Published:Updated:

முதலீட்டின் மூலம் செல்வம் சேர்க்க உதவும் முக்கிய உத்தி..! ரிஸ்க்கைக் குறைக்கும் வழி...

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

I N V E S T M E N T

சதீஷ் குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், www.sathishspeaks.com

செல்வம் சேர்க்கும் அடிப்படை விதிமுறையில் (Thumb Rule) முக்கியமானது முதலீட்டுப் பரவலாக்கம். நம் முதலீட்டைப் பிரித்து செய்வதே இது.

சதீஷ் குமார் 
மியூச்சுவல் 
ஃபண்ட் 
விநியோகஸ்தர், 
www.
sathishspeaks.
com
சதீஷ் குமார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், www. sathishspeaks. com

ஏன் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்?

பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வதன் அடிப்படை நோக்கம், மூலதனம் மீதான ரிஸ்க்கைக் குறைப்பதாகும். முதலீட்டுப் பரவலாக்கம் என்பது முதலீட்டுக் கலவையின் (portfolio) ரிஸ்க்கைக் குறைக்கும் ஒரு நுட்பம்.

முதலீடு செய்யும் அனைவரும் அதிக வருமானம் ஈட்ட விரும்புகிறார்கள். ரிஸ்க் எடுக்காமல் அதிக வருமானம் பெற முடியாது. எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிக ரிட்டர்ன் கிடைக்கும்.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது தங்க நகை அல்லது ரியல் எஸ்டேட் என ஒரு குறிப்பிட்ட ஏதாவது ஒரு முதலீட்டில் மொத்தப் பணத்தையும் போட்டுவிடுகிறார்கள். இது மிகவும் தவறாகும். ஒரு குறிப்பிட்ட முதலீட்டுப் பிரிவு எப்போதும் லாபம் தரும் என்று சொல்ல முடியாது.

முதலீட்டின் மூலம் செல்வம் சேர்க்க உதவும் முக்கிய உத்தி..! ரிஸ்க்கைக் குறைக்கும் வழி...

அஸெட் அலொகேஷன் உத்தி...

முதலீட்டின் மூலம் பணவீக்க விகிதம் மற்றும் வருமான வரியைத் தாண்டிய நியாயமான வருமானம் பெற வேண்டும் எனில், முதலீட்டுத் தொகையை அஸெட் அலொகேஷன் உத்தி (Asset allocation strategy) என்கிற முறைப்படி, கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்), பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (பட்டிய லிடப்பட்ட நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்), தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

ஒருவரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், வாய்ப்பு வசதி, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். அதுவும் இந்த முதலீட்டுத் திட்டங்களில் தொடர்ச்சியாக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீடு செய்து வர வேண்டும். அப்படி செய்யும்போது, நீண்டகாலத்தில் ரிஸ்க் குறைக்கப்படுவதுடன், அதிக வருமானத்துக்கான வாய்ப்பும் உருவாகிறது.

உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறைவான வருமானம் தரும் காலத்தில் ஃபிக்ஸட் இன்கம் கடன் ஃபண்டுகள் மற்றும் தங்கம் நல்ல வருமானத்தைக் கொடுப்பதைக் காணலாம்.

மிக முக்கியமாக, சொத்துப் பிரிவுகளிலும் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது மிக அவசியமாகும். உதாரணமாக, பங்கு முதலீடு என்று வரும்போது ஒரு குறிப்பிட்ட பங்கில் மொத்த முதலீட்டையும் போட்டு விடக் கூடாது. இங்கேயும் ரிஸ்க்கைக் குறைத்து வருமானத்தை அதிகரிக்க நான்கைந்து வெவ்வெறு துறைகளைத் (உதாரணம் ஐ.டி, வங்கி, பார்மா, ரியல் எஸ்டேட்) தேர்வு செய்து அவற்றில் நான்கைந்து நிறுவனப் பங்குகளில் (உதாரணம், எஸ்.பி.ஐ, இன்ஃபோசிஸ், லூபின், லோதா) முதலீடு செய்வது அவசியம். இதேபோல், ஈக்விட்டி ஃபண்ட் என்று வருகிறபோது ஃபிளெக்ஸி கேப், மல்ட்டிகேப், லார்ஜ்கேப், மிட் கேட், ஸ்மால்கேப் ஃபண்ட் எனப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதுவும் ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலேயே இந்த அனைத்து ஃபண்ட் பிரிவுகளிலும் முதலீடு செய்யக் கூடாது. 2, 3 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங் களில் பிரித்து செய்வதன் மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.

சிறு முதலீட்டாளர் முதல் கோடீஸ் வரர்கள் வரை அனைவருக்கும் முதலீட்டுப் பரவலாக்கம் ஏற்றது. இது நீண்டகாலத்தில் செல்வம் உருவாக்க முக்கியப் பங்கு வகிக்கிறது.