Published:Updated:

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்... முதலீட்டு பரவலாக்கம், லாபத்தை அதிகரிக்க உதவுமா?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்... முதலீட்டு பரவலாக்கம், லாபத்தை அதிகரிக்க உதவுமா?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முதலீட்டு பரவலாக்கம் (Diversification) உதவும். இதன் அடிப்படையில்தான் முதலீட்டின் வருமானம் இருக்கும். இப்படி ரிஸ்க்கைக் குறைத்து வருமானத்தைப் பெருக்குவதில் மியூச்சுவல் ஃபண்டின் முக்கிய வகையான ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Flexi Cap Fund) இருக்கிறது.

சிவகாசி மணிகண்டன்  
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன்   நிதி ஆலோசகர், Aismoney.com

குறைந்தபட்சம் 65% நிறுவனப் பங்குகளில் முதலீடு...

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி அமைப்பின் வரையறைப் படி, இந்த ஃபண்டில் முதலீட்டாளர்களிலிருந்து திரட்டப்படும் முதலீட்டில் குறைந்தபட்சம் 65% லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படும். இந்தப் ஃபண்ட், முதலீட்டில் இருக்கும் ரிஸ்க்கை எப்படிக் குறைக்கும், வருமானத்தை எப்படி அதிகரிக்கும் என்பதை புரிந்துகொள்ள லார்ஜ்கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளின் வரையறையைத் தெரிந்து கொள்வது அவசியம்.

பங்குச் சந்தையில் பங்கின் சந்தை மதிப்பில் அடிப்படையில் முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் லார்ஜ்கேப் நிறுவனங்கள் எனப்படும். 101 முதல் 250 வரை யிலான நிறுவனங்கள் மிட்கேப் எனப்படும். அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மால்கேப் எனப்படும்.

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்... முதலீட்டு பரவலாக்கம், லாபத்தை அதிகரிக்க உதவுமா?

அனைத்துப் பிரிவு முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற ஃபண்ட்...

இப்படி முதலீட்டைப் பரவலாக்கம் செய்யும்போது ரிஸ்க் குறைவதுடன், வருமானமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, பல வகையினர் இருக்கிறார்கள். குறிப்பாக, அக்ரசிவ், மாடரேட் மற்றும் கன்சர்வேட்டிங் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவர்கள் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீடு செய்வார்கள். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் அவர்கள் முதலீட்டைப் பரவலாக்கம் செய்ய விரும்புவார்கள். இவர்கள் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம். மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவாகும்.

ஃபண்ட் மேனேஜருக்கான முதலீட்டுச் சுதந்திரம்...

இந்த ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டைப் பொறுத்தவரை, ஃபண்ட் மேனேஜருக்கு முதலீட்டுச் சுதந்திரம் மிக அதிகமாக இருக்கிறது. அதாவது, அவர் எந்த நிறுவனப் பங்கிலும் முதலீடு செய்யலாம்; அதன் பங்குச் சந்தை மதிப்பு எதையும் அவர் கவனிக்கத் தேவையில்லை. அதாவது, வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள எந்த நிறுவனப் பங்கிலும் முதலீடு செய்யலாம். மேலும், தேவைப்பட்டால் ஃபண்ட் மேனேஜர் எந்தத் துறை அல்லது எந்த நிறுவனப் பங்கிலும் முதலீட்டை மாற்றிக்கொள்ள முடியும்.

லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகள் சரியாகச் செயல்பட வில்லை எனில், அந்தக் கால கட்டத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், இதற்கேற்ப பங்கு முதலீட்டை மாற்றிக்கொள்ள ஃபண்ட் மேனேஜருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

மல்ட்டிகேப் ஃபண்ட் என்கிறபோது லார்ஜ்கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் தலா 25% முதலீடு செய்தேயாக வேண்டும் என்பது செபி அமைப்பின் விதிமுறை ஆகும். ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளில் லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகளில் எதில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இவற்றின் மொத்த முதலீடு 65 சதவிகித மாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டின் இந்த வசதி காரணமாகப் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள் அவற்றின் மல்ட்டிகேப் ஃபண்டுகளை ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டாக மாற்றி அமைத்திருக் கின்றன.

இதன் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் நிஃப்டி 500 டி.ஆர்.ஐ ஆகும். பல ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் இதைவிட அதிக வருமானம் கொடுத்திருக் கின்றன.

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்... முதலீட்டு பரவலாக்கம், லாபத்தை அதிகரிக்க உதவுமா?

வருமானம் எப்படி?

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டு களின் சராசரி வருமானம் (செப்டம்பர் 9, 2022) நிலவரப் படி, மூன்றாண்டில் 19%, ஐந்தாண்டில் 12% மற்றும் பத்தாண்டில் 15 ஆக உள்ளது. டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் மூன்றாண்டுகளில் 24-40 சதவிகிதமாகவும், ஐந்தாண்டுகளில் 15-20 சதவிகித மாகவும், பத்தாண்டுகளில் 15 சதவிகிதமாகவும் உள்ளன.

கடந்த கால வருமானம் எதிர்காலத்தில் அப்படியே கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், ஃபண்ட் சராசரி வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்... முதலீட்டு பரவலாக்கம், லாபத்தை அதிகரிக்க உதவுமா?

யாருக்கு ஏற்றது?

* முதலீட்டுக் காலம், நிதித் தேவை ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்டு இருக்கும் யாரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

* செபி அமைப்பின் ரிஸ்கோமீட்டர் அளவீட்டின்படி, இந்த ஃபண்ட் மிகவும் அதிக ரிஸ்க் கொண்டதாகும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள்தாம் இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அதே நேரத்தில், ஐந்தாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் இந்த ஃபண்டில் ரிஸ்க் பரவலாகி அதாவது ரிஸ்க் குறைவதுடன், அதிக வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

* அனைத்துப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட துறைகள் மற்றும் நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்ய விரும்பு வர்களுக்கு ஏற்ற ஃபண்டாக இது இருக்கிறது,

* அனைத்துப் பங்குச் சந்தை சூழல் மற்றும் சுழற்சியில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் ஈட்ட நினைப் பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட் ஆகும்.

முதலீட்டில் பரவலாக்கம் செய்ய விரும்புகிறவர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதன்முதலாக நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற ஃபண்டாக இது இருக்கிறது.