Published:Updated:

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள்... பலன் தரும் இண்டெக்ஸ் ஃபண்ட்...!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இண்டெக்ஸ் ஃபண்ட்

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள்... பலன் தரும் இண்டெக்ஸ் ஃபண்ட்...!

இண்டெக்ஸ் ஃபண்ட்

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

சிந்தன் ஹரியா , தலைவர் - முதலீட்டுத் திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் ஏ.எம்.சி

சுமுகமான நிதிப் பயணத்தின் (Financial Journey) திறவுகோல்கள் என்று எதைச் சொல்லலாம்? முதலீட்டை முன் கூட்டியே தொடங்குவது, பரவலாக்கப்பட்ட முதலீட்டுக் கலவையை (Diversified Investment Portfolio) உருவாக்குவது மற்றும் தொடர்ந்து முதலீடு செய்வதே அந்தத் திறவுகோல்கள் ஆகும்.

சிந்தன் ஹரியா 
தலைவர் - முதலீட்டுத் திட்ட  மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் ஏ.எம்.சி
சிந்தன் ஹரியா தலைவர் - முதலீட்டுத் திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் ஏ.எம்.சி

முதலீட்டுப் பயணத்தில் சிக்கல்கள்...

இந்த முதலீட்டுப் பயணத்தைச் சிக்கல் இல்லாமல் தொடர்வது அனுபவமுள்ள மற்றும் புதிய பங்குச் சந்தை முதலீட்டாளர் களுக்கு சவாலான விஷயம்தான். முதல்முறை முதலீட்டாளர்கள் தங்களது பங்கு முதலீட்டுப் பயணத்தின் தொடக்கத்தில் சில சவால்களை எதிர்கொள்கிறார்கள். சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்க இயலாமை அல்லது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க இயலாமை, வெவ்வேறு துறைகள், தொழில்கள் மற்றும் பல்வேறு சந்தை மதிப்புகொண்ட நிறுவனப் பங்கு சார்ந்த முதலீட்டுக் கலவையை உருவாக்குவதில் சிரமத்தைச் சந்திக்கிறார்கள்.

இந்தச் சவால்கள் அனைத்தையும் எல்லா முதலீட்டாளர்களும் எதிர்கொண்டிருப் பார்கள் என்றாலும், முதல்முறை முதலீட்டாளர் களுக்கு இந்தச் சவால்கள் அதிகமாகவே இருக்கும்.

இந்தச் சிக்கலுக்கு எளிய தீர்வு ஒன்று உண்டு. அதுதான், இண்டெக்ஸ் ஃபண்டுகள் (Index Funds) போன்ற குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. பங்குச் சந்தை முதலீட்டுக்கு வந்துள்ள புதிய முதலீட்டாளர் கள் இந்தச் சிக்கல்களை சரியாகக் கையாள இந்த இண்டெக்ஸ் ஃபண்டுகள் நிச்சயம் உதவும். பங்கு முதலீட்டில் கிடைக்கும் பல்வேறு நன்மைகளை சிறந்த முறையில் அறுவடை செய்ய இந்தத் திட்டம் மிகவும் பயன் தருவாக இருக்கும்.

பங்குச் சந்தைக்குப் புதியவர்கள்... பலன் தரும் இண்டெக்ஸ் ஃபண்ட்...!

இண்டெக்ஸ் ஃபண்டுகள் என்றால் என்ன?

இண்டெக்ஸ் ஃபண்டுகள் ஓர் அடிப்படைக் குறியீட்டின் (Underlying Index) கலவையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இதன் அர்த்தம், அந்த அடிப்படைக் குறியீட்டில் இருக்கும் அனைத்துப் பங்குகளிலும் முதலீடு செய்வதாகும்.

மேலும், அந்த அடிப்படைக் குறியீட்டில் பங்குகளுக்கு என்ன விகிதாசாரம் தரப் பட்டிருக்கிறதோ, அதே விகிதாசாரத்தில் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்கிறது. உதாரணமாக, நிஃப்டி50 குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு இண்டெக்ஸ் ஃபண்டை எடுத்துக் கொண்டால், அத்தகைய இண்டெக்ஸ் ஃபண்டில் நிஃப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் எல்லா நிறுவனப் பங்கு களிலும் முதலீடு செய்யப்படும். அதுவும் நிஃப்டி 50 குறியீட்டின் அதே வெயிட்டேஜில் முதலீடு செய்யப்படும்.

நிஃப்டி50 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் பங்குகளில் மாற்றம் ஏற்பட்டால், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் அதற்கேற்ப நிறுவனப் பங்கு களின் வெயிட்டேஜ்களில் மாற்றம் செய்யப் படும். அப்படிச் செய்யும்போது, இண்டெக்ஸ் ஃபண்டுகள், கண்காணிப்புப் பிழைக்கு உட்பட்டு, அடிப்படைக் குறியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தையொட்டி லாபம் கொடுக்கும்.

மேலும், ஒரு முதலீட்டாளர் இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகளான நிஃப்டி 50, சென்செக்ஸ் 30, நிஃப்டி நெக்ஸ்ட் 50, மிட்கேப் 150, ஸ்மால்கேப் 250 மற்றும் சர்வதேச பங்குச் சந்தை குறியீடான நாஸ்டாக் 100 போன்றவற்றின் அடிப்படையில் இண்டெக்ஸ் ஃபண்டுகளிலிருந்து தங்களுக்கு ஏற்றதைத் தேர்வு செய்ய முடியும்.

இண்டெக்ஸ் ஃபண்டுகள் தரும் நான்கு நன்மைகள்...

இண்டெக்ஸ் ஃபண்டுகள் சில குறிப்பிட்ட நன்மைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. அவை முதல்முறை முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையின் நீண்ட கால லாபத்தைப் பெற சுலபமாக உதவுகின்றன. அவற்றில் முக்கியமான நான்கு நன்மைகள் வருமாறு...

முதலீட்டுப் பரவலாக்கம்

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, முதலீட்டில் சரியான பரவலாக்கத்தை (Diversification) மேற்கொள்வது குறிப்பாக, பங்குச் சந்தை சொத்துப் பிரிவுக்குள் ஒரு சவாலான பணியாக இருக்கலாம். இருந்தாலும், பெஞ்ச்மார்க் குறியீடுகள் பொதுவாக, பரந்த அடிப்படையிலானவை. தவிர, பல துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கியவை ஆகும். இவற்றில் சில வளர்ச்சிப் பங்குகள், சில சுழற்சியானவையாக இருப்பதுடன், சில பங்குகள் மதிப்புப் பங்குகளாகவும் உள்ளன.

நீங்கள் ஒரு இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, உங்கள் முதலீட்டு அடிப்படைக் குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் வெவ்வேறு துறை சார்ந்த நிறுவனப் பங்கு களில் முதலீடு செய்யப்படுவதால், பரவலாக்கத்தின் பலனை நீங்கள் தானாகவே அடைவீர்கள்.

குறைவான செலவுகள்

பொதுவாக, இண்டெக்ஸ் ஃபண்டுகளுடன் தொடர்புடைய செலவுகள் 1.5 சதவிகிதத்துக்குமேல் செல்லக் கூடாது என செபியால் வரையறுக்கப்பட்டுள்ளது. இது பங்குச் சந்தை சார்ந்த ஆக்டிவ் ஃபண்டுகளில் அதிகபட்சம் 2.5 சதவிகிதமாக உள்ளது.

இந்த ஃபண்டுகளில் முதலீட்டுக்கான பங்குகள் குறியீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால், நிதி மேலாளருக்கு அதிக வேலையில்லை. இதனால், பரிவர்த்தனை செலவுகள் குறைவாக இருப்பதால், இந்த வகை ஃபண்டுகளில் செலவு விகிதம் மிகக் குறைவாக இருக்கின்றன. சராசரியாக சுமார் 0.5 - 1 சதவிகிதமாக உள்ளது.

குறியீடு அளவுக்கு வருமானம்

பங்குச் சந்தை முக்கியமான குறியீடுகளின் அளவுக்கு வருமானம் எதிர்பார்ப்பவர் களுக்கு ஏற்றதாக இண்டெக்ஸ் ஃபண்டுகள் இருக்கின்றன. காரணம், இந்த ஃபண்டுகள், அதனை பின்பற்றும் குறியீடு களின் வருமானத்தைக் கிட்டத்தட்ட பிரதிபலிக்கின்றன.

இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, முதலீட் டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க்கை மட்டும்தான் சந்திக்க வேண்டிருக்கும்; கூடுதல் ரிஸ்க்கு களை அவர்கள் தவிர்க்க முடியும். அந்த வகையில், இது முதல்முறை பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

எஸ்.ஐ.பி வசதி

ஆக்டிவ் ஃபண்டுகள் போலவே, இண்டெக்ஸ் ஃபண்டு களில் தினசரி, வாரம், 15 நாள்கள், மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என எஸ்.ஐ.பி முறை யில் முதலீட்டை மேற்கொள்ள முடியும். இதனால், சந்தை ஏற்ற இறக்கத்தைச் சமாளித்து சராசரியாக நல்ல வருமானம் பெற முடியும்.

ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்து, சந்தையின் செயல்பாட்டுக் கேற்ற வருமானம் போதும் என்கிறவர்கள், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் தாராளமாக முதலீடு செய்யலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism