Published:Updated:

உங்கள் ஃபண்ட் முதலீடு லாபம் தரவில்லை எனில்..?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

உங்கள் ஃபண்ட் முதலீடு லாபம் தரவில்லை எனில்..?

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் செயல்பாடு பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது. நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் தரவில்லை எனில், அதற்கு என்ன காரணம் என்பதை அலசி ஆராய வேண்டும். கீழ்க்கண்ட காரணங்களால் ஒரு ஃபண்ட் சரியாகச் செயல்படாமல் போகலாம். எனவே, இந்தக் காரணங்கள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

எஸ்.கார்த்திகேயன் 
நிதி ஆலோசகர், 
Winworthwealth.com
எஸ்.கார்த்திகேயன் நிதி ஆலோசகர், Winworthwealth.com

1. திட்டத்தின் முதலீட்டுத் தன்மை மாறுதல்...

ஒருவர் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் முதலீட்டுத் தன்மை மாறுபடும்போது, தற்காலிகமாக அதன் வருமான செயல்பாடு மாறும். அப்போது குறுகிய காலத்துக்கு வருமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

உதாரணமாக, ஒரு மல்ட்டிகேப் ஃபண்ட், ஃபிளெக்ஸி கேப் ஃபண்டாக மாறும்போது குறுகிய காலத்துக்கு ஃபண்டின் செயல்பாடு சரியில்லாமல் போகலாம். அதாவது, மல்ட்டிகேப் ஃபண்டில் திரட்டப்பட்ட பணம், லார்ஜ்கேப், மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் தலா 25% எனப் பிரித்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். இது ஃபிளெக்ஸிகேப் ஃபண்டாக மாறும்போது பலவிதமான சந்தை மதிப்பு கொண்ட பங்குகளில் முதலீடு செய்யப்படும். அதாவது, லார்ஜ்கேப், மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் இவ்வளவு சதவிகிதம்தான் முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் முதலீடு செய்யப்படும்.

இப்படி ஃபண்டின் தன்மையை மாற்றும்போது, பல நிறுவனப் பங்குகளை விற்க வேண்டியிருக்கும்; புதிதாகப் பல பங்குகளில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். புதிய நிறுவனப் பங்குகள் லாபம் கொடுக்க சிறிது காலம் எடுக்கும்; அந்தக் காலகட்டத்தில் ஃபண்டின் செயல்பாடு மந்தமாக இருக்கும். அப்போது அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது.

உங்கள் ஃபண்ட் முதலீடு லாபம் தரவில்லை எனில்..?

2. குறிப்பிட்ட துறைகளின் செயல்பாடு...

எல்லா காலத்திலும் எல்லா துறை சார்ந்த நிறுவனங் களும் சிறப்பாகச் செயல்படும் என்று சொல்ல முடியாது. கூடவே, அவற்றின் பங்கு விலை உயரும் என்றும் சொல்ல முடியாது. குறிப்பிட்ட காலத்தில் சில துறைகளின் செயல்பாடு மந்தநிலையில் காணப்படலாம். அந்த சூழ்நிலை மாற சில காலம் காத்திருக்க வேண்டும். அது அந்த ஃபண்டை நிர்வகிக்கும் ஃபண்ட் மேஜேனருக்கும் தெரியும். அந்தக் குறிப்பிட்ட துறை நிறுவனப் பங்குகள் லாபத்துக்கு வரும் வரை அவர் காத்திருப்பார். அதேபோல், முதலீட்டாளராகிய நீங்களும் பொறுமையுடன் சில காலாண்டுகள் அல்லது ஓராண்டு வரை காத்திருப்பது நல்லதாகும்.

உங்கள் ஃபண்ட் முதலீடு லாபம் தரவில்லை எனில்..?

3. பெஞ்ச்மார்க்குடன் வருமான ஒப்பீடு...

முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் வருமானத்தை அதன் பெஞ்ச்மார்க் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போதும் இறக்கத்தில் இருக்கும்போதும் ஃபண்டின் வருமானத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட் திட்டம் ஆண்டுக்கு 7% வருமானம் தந்திருக்கிறது. அதே நேரத்தில், அதன் பெஞ்ச் மார்க் வருமானம் 12 சதவிகிதமாக இருக்கிறது. இந்த நிலையில், அந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிடும்போது சரியாகச் செயல்படவில்லை என்றுதான் அர்த்தம்.

அதே நேரத்தில், மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் கடந்த ஓராண்டில் மைனஸ் 4% வருமானம் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில், அதன் பெஞ்ச் மார்க் வருமானம் மைனஸ் 7 சதவிகிதமாக இருக்கிறது. இந்த நிலையில், அந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிடும் போது நன்றாகச் செயல்படுகிறது என்று அர்த்தமாகும். அதாவது, பெஞ்ச்மார்க்கைவிட குறை வாகவே இறக்கம் கண்டிருப்ப தால், அது நல்ல ஃபண்ட் என்று தான் அர்த்தம்.

ஒரு நல்ல ஈக்விட்டி ஃபண்ட் என்பது பங்குச் சந்தையின் இறக்கத்தைவிடக் குறைவதாக இறக்கம் காண்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், பங்குச் சந்தையின் ஏற்றத்தை விட அதிகமாக ஏற்றம் காண்ப தாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து ஒரு ஃபண்டின் வருமானம் அதன் பெஞ்ச் மார்க்கைவிடக் குறைவாக இருந்தால், நிச்சயம் கவனத்தில் கொள்வது அவசியாகும். ஒரு ஈக்விட்டி ஃபண்ட் தொடர்ந்து அதன் பெஞ்ச்மார்க்கைவிட 3-5 சதவிகிதத்துக்கு மேல் குறைவான வருமானம் மற்றும் நீண்ட காலத்தில் ஆண்டுக்குச் சராசரி யாக 12 சதவிகிதத்துக்கும் குறை வான வருமானம் தந்தால் அந்த ஃபண்டிலிருந்து வெளியேறி வேறு நல்ல ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக அமையும்.

நம்மில் பொதுவாக, ஏதாவது ஒரு முதலீட்டுத் திட்டத்தின் லாபம் சற்றுக் குறைவாகவோ, விலை குறைந்திருந்தாலோ நாம் விட்டதை அந்த ஃபண்டிலேயே மீண்டும் பிடிக்க முயற்சி செய்ய வேண்டியதில்லை. நாம் நம் ஒட்டுமொத்த முதலீட்டுக் கலவையின் லாபத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, நாம் முதலீட்டில் வருமானத்தைத் துரத்த வேண்டிய தில்லை.

4. மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டுப் பாணி...

ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மூலமான வருமானம், அதன் முதலீட்டுப் பாணியை (Style Of Investing) பொறுத்துள்ளது. சில ஃபண்ட் மேனேஜர்கள், மதிப்பு (Value) அடிப்படையில் சில ஃபண்ட் மேனேஜர்கள் வளர்ச்சி (Growth) அடிப்படையில் முதலீட்டுக் குப் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். வளர்ச்சி பாணி முதலீட்டில் லாபம் உடனடியாகத் தெரியும். மதிப்பு பாணி யில் ஃபண்ட் மூலமான வருமானம் உடனே தெரிய வராது; நீண்ட காலத்தில்தான் அந்த மாதிரியான ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். இதைக் கணக்கில்கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வருமானத்தை அலசி ஆராய்வது அவசியம்.

பங்குச் சந்தையில் அதீத இறக்கத்தால் குறுகிய காலத்தில் ஈக்விட்டி ஃபண்ட் அதிக இழப்பைச் சந்திக்கும்பட்சத்தில் அது பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. எது எப்படி இருந்தாலும் முதலீட்டாளர் அவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம், நிதி இலக்கு, அஸெட் அலொகேஷன் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மியூச்சுவல் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

பல நேரங்களில் யாராவது சொன்னார்கள் என்பதற்காகக் கடந்த கால செயல்பாட்டை வைத்து மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்திருப்போம். அவை இப்போது சரியாகச் செயல்படவில்லை எனில், நல்ல நிதி ஆலோசகரின் உதவியுடன் அந்த ஃபண்டில் முதலீட்டைத் தொடரலாமா, வெளியேறிவிடலாமா என்கிற முடிவுக்கு வருவது நல்லது. சரியாகச் செயல்படாத ஃபண்டுகளை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொண்டு அதிக இழப்பைச் சந்திப்பதற்குப் பதில், குறைவான இழப்புடன் வெளியேறி வேறு நல்ல ஃபண்டில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது புத்திசாலித்தனமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism