மாதத்தில் முறையே ரூ.3,16,289 கோடி மற்றும் ரூ.22,904 கோடியாக உயர்ந்துள்ளது. இது முறையே 71% மற்றும் 183% வளர்ச்சி ஆகும்.

இந்தியாவில் பேசிவ் முதலீடு ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கிறது. இது அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் சிறு முதலீட்டாளர்கள் இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களில் அதிக அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வேகமான வளர்ச்சி... இ.டி.எஃப்-கள் மூலம் பேசிவ் முதலீடுகள்..!

இ.டி.எஃப் வளர்ச்சி...

இந்தியாவின் முதல் இ.டி.எஃப் 2001-ம் ஆண்டு டிசம்பரில் நிஃப்டி 50 குறியீட்டின் அடிப்படையில் உருவானது. அந்த வகையில் இ.டி.எஃப் முதலீடு இந்தியாவுக்கு புதிதல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், அண்மைக் காலத்தில்தான் இந்த இ.டி.எஃப் முதலீடு வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

நிஃப்டி 50 அடிப்படையிலான இண்டெக்ஸ் ஃபண்டுகள் மூலம் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 2020 ஆகஸ்ட்டில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. இது இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் இணைந்த மொத்தத் தொகையாகும். இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகித்துவரும் மொத்த சொத்து மதிப்பில் 10 சதவிகி தத்துக்கும் கீழாகும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த சதவிகிதம் 50-க்கும் மேலாக இருக்கிறது.

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள்...

நம் நாட்டில் ஆரம்பத்தில் பங்கு சார்ந்த இ.டி.எஃப்தான் இருந்தது. அதன்பிறகு, இப்போது கடன் சந்தை சார்ந்த, தங்கம் சார்ந்த இ.டி.எஃப்-கள் வந்திருக்கின்றன.

பங்குச் சந்தை சார்ந்த இ.டி.எஃப் எனில், பங்குச் சந்தை மதிப்பானது (Market capitalisation), துறை சார்ந்து, ஸ்மார்ட், பீட்டா சார்ந்து எனப் பல வகை இ.டி.எஃப்-கள் இருக்கின்றன. கடன் சந்தை சார்ந்தது என்கிறபோது, லிக்விட் இ.டி.எஃப், கில்ட் இ.டி.எஃப், பி.எஸ்.யூ டெப்ட் இ.டி.எஃப்-கள் உள்ளன. கமாடிட்டி எனில், கோல்டு இ.டி.எஃப்-கள் உள்ளன.

2021 மே மாத நிலவரப்படி, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் உள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மொத்தம் 108 இ.டி.எஃப் திட்டங்களை நிர்வகித்து வருகின்றன. இதில் பெரும்பாலானவை ஈக்விட்டி சார்ந்தவையாகும். இந்தியாவில் செயல்படும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் ஈக்விட்டி இ.டி.எஃப் திட்டங்களை நடத்துகின்றன. அவையும் லார்ஜ்கேப் இ.டி.எஃப் திட்டங்களாகவே இருக்கின்றன.

கோல்டு இ.டி.எஃப் திட்டங்கள் மொத்தம் 11 இருக்கின்றன. கோல்டு இடி.எஃப் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.16,625 கோடியாக உள்ளது. இதர ஈக்விட்டி இ.டி.எஃப் மற்றும் டெப்ட் இ.டி.எஃப்-கள் மூலம் மொத்தம் ரூ. 2,99,664 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இ.டி.எஃப்-களின் வளர்ச்சிக்கு உதவும் காரணிகள்...

நம் நாட்டில் இ.டி.எஃப்-களின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பும் முக்கிய காரணியாக இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு இ.டி.எஃப்-கள் வழியில் மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை அறிவித் தது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இ.டி.எஃப்-களை பலரையும் கவனிக்க வைத்து, முதலீடு செய்ய வைத்திருக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகள் மத்திய அரசு, அதன் பங்குகளை இரண்டு இ.டி.எஃப்-கள் மூலம் பல்வேறு நிலைகளாக விற்பனை செய்திருக்கிறது. முதல் இ.டி.எஃப், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (Central Public Sector Enterprises - CPSE) இ.டி.எஃப் ஆகும். இது நிஃப்டி சி.பி.எஸ்.இ குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் 11 பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு களை இணைத்து உருவாக்கப் பட்டது. அடுத்தது, பாரத் 22 இ.டி.எஃப் (Bharat 22 ETF), இது எஸ் & பி பி.எஸ். பாரத் 22 இண்டெக்ஸ் அடிப்படையில் 11 வேறுபட்ட துறைகளைச் சேர்ந்த 22 நிறுவனப் பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இ.டி.எஃப் இன்னும் அதிகம் கவனம் பெற, பணியாளர்கள் சேமநல நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஓ (Employees Provident Fund Organization -EPFO), அதன் தொகுப்பு நிதியின் ஒரு பகுதியை இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்ய எடுத்த முடிவாகும். 2015 ஆகஸ்ட் முதல் இந்த அமைப்பு, நிஃப்டி 50, எஸ்&பி பி.எஸ்.இ சென்செக்ஸ், சி.பி.எஸ்.இ மற்றும் பாரத் 22 இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. இவற்றின் காரணமாக, இ.டி.எஃப் பேசிவ் முதலீடு வேகம் எடுத்தது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், செபி அமைப்பு, ஆஃம்பி அமைப்பு, பங்குச் சந்தைகள், பத்திரிகைகள் ஏற்படுத்திய அதிக விழிப்புணர்வும் இ.டி.எஃப் முதலீடு வேகம் எடுக்க காரணமாக அமைந்தது.

இ.டி.எஃப் திட்டங்களின் எதிர்காலம்...

ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டமாக இருந்த இ.டி.எஃப், இப்போது சிறு முதலீட் டாளர்களின் விரும்ப முதலீடாக மாறியிருக்கிறது. இதில் உள்ள வெளிப்படைத்தன்மை, குறைவான கட்டணம், எளிதில் பணமாக்கும் தன்மை போன்ற வற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம். இவை நீண்ட காலத்தில் குறியீட்டு அளவுக்கு வருமானம் கொடுத்து வருவது சாதகமான அம்சமாக இருக்கிறது. இந்த இ.டி.எஃப்-களில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. ஒரு காலத்தில் டீமேட் கணக்கு தொடங்குவது கடினமான வேலையாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. இருந்த இடத்தி லிருந்துகொண்டே இணையதளத்தின் வழியாக இ-கே.ஒய்.சி மூலம் டீமேட் கணக்கைத் தொடங்கிவிட முடியும். இதற்கான ஆண்டுக் கட்டணமும் ரூ.300 முதல் ரூ.500 வரைதான்.

ஸ்மார்ட் பீட்டா இ.டிஎஃப் திட்டங்கள்...

இந்திய இ.டி.எஃப் சந்தையின் வளர்ச்சிப் பாதை, வளர்ந்த சந்தைகளைப் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. வளர்ந்த நாடுகளில் முதலீட்டாளர்கள் குறியீட்டு அடிப்படையிலான இ.டி.எஃப்-கள், ஸ்மார்ட் பீட்டா இ.டிஎஃப்-கள் போன்ற புதுமையான திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகிறார்கள். அது இந்தியாவிலும் வளர்ச்சி காண ஆரம்பித்திருக்கிறது. ஸ்மார்ட் பீட்டா இ.டிஎஃப்-கள் என்பது ஒரு விதிமுறையின் அடிப்படையில் கம்ப்யூட்டரே முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்யும் முறையாகும். வரும் ஆண்டுகளில் இந்த ஸ்மார்ட் பீட்டா இ.டிஎஃப்-களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் ஆண்டுகளில், இன்னும் அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் பீட்டா இடிஎஃப்-கள் வரக் கூடும். முதலீட்டாளர்கள் இடையே முன்பை விட அதிகமாக இ.டி.எஃப்-கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட் டிருப்பது இதை சாத்தியப்படுத்தும். சிறு முதலீட்டாளர்கள், தங்களின் முதலீட்டுக் கலவையில் (போர்ட் ஃபோலியோ) 15 - 20% வரை இ.டி.எஃப்-களுக்கு இடம் ஒதுக்கலாம்.

ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக் கேற்ப ஈக்விட்டி இ.டி.எஃப், டெப்ட் இ.டி.எஃப், கோல்டு இ.டி.எஃப் போன்ற திட்டங்களைப் பரிசீலிக்கலாம்!