Published:Updated:

வருகிறது பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

வருகிறது பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்

இந்தியாவில் தற்போது வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டான இ.எல்.எஸ்.எஸ் (ELSS - Equity Linked Saving Scheme) ஃபண்ட் மேனேஜர்களால் அதிக முயற்சி எடுத்து நிர்வகிக்கப்படும் ஆக்டிவ் ஃபண்டாக (Active Fund) உள்ளது. இந்த நிலையில், பங்குச் சந்தை மதிப்பின் (Market Capitalisation) அடிப்படையில் டாப் 250 நிறுவனங்களில் முதலீடு செய்யும் பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகம் செய்யலாம் என இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

ஆக்டிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் அல்லது பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆக்டிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் அல்லது பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏதாவது ஒன்றைத் தான் செயல்படுத்த வேண்டும் என செபி தெரிவித்துள்ளது. இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின்கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. மேலும், வரி சேமிப்புத் திட்டங்களில் மிகவும் குறைவான லாக்இன் (மூன்று ஆண்டுகள்) கொண்டது இதுதான். இந்தப் புதிய ஃபண்ட் பிரிவு 2022 ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. நிஃப்டி 50, நிஃப்டி நெக்ஸ்ட் 50, நிஃப்டி 100, சென்செக்ஸ் 30 போன்ற ஏதாவது குறியீடுகளைப் பின்பற்றி புதிய ஃபண்ட் வெளியிடப்படும்.

வருகிறது பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

இ.எல்.எஸ்.எஸ் இண்டெக்ஸ் ஃபண்ட்...

ஆக்டிவ் ஃபண்டுக்கும் பேசிவ் ஃபண்டுக்கும் வித்தியாசம் தெரிய, பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் எந்த இண்டெக்ஸைப் பின்பற்றி முதலீடு செய்யப்படுகிறதோ, அந்தப் பெயர் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் பெயருடன் சேர்க்கப்படும். அதாவது, இ.எல்.எஸ்.எஸ் இண்டெக்ஸ் (Index ELSS) என்பதுபோல் பெயர் இருக்கும்.

தற்போதைய நிலையில், ஏற்கெனவே ஆக்டிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், செபியின் விதிமுறைப்படி பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் திட்டத்தைக் கொண்டு வர முடியாது. அப்படி கொண்டு வர வேண்டும் எனில், ஏற்கெனவே ஆக்டிவ் ஃபண்டாக இருப்பதை ஏதாவது குறியீட்டைப் பின்பற்றி பேசிவ்வாக மாற்ற வேண்டும். இந்த மாற்றத்தை எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்யும் எனத் தெரியவில்லை. எனவே, இதுவரைக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் திட்டத்தைக் கொண் டிருக்காத மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்தான் பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஏப்ரல் நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடானது 36 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் கூட்டமைப்பான ஆஃம்பி (AMFI), மியூச்சுவல் ஃபண்ட் சரியானது (Mutual Fund Sahi Hai) என்று பிரமாண்டமாக பிரசாரம் செய்தது. இதே போல, பேசிவ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களையும் பிரபலப்படுத்த புதிய பிரசாரத்தை கையில் எடுக்கும் வேலையில் இறங்கியிருப்பதாகத் தகவல். இதற்கேற்ப செபி அமைப்பும் பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் மற்றும் கடன் ஃபண்டுகளில் இ.டி.எஃப் திட்டங் களைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

செபியானது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் (corporate debt), அரசு கடன் பத்திரங்கள் (government debt) மற்றும் ஹைபிரிட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் பேசிவ் ஃபண்டுகளை (passive ETFs and index funds) அறிமுகம் செய்யச் சொல்லியுள்ளது. இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதி குறைந்தபட்சம் ‘A’ தரக்குறியீடு மற்றும் அதற்கு மேற்பட்ட தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் குறைவாக இருக்கும்.

வருகிறது பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் - முதலீட்டாளர்களுக்கு லாபமா?

பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டால் முதலீட்டாளர் களுக்கு இரண்டு வகையில் லாபமாக அமையக்கூடும். ஒன்று, ஃபண்டின் ரிஸ்க் குறையும், அடுத்து, கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தற்போது இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் நிதி, லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனப் பங்கு களில் பரவலாக ஃபண்ட் மேனேஜரின் விருப்பத்துக்கேற்ப முதலீடு செய்யப்படுவதால், அதிக ரிஸ்க்கைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால், பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், டாப் 250 நிறுவனங்களின் பங்குகளில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதால், லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகள் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகளில்தான் முதலீடு செய்ய முடியும். ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முடியாது. அந்த வகையில், ஆக்டிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளுடன் ஒப்பிடும் போது, பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ரிஸ்க் குறைவானதாக இருக்கும்.

இந்த பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செலவு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், முதலீட்டாளர் களுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என எதிர் பார்க்கப்படுகிறது. பொதுவாக, ஆக்டிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செலவு விகிதம் சுமார் 1.5 சதவிகிதமாக இருக்கும். இது பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் சுமார் 0.5 சதவிகிதமாக இருக்கும்.

கூடிய விரைவில் பேசிவ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் அறிமுகமாகும் என எதிர் பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism