பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தீபாவளிக்கு கோல்டு இ.டி.எஃப் முதலீடு... உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு பிரகாசம்..!

கோல்டு இ.டி.எஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
கோல்டு இ.டி.எஃப்

முதலீடு

சிந்தன் ஹரியா, தலைவர் திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

மஞ்சள் உலோகமான தங்கத்தின் பிரகாசம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்க எப்போதும் தவறுவதில்லை. ஒரு முதலீடாகத் தங்கமானது என்றும் குறையாத கவர்ச்சியைக் கொண்டுள்ளது.

சிந்தன் ஹரியா 
தலைவர் திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
சிந்தன் ஹரியா தலைவர் திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

முதலீட்டுக் கண்ணோட்டம்...

வரலாற்று ரீதியாக, தங்கம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி யுள்ளது. மேலும், ஒரு முதலீட்டுக் கலவையின் (Portfolio) ரிஸ்க் ஈடுகட்டப்பட்ட வருமான செயல்திறனை மேம்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மேலும், அமைப்பு சார்ந்த ரிஸ்க் (systemic risk) மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு (Currency Depreciation) எதிரான ஒரு நல்ல ஹெட்ஜ் எனவும் கருதப்படுகிறது. தங்கம் இரண்டு முக்கியமான வழிகளில் முதலீட்டுக் கண்ணோட்டத்தில் மதிப்பைச் சேர்க்கிறது.

நீண்ட கால வருமானத்தை அதிகரிக்க...

தங்கம் எப்போதுமே முதலீட்டாளர் களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. ஏனெனில், இது பொருளாதார மந்தநிலை, பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றம் அல்லது வேறு எந்த வகையான கொந்தளிப்பு களின் மூலம் உருவாகும் நிச்சயமற்ற நிலையின் போது முதலீட்டுக் கலவைக்கு உறுதியான நிலையை வழங்குகிறது.

உதாரணமாக, அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், கோவிட் 19 பரவலால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது தங்கம் நல்ல வருமானத்தைக் கொடுத்ததால், தங்கத்தை முதலீட்டுக் கலவையில் சேர்த்திருந்தவர்களின் முதலீட்டு வருமானம் பாசிட்டிவ்வாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

தங்கத்தைப் பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், வரலாற்றுரீதியாக இது முதலீட்டுக் கலவைக்கு நிலைத்தன்மையை வழங்கி வருவதாகும். கூடவே நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தையும் வழங்கியுள்ளது. இது நல்ல மற்றும் மோசமான பொருளாதாரக் காலகட்டங்களில் ஒரு நெகிழ்ச்சியான கூட்டாளியாக இருந்து வருகிறது. அதாவது, பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் காலத்தில், மக்கள் சந்தோஷமாக தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இதுவே மோசமான பொருளாதார நிலையில் பாதுகாப்புக்காகத் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

தீபாவளிக்கு கோல்டு இ.டி.எஃப் முதலீடு... உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு பிரகாசம்..!

தங்கம் ஒரு நல்ல சொத்துப் பிரிவாக மாறி இருப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. அது பல்வேறு தேவைக்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தங்கமானது ஒரு முதலீடாகவும், அடுத்த தலைமுறை மற்றும் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்கும் ஒரு சொத்தாகவும், அலங்காரப் பொருளாகவும், நவீன தொழில்நுட்பப் பொருள்கள் தயாரிப்பில் முக்கியமான பொருளாகவும் பயன்படுகிறது.

இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாகத் தங்கத்தின் தேவை ஓரளவுக்கு சீராக உள்ளது. மேலும், தங்கத்தை எளிதில் பணமாக்க முடியும். கடன் பத்திர முதலீடு போன்று இதில் கிரெடிட் ரிஸ்க் இல்லை. அதாவது, முதலீட்டுப் பணம் திரும்ப வருமா, வராதா என்கிற பயம், சிக்கல் இதில் இல்லை. மேலும், உலக அளவில் இதன் தேவை அளவுக்கு தங்கத்தின் கையிருப்பு இல்லை என்பதால், இதன் விலை எப்போதும் பிரீமியமாக இருந்து வருகிறது. தங்கத்தின் நீண்ட கால வருமானம் என்பது அடிக்கடி முதலீடு செய்யப்படும் பல சொத்துப் பிரிவுகளுக்கு சமமாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளது.

முதலீட்டுக் கலவையின் இழப் பைக் குறைக்க பரவலாக்கம்...

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் செல்வத்தை உருவாக்குவதற் கான (Wealth Creation) நீண்ட கால முதலீட்டுத் திட்டங் களாகக் கருதப்படுகின்றன. மேலும், இந்த ஈக்விட்டி முதலீடு ஒரு தனிப்பட்ட முதலீட்டாள ரின் போர்ட்ஃபோலியோவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

பல வகையான சொத்துகளில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்வது முதலீட்டுக் கலவை (Diversified Investment Portfolio), செல்வத்தை உருவாக்குவதற் கான முக்கியமான காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

கடன் பத்திரங்கள் (Bonds) முதலீட்டுக் கலவைக்கு நிலைத் தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றன. அதே சமயம், ஈக்விட்டி முதலீட்டுக் கலவைக்கு நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை வழங்கி வருகிறது. ஆனால், பொருளா தார நெருக்கடிக் காலங்களில் தங்கத்தைத் தவிர, கிட்டத் தட்ட அனைத்து சொத்துப் பிரிவுகளும் நெகட்டிவ் வருமானத்தைத் தந்திருப் பதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், 2008-ம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி ஆகும். அந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தைகள், ஹெட்ஜ் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் பெரும்பாலான கமாடிட்டி கள் என அனைத்து சொத்துப் பிரிவுகளின் வருமானம் மிகவும் வீழ்ச்சி அடைந்தது.

அதே நேரத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் தங்கத்தின் விலை நிலையாக இருந்தது. டிசம்பர் 2007 முதல் பிப்ரவரி 2009 வரையிலான கால கட்டத்தில் பாசிட்டிவ் வருமானத்தைத் தங்கம் கொடுத்தது. இது ஓர் உன்னதமான முதலீட்டுக் கலவையின் பரவலாக்க முதலீடாகத் தங்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

தங்கத்தில் எப்படி லாபகரமாக முதலீடு செய்வது?

ஓர் இந்திய முதலீட்டாள ராக, பல வகையான தங்க முதலீட்டுத் திட்டங்கள் மூலம் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். அனைத்து முதலீட்டுத் திட்டங்களிலும், மிகவும் எளிதில் பணமாக்கக்கூடிய தாகவும் குறைவான செலவு விகிதத்தைக் கொண்டதாக வும் லாபகரமான முதலீடாக வும் தங்க இ.டி.எஃப் (Gold ETF) இருக்கிறது.

தங்க இடிஎஃப் என்பது பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஒரு திட்டம் (exchange-traded fund - ETF) ஆகும். இதன் மதிப்பு உள்நாட்டில் பிசிக்கல் தங்கத்தின் விலைமாற்றத் துக்கேற்ப மாறும். இந்த கோல்டு இ.டி.எஃப் என்பது மின்னணு வடிவத்தில் (Electronic Form) தங்கத்தை முதலீட்டாளர் வாங்குவதாகும். அதாவது, இதை வாங்க டீமேட் கணக்கு கட்டாயமாகும். டீமேட் கணக்கு இல்லை எனில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் (ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) முதலீடு செய்யலாம்.

தீபாவளிக்கு கோல்டு இ.டி.எஃப் முதலீடு... உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு பிரகாசம்..!

24 காரட் தங்கத்துக்கு இணையானது...

கோல்டு இ.டி.எஃப்பின் யூனிட் மதிப்பு 24 காரட் தங்கத்துக்கு இணையாக இருக்கும். பங்குகளை வாங்கி விற்பது போல் ஒருவர் கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை பங்குச் சந்தை வர்த்தக நேரத்தில் வாங்கவும் விற்கவும் முடியும். அதாவது, நிறுவனப் பங்கைப் போலவே, கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. மேலும், சந்தை விலையில் வர்த்தக நேரத்தில் சுலபமாக ஆன்லைன் மூலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம். கோல்டு இ.டி.எஃப் இதர தங்க முதலீடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான செலவு விகிதத்தைக் கொண்டுள்ளது.

கோல்டு இ.டி.எஃப் மூலம் முதலீடு செய்யும் போது, முதலீட்டாளர்கள் அவர்களின் வசதிக்கேற்ப இடையிடையே முதலீடு செய்து வரலாம் அல்லது மொத்தத் தொகை முதலீட்டை மேற்கொள் ளலாம்.

தங்கத்தின் தரம், அதை பத்திரமாக வைத்திருப் பதற்கு செய்ய வேண்டிய வேலைகள், செய்கூலி, சேதாரம், விற்கும்போது பழைய நகை என்பது பற்றியெல்லாம் ஒருவர் கவலைப்படத் தேவையில்லை.

எனவே, இந்தத் தீபாவளித் திருவிழாவில் தங்க இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் பிரகாசத்தைச் சேர்க்க வாழ்த்துகள்.