Published:Updated:

முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைத்து லாபமீட்டும் உத்திகள்..!

லாபமீட்டும் உத்திகள்
பிரீமியம் ஸ்டோரி
லாபமீட்டும் உத்திகள்

முதலீட்டுத் திட்டம்

முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைத்து லாபமீட்டும் உத்திகள்..!

முதலீட்டுத் திட்டம்

Published:Updated:
லாபமீட்டும் உத்திகள்
பிரீமியம் ஸ்டோரி
லாபமீட்டும் உத்திகள்

ராகவ் ஐயங்கார், முதன்மை வணிக அதிகாரி, ஆக்ஸிஸ் ஏஎம்சி

முதலீட்டில் மூலதன அதிகரிப்பை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் (Risk) என்பது பேரம் பேசி குறைக்க முடியாத மற்றும் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகும்.

முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள், நிறுவனப் பங்குகள், தங்கம், கடன் ஃபண்டுகள், கார்ப்பரேட் பாண்டுகள், அரசுப் பத்திரங்கள் மற்றும் பரந்த அளவிலான நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது. இந்த நிதித் திட்டங்களின் மதிப்பு நிலையானதல்ல. மேலும், பல வெளிப்புற மற்றும் உள்காரணிகளால் பாதிக்கப்படும். இந்த நிச்சய மற்றத் தன்மைகள் இதிலுள்ள ரிஸ்க் மூலம் ஏற்படுகின்றன.

ராகவ் ஐயங்கார் 
முதன்மை வணிக அதிகாரி, 
ஆக்ஸிஸ் ஏஎம்சி
ராகவ் ஐயங்கார் முதன்மை வணிக அதிகாரி, ஆக்ஸிஸ் ஏஎம்சி

இளமையில் ரிஸ்க் எடுப்பதே சரி...

இளம் புதிய முதலீட்டாளர், குறைந்த ரிஸ்க் உள்ள முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குவது சிறந்தது என நம்புவது எளிது. இருந்தாலும், நிதி நிபுணர்கள் பொதுவாக இளம் முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் தாங்கும் திறன் கொண்டவர்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.

வயதாகும்போதும், அவர்களின் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும்போதும், குறைந்த அல்லது மிதமான ரிஸ்க் கொண்ட முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். ஆனால், இளம் வயதில் முதலீட்டில் ரிஸ்க் எடுப்பது நல்லதாகும்.

உண்மையைச் சொல்வதானால், ஒரு சிறந்த முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்க சரியான சூத்திரம் எதுவும் இல்லை; இது முதலீட்டாளரின் நிதி இலக்கு, முதலீட்டுக் காலம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது ஆகும்.

முதலீட்டாளர்கள், முதலீட்டில் உள்ள பல்வகையான ரிஸ்க்குகளைப் புரிந்துகொள்வது கட்டாயம் ஆகும். இது அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனை அடையாளம் காண்பது மட்டும் அல்லாமல், சரியான சொத்து ஒதுக்கீட்டைத் (Asset Allocation) தேர்ந்தெடுத்து சாத்தியமான ரிஸ்க்கைக் குறைக்கவும் உதவுகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, இரண்டு முக்கியமான வகைகளின்கீழ் ரிஸ்க்குகளை வகைப்படுத்தலாம். முறையான ரிஸ்க் (Systematic Risk) மற்றும் முறையற்ற ரிஸ்க் (Unsystematic Risk) ஆகியவையே அந்த இரண்டு வகை ரிஸ்க்குகள் ஆகும். இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைத்து 
லாபமீட்டும் உத்திகள்..!

முறையான ரிஸ்க் எடுப்பது என்றால்...

ஒரு குறிப்பிட்ட, பட்டியலிடப்பட்ட நிறுவனம் அல்லது தனிநபரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகளால் இந்த வகையான ‘ரிஸ்க்’ ஏற்படுகிறது. இதனால் முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவுக்குக் கடுமையான இழப்பு ஏற்படலாம்.

இந்த வகையான ரிஸ்க்கில் பல மேக்ரோ பொருளாதாரக் காரணிகள் உள்ளன. இதன் விளைவாக, ஒட்டுமொத்த சந்தையில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

முறையான ரிஸ்க்கைக் குறைப்பது கடினம். முதலீட்டைப் பரவலாக்குதல் (Diversification) மட்டுமே முதலீட்டாளரின் ரிஸ்க்கைத் தீர்க்கக் காரணமாக அமைந்துவிடாது. அஸெட் அலொகேஷன் என்கிற முறையைப் பின்பற்று வதன் மூலமே ரிஸ்க்கைக் குறைக்க முடியும்!

முறையான ரிஸ்க்குகளில் மூன்று வகை ரிஸ்க்குகள்...

1. சந்தை ரிஸ்க்: ஒரு குறிப்பிட்ட ரிஸ்க் ஒட்டுமொத்த பங்குச் சந்தையையும் (குறிப்பிட்ட தொழில் அல்லது நிறுவனத்தை மட்டுமல்ல) பாதிக்கும் திறனைக் கொண்டிருக்கும்போது, அது ‘சந்தை ரிஸ்க்’ (Market Risk) என்று குறிப்பிடப்படுகிறது. எதிர்பாராத நிகழ்வுகளால் (சமீபத்திய தொற்றுநோய் கோவிட் 19, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற) முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் பீதி, முதலீட்டாளர்களை ஒரு மந்தை மனநிலையைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளக்கூடும். இதனால், பங்குகளின் விலைகள் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகின்றன.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நாளில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தால், நன்றாகச் செயல்படும் நிறுவனங்களின் பங்கு விலைகளும் குறைய வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையற்ற காலங்களில், முதலீட்டாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள இரைச்சலுக்கு (Noise) ஆளாகாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவர்களின் பங்குச் சந்தை ஆலோசகர் அல்லது நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

2. வட்டி விகித ரிஸ்க்: கடன் வழங்கும் நிறுவனங்கள் வசம் இருக்கும் தொகை மற்றும் கடன் வாங்குபவர்களின் தேவையைப் பொறுத்து, வட்டி விகிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவை ஒன்றுக்கொன்று நேர்மாறான விகிதத்தில் உள்ளன. அதாவது, வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும்போது அதிக தொகையைக் கடனாகப் பெற முடிவதுடன், கடனுக்கான வட்டியும் குறைவாகவே இருக்கும். இதுவே கையிருப்புத் தொகை குறைவாக இருந்தால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். முதலீட்டாளர்கள் வெவ்வேறு கால முதிர்வுகள் கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது மூலம் தங்கள் முதலீட்டின் வருமானத்தைப் பாதுகாக்க முடியும்.

மேலும், ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகளை (Fixed-income Investments) வட்டி விகித பரிமாற்றங்கள் (Interest Rate Swaps), ஆப்ஷன்ஸ் அல்லது பிற வட்டி விகித டெரிவேட்டிவ்கள் மூலம் பாதுகாக்கும் (Hedge) வாய்ப்பும் அவர்களுக்கு உள்ளது.

3. பணவீக்க விகித ரிஸ்க்: எளிமையாகச் சொன்னால், பணவீக்க ரிஸ்க் (Inflation Risk) என்பது முதலீட்டின் வருமான செயல்திறனில் அல்லது ஒரு சொத்தின் மதிப்பு, பரந்த சந்தையில் மோசமாக பணவீக்கத் தால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையைக் குறிக்கிறது. அதாவது, ஒரு முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் அல்லது சொத்தின் மதிப்பு உயர்வு பணவீக்க விகிதத்தை விடக் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவை உண்மையில் வருமானம் தரவில்லை; மதிப்பு உயரவில்லை என்பதாகும்.

உற்பத்திச் செலவு, விநியோகச் சங்கிலித் தடைகள், ஊதிய மாற்றம் போன்றவற்றின் காரண மாக, பணவீக்கம், ஒரு தனிநபரின் வாங்கும் சக்தியை (Purchasing Power) நேரடியாகப் பாதிக்கிறது.

முறையற்ற ரிஸ்க் என்றால்..?

முறையற்ற ரிஸ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காரணி/காரணிகள் ஒரு நிறுவனத்தின் இயல்பான செயல்பாட்டைச் சீர்குலைப்ப தன் விளைவாக ஏற்படுவதாகும்.

உதாரணமாக, அரசுக் கொள்கைகளில் மாற்றங்கள், சந்தையில் இதர நிறுவனங்களின் போட்டி அதிகரிப்பு, நுகர்வோர் ரசனை மற்றும் விருப்பங்களில் மாற்றம், மாற்றுப் பொருள்கள் அதிகரிப்பு, தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றை முறையற்ற ரிஸ்க்குகள் எனலாம். இது போன்ற சூழ்நிலைகள் ஒரு நிறுவனத்தின் செயல்திறனை நேரடியாகப் பாதிக்கலாம்.

முதலீட்டாளரின் முதலீட்டுக் காலம், தொகுப்பு நிதி மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து, தரமான முதலீட்டுப் பிரிவுகள் / சொத்துகள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீட்டுக் கலவையை கவன மாகப் பரவலாக்குவதன் மூலம் மேற்கண்ட ரிஸ்க்குகளைக் குறைக்க முடியும்.

முறையற்ற ரிஸ்க்கின் சில வகைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

4. வணிக ரிஸ்க்: தொற்றுநோய் கோவிட் 19 பரவல் என்பது பல வணிக நிறுவனங்களுக்கு ஒரு கண் திறப்பாளராக (Eye-opener) உள்ளது.

சிறப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதுமை மற்றும் நல்ல வாடிக்கையாளர் அனுபவத் தைக் கொண்ட சிறந்த வணிக மாதிரியைக் கொண்ட வணிகங் கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே எதிர்காலத்திலும் வெற்றிகரமாகச் செயல்படும்.

5. கடன் ரிஸ்க்: கடன் ரிஸ்க் (Credit risk) என்பது கடன் வாங்கும் நிறுவனம் ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை மற்றும் வட்டியைத் திரும்பச் செலுத்துவதில் தவறு வதைக் குறிக்கும். அந்த வகையில் கடன் பத்திரங்கள் மற்றும் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் கடன் ரிஸ்க்கைச் சந்திக்கிறார்கள். இதைச் சமாளிக்க அதிக தரக் குறியீடு கொண்ட கடன் பத்திரங்கள் அல்லது பல்வேறு கடன் பத்திரங்களில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யும் கடன் ஃபண்டு களில் முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.

6. நற்பெயர் ரிஸ்க்: ஒரு நிறுவனத்தின் மிகவும் முக்கியமான மூத்த நிர்வாகி எதிர்பாராதவிதமாக நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு அல்லது நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் ஏதாவது இருந்தால், நிறுவனத்தின் மதிப்பு உடனடியாகக் குறைவதை நாம் அனைவரும் காண்கிறோம்.

நிறுவனத்தின் நற்பெயர் ரிஸ்க்குகள் எதிர்மறையான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். இந்த நற்பெயர் பிரச்னைகள் வணிகத்தின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது நிறுவனத்தில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும். இதனால், நிறுவனத்தின் கடன் பத்திர மதிப்பு மற்றும் நிறுவனப் பங்கின் மதிப்பு மிகவும் குறையக்கூடும்.

இதைத் தவிர்க்க ஒரே ஒரு நிறுவனத்தில் மொத்த முதலீட்டையும் செய்வதை எப்போதும் தவிர்ப்பது நல்லது.முதலீட்டைப் பரவலாக்குவதன் மூலமே நீண்ட காலத்தில் நல்ல லாபத்தை அடைய முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பங்குச் சந்தை முதலீட்டில் பங்கின் விலை ஏற்ற இறக்கம் மற்றும் ரிஸ்க் ஆகியவை முக்கிய விஷயங்களாக இருக்கும். சந்தை இறக்கம் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு செல்வத்தை உருவாக்கும் சந்தை வாய்ப்புகளை உருவாக்கும். அதாவது, குறைந்த விலையில் பங்குகளை வாங்க அனுமதிப்பதன் மூலம் ஏற்ற இறக்கத்தை ஒரு நண்பராக்க முடியும்.

ஈக்விட்டி (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை ஃபண்டுகள்), ஃபிக்ஸட் இன்கம், கலப்பின திட்டங்கள், பல சொத்துகள், உலகளாவிய முதலீட்டுத் திட்டங்கள், தீர்வு சார்ந்த திட்டங்கள், ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பேசிவ் மியூச்சுவல் ஃபண்டுகள் (முக்கியமாக இண்டெக்ஸ் ஃபண்டுகள், இ.டி.எஃப்கள் மற்றும் ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள்) ஆகியவற்றில் கவனமாக முதலீட்டைப் பிரித்து செய்வது மூலம் ரிஸ்க்கைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism