Published:Updated:

என்.பி.எஸ்... இனி முதலீட்டு ஒதுக்கீட்டை நான்கு முறை மாற்றலாம்..!

என்.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
என்.பி.எஸ்

முதலீடு

என்.பி.எஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து புத்தாண்டையொட்டி நல்ல செய்தி வந்திருக் கிறது. அதாவது, என்.பி.எஸ் சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று என்.பி.எஸ் முதலீட்டு ஒதுக்கீட்டை ஆண்டுக்கு நான்கு முறை மாற்றிக்கொள்ளலாம் என்பதே அந்த நல்ல செய்தி. இதுவரை ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே என்.பி.எஸ் முதலீட்டு ஒதுக்கீட்டை மாற்றிக்கொள்ள முடியும் என்கிற நிலையே இருந்தது.

என்.பி.எஸ்... இனி முதலீட்டு ஒதுக்கீட்டை நான்கு முறை மாற்றலாம்..!

இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் சந்தையின் மாறுதல்களுக்கேற்ப என்.பி.எஸ் முதலீட் டாளர்கள் தங்களின் முதலீட்டு ஒதுக்கீட்டை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணமாக, நிஃப்டி 50 அடுத்தமுறை 10% குறைந்து வர்த்தகமாகிறது எனில், என்.பி.எஸ் சந்தா தாரர்கள் தங்களின் பங்கு முதலீட்டு ஒதுக்கீட்டை அதிகரித்துக்கொள்ள முடியும். இதன்மூலம் தங்களுடைய முதலீட்டின் மீதான வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதே போல, வட்டி விகிதம் உயர்த்தப்படுமானால், சந்தாதாரர்கள் தங்களின் ஒதுக்கீட்டைக் கடன் திட்டங்களில், கடன் பத்திரங்களில் உயர்த்திக்கொள்ளலாம்.

பொதுவாகவே, என்.பி.எஸ் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்டுடன் பலரும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஆனால், என்.பி.எஸ் முதலீடு வளமான ஓய்வுக்காலத்துக்கானது. என்.பி.எஸ் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் போல பார்க்காமல், இந்த முதலீட்டு ஒதுக்கீட்டை மாற்றும் வசதிகளைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரித்துக்கொள்ளலாம். என்.பி.எஸ் முதலீட் டாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது!