Published:Updated:

தங்கத்தில் முதலீடு... சூப்பர் லாபத்துக்கு கோல்டு இ.டி.எஃப்..! செய்கூலியும் சேதாரமும் இல்லை!

தங்கத்தில் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
தங்கத்தில் முதலீடு

GOLD

தங்கத்தில் முதலீடு... சூப்பர் லாபத்துக்கு கோல்டு இ.டி.எஃப்..! செய்கூலியும் சேதாரமும் இல்லை!

GOLD

Published:Updated:
தங்கத்தில் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
தங்கத்தில் முதலீடு

நிதின் கபாடி, தலைவர், இ.டி.எஃப் வணிகம், ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் ஏ.எம்.சி.

நம் மக்களின் நீண்டகால முதலீட்டு விருப்பமாகத் தங்கம் உள்ளது. இப்போது நல்ல வருமானம் தரும் முதலீடுகளில் ஒன்றாகவும் தங்கம் மாறியிருக்கிறது. தங்கம் என்பது நல்ல காலத்திலும், பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலத்திலும், பணவாட்டம் (Deflation) இருந்த காலத்திலும் நன்கு ஜொலித்திருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தை எடுத்துக்கொண்டால் அதாவது, 1971 –ம் ஆண்டு முதல் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கொடுத்திருக்கிறது.

நிதின் கபாடி 
தலைவர் 
இ.டி.எஃப் வணிகம், 
ஐ.சி.ஐ.சி.ஐ 
ப்ருடென்ஷியல் 
ஏ.எம்.சி.
நிதின் கபாடி தலைவர் இ.டி.எஃப் வணிகம், ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் ஏ.எம்.சி.

கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க பாண்டு முதல் பங்குகள் வரை, வளர்ந்த நாடுகளின் பங்குச் சந்தைகள் முதல் முக்கிய கமாடிட்டிகள் வரை அனைத்தையும் தாண்டி தங்கம் சிறப்பாக விலை உயர்வு கண்டிருக்கிறது. சில சர்வதேச ஆய்வுகள், அமெரிக்க டாலர் அடிப்படையிலான முதலீட்டுக் கலவையில் (Portfolio) சுமார் 2% - 10% தங்கத் திட்டங்கள் சேர்த்ததால், அதன் செயல்பாடு, ரிஸ்க்கை ஈடுகட்டி குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.

அதிக அளவில் தங்கம் வாங்கும் நம் மக்கள்...

மஞ்சள் உலோகமான தங்கத்தை உலக அளவில் மிக அதிகமாக வைத்திருக்கும் நாடு, இந்தியா. இதிலிருந்து தங்கத்துக்கும் நம் மக்களுக்கு உள்ள நெருங்கிய உறவை அறிய முடியும். உலக தங்கக் கழகம் (World Gold Council) அளிக்கும் தகவல்படி, இந்தியர்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் இருக்கிறது. இந்தியாவில் நகர்புற மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 5,928 ரூபாயை தங்கம் மற்றும் ஆபரணத் தங்கத்துக்காகச் செலவிடுகிறார்கள். இதுவே கிராமப்புற மக்கள் ஆண்டுக்கு 2,796 ரூபாயை தங்கம் மற்றும் தங்க நகைக்காகச் செலவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்ப நுகர்பொருள்கள் வாங்கும் செலவில் சுமார் 23% சதவிகிதமாக இருக்கிறது.

தங்கத்தில் முதலீடு... சூப்பர் லாபத்துக்கு கோல்டு இ.டி.எஃப்..! செய்கூலியும் சேதாரமும் இல்லை!

தங்க முதலீடு: பிசிக்கல் முதல் டிஜிட்டல் வரை...

நீண்டகாலமாக இந்தியர்கள் தங்க நகை மற்றும் பிசிக்கல் தங்கமாக வாங்கி, அதை முதலீட்டு நோக்கிலும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் தங்கம் வெட்டி எடுக்கப்படுவதில்லை என்பதால், வெளிநாட்டிலிருந்து தங்கத்தை டன் கணக்கில் இறக்குமதி செய்துதான் நாம் தங்க நகை மற்றும் தங்க நாணயங்கள் செய்து வருகிறோம். இதனால், வெளிநாடுகளுக்கு நம் அந்நியச் செலாவணி செல்கிறது. இதைத் தடுக்கும் நோக்கத்துடன் தான், டிஜிட்டல், எலெக்ட் ரானிக்ஸ் வழியில் தங்கத்தில் முதலீடு செய்யும் காகித தங்கத் (Paper Gold) திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

டிஜிட்டல் வழியில் தங்க முதலீடு என்கிறபோது, கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் என்கிற கோல்டு இ.டி.எஃப், இ-கோல்டு, சாவரின் தங்கப் பத்திரங்கள் ஆகியவை உள்ளன.

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வது அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்திருக்கிறது. அதற்குக் காரணம், அதில் சுலபமாக முதலீடு செய்ய முடிவதாக இருக்கிறது. ஒரு சிறிய தொகையைக்கூட முதலீடு செய்ய முடியும். பேடிஎம் இ-கோல்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் தினசரி குறைந்தபட்சம் ரூ.1 கூட முதலீடு செய்ய முடியும்.

கோல்டு இ.டி.எஃப் என்கிற போது ஒரு கிராம் என்பது ஒரு யூனிட் என்கிற கணக்கில் தற்போது ரூ.4,500 இருந்தால், முதலீடு செய்ய முடியும். மேலும், ஒரு கிராமின் 100-ல் 1 பகுதியாக ரூ.45-க்கு ஒரு யூனிட் என்பது போன்ற கோல்டு இ.டி.எஃப் முதலீடும் இருக்கிறது.

சாவரின் கோல்டு பாண்டில் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தின் விலையைக் குறிக்கிறது. இந்த முதலீட்டுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 2.5% வட்டி அளிக்கிறது. ஆனால், இந்த பாண்டில் ஒருவர் நினைத்த நேரத்தில் முதலீடு செய்ய முடியாது. அரசு அறிவிப்பு வெளியிடும் நேரத்தில்தான் முதலீடு செய்ய முடியும். மேலும், இதன் லாக்இன் காலமான ஐந்தாண்டுகளுக்கு முன் விற்றுப் பணமாக்குவது சற்றுக் கடினம்.

இ-கோல்டைவிட கோல்டு இ.டி.எஃப் ஏன் சிறந்தது?

இ-கோல்டு முதலீட்டைவிட கோல்டு இ.டி.எஃப் சிறந்ததாக இருக்கிறது. சாவரின் கோல்டு பாண்டைக்கூட உடனடியாக விற்று பணமாக்குவது கொஞ்சம் கடினம். ஆனால், கோல்டு இ.டி.எஃப் மற்றும் இ-கோல்டை எளிதில் பணமாக்க முடியும்.

கோல்டு இ.டி.எஃப் முதலீட்டுக்கு ஒழுங்கு முறை ஆணையமாக செபி அமைப்பு இருக்கிறது. அது ஏதாவது பிரச்னை எனில், முதலீட்டாளர் களுக்கு பாதுகாப்பாக இருக் கிறது. கோல்டு இ.டி.எஃப் திட்டத்துக்காகத் தங்கம் வாங்கி வைக்கப்படும் கட்டடங்களை செபி சட்டப்படி ஆய்வு செய்து, உறுதிப்படுத்தி வருகிறது. இந்த ஆய்வு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்யும்போது சரக்கு மற்றும் சேவை வரி (GST) கிடையாது. இ-கோல்டு முதலீட்டாளர்கள், தங்க நகை வாங்கும் போது செலுத்தும் 3% ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்.

இ-கோல்டில் பாதுகாப்பதற்கான ஸ்டோரேஜ் கட்டணம் (storage charge) கட்டணம் இருக்கிறது. இந்தக் கட்டணம் கோல்டு இ.டி.எஃப்பில் இல்லை. இ-கோல்டு கணக்கை செயல்பாட்டில் வைக்க ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒரு முறை குறைந்தபட்சம் ஒரு பரிவர்த் தனையாவது நடக்க வேண்டும். கோல்டு இ.டி.எஃப் டீமேட் கணக்கில் இருப்பதால், இந்தச் சிக்கல் இல்லை.

அந்த வகையில், இ-கோல்டு திட்டத் துடன் ஒப்பிடும்போது கோல்டு இ.டி.எஃப் திட்டம் பல வகையிலும் முதலீட் டாளர்களுக்கு நன்மை செய்யக் கூடியதாகவே இருக்கிறது!

வேகமான வளர்ச்சியில் கோல்டு இ.டி.எஃப்..!

இந்தியாவில் கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்வது அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ரூ.4,464 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

கடந்த 2020–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோல்டு இ.டி.ஃப்-ன் கீழ் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.7,949 கோடியாக இருந்தது. இது 2020 செப்டம்பரில் ரூ.13,589 கோடியாக அதிகரித்தது. இது 2021 மே மாதத்தில் ரூ.16,625 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளவில் தொடர்ந்து 10 மாதங்களாக கோல்டு இ.டி.எஃப் முதலீடு அதிகரித்துள்ளது. இதில் நிர்வகிக்கப்படும் தொகை 23,500 கோடி டாலராக (ரூபாய் மதிப்பில் சுமார் 17,39,000 கோடி) உள்ளது. கோல்டு இ.டி.எஃப் மூலம் கிட்டத்தட்ட 3,880 டன் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் மொத்த தங்கத் தேவையில் கோல்டு இ.டி.எஃப்பின் பங்களிப்பு கடந்த ஆண்டில் சுமார் 8 சதவிகிதமாக இருந்தது, இப்போது கிட்டத்தட்ட 35 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தங்கத்தை முதலீட்டு நோக்கில் வாங்க, குறைவான செலவு விகிதம், எளிதில் பணமாக்கும் வசதி போனவற்றால் கோல்டு இ.டி.எஃப், இதர தங்க முதலீடுகளுடன் ஒப்பிடும் போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.