Published:Updated:

பங்குச் சந்தை... டிவிடெண்ட் முதலீடு லாபகரமானதா?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தை... டிவிடெண்ட் முதலீடு லாபகரமானதா?

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

நம்மில் பெரும்பாலானோருக்கு டிவிடெண்ட் வருமானம் மீது ஓர் இனம் புரியாத ஆசை. நாம் முதலீடு செய்திருக்கும் பங்குக்கு டிவிடெண்ட் கிடைத்தால், அதைப் பலரிடம் சொல்லி மகிழ்வார்கள். இப்படி டிவிடெண்ட் வருமானத்துக்காக முதலீடு செய்வதை டிவிடெண்ட் முதலீடு (Dividend Investing) என்கிறோம்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

பங்கு டிவிடெண்ட் முதலீடு...

பங்கு முதலீட்டைப் பொறுத்தவரை, டிவிடெண்ட் என்பதை லாபத்தைப் பகிர்ந்து அளித்தல் எனலாம். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை பங்குச் சந்தை பட்டியலிட்டு இருக்கிறது. அந்த நிறுவனம் அதிக லாபம் ஈட்டுகிறது. அந்தப் பணம் நிறுவனத்துக்கு இப்போது தேவையில்லை என்கிற நிலையில், அந்த லாபத்தை நிறுவனத் தில் முதலீடு செய்திருக்கும் பங்கு முதலீட் டாளர்களுக்கு டிவிடெண்ட் என்கிற பெயரில் பிரித்துக் கொடுக்கும்.

பொதுவாக, நிறுவனங்கள் அதன் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை மற்றும் மதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக டிவிடெண்ட் வழங்கும். இந்த டிவிடெண்ட் பொதுவாக, நிதி ஆண்டில் ஒருமுறை வழங்கப் படும். அதே நேரத்தில், பல நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும்பட்சத்தில் மூன்று மாதங் களுக்கு ஒரு முறை அதன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிடும்போது இடைக்கால டிவிடெண்ட் (Interim Dividend) வழங்கி வருகின்றன. இது போக, நிதி ஆண்டு கடைசியில் இறுதி டிவிடெண்ட் (Final Dividend) வழங்குகின்றன.

ஒரு நிறுவனம் அதன் லாபம் முழுவதையும் பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டாக வழங்காது. அதன் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களுக்காக / புதிய தொழிற்சாலை அமைத்தல் / புதிய பொருள்கள் அறிமுகம் ஆகியவற்றுக்காக ஒரு பகுதியை எடுத்து வைத்துக்கொள்ளும்.

ஒரு நிறுவனத்துக்கு பணவரத்து (Cash Flow) நன்றாக இருக்கும்பட்சத்தில்தான் அந்த நிறுவனத்தால் டிவிடெண்ட் கொடுக்க முடியும். மேலும், ஒரு நிறுவனம் டிவிடெண்ட் தர ஆரம்பித்துவிட்டால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனத்துக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து மதிப்பு இருந்து வரும்.

எந்தெந்த நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்குகின்றன; அதுவும் தொடர்ந்து வழங்கு கின்றன என்பதைத் தேடிக் கண்டுபிடித்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். இப்படி முதலீடு செய்வதன் நோக்கம், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் ஆண்டுதோறும் வட்டி வருமானம் பெறுவது போல, பங்கு முதலீட்டில் டிவிடெண்ட் வருமானம் பெறுவது ஆகும்.

நல்ல நிறுவனப் பங்கில் முதலீடு செய்துவிட்டு, நீண்ட கால முதலீட்டாளராக இருக்கும்பட்சத்தில் கணிசமான டிவிடெண்ட் வருமானத்தைப் பெற முடியும். இதற்கு சிறந்த உதாரணம், விப்ரோ நிறுவனப் பங்காகும். 1980-ம் ஆண்டில் விப்ரோ பங்கில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், அதற்கு 100 பங்குகள் கிடைத்திருக்கும். போனஸ் பங்குகள், பங்கு பிரிப்பு ஆகியவற்றால் இந்த 100 பங்குகள், இன்றைக்கு 1,92,00,000 பங்குகளாக (1.92 கோடி) அதிகரித்திருக்கிறது. 2022 மார்ச் மாதம் இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.6 டிவிடெண்ட் வழங்கியிருக்கிறது. 1980-ல் வாங்கிய 100 பங்குகளை ஒருவர் விற்காமல் தொடர்ந்து வைத்திருந் தால், அவருக்கு 2022 மார்ச்சில் டிவிடெண்டாக மட்டும் ரூ.11,52,00,000 அதாவது, ரூ.11.52 கோடி கிடைத்திருக்கும்.

பங்குச் சந்தை... டிவிடெண்ட் முதலீடு லாபகரமானதா?

டிவிடெண்ட் யீல்டு...

பங்கு முதலீட்டில் பங்கின் முகப் மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்குவார்கள். பங்கின் சந்தை விலைக்கு அல்ல. உதாரணமாக, ஒரு பங்கின் விலை ரூ.1,000; அதன் முகமதிப்பு ரூ.10. இந்த நிலையில், அந்த நிறுவனம் 100% டிவிடெண்ட் வழங்குவதாக அறிவிக்கிறது எனில், முதலீட்டாளருக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 டிவிடெண்ட் கிடைக்கும். இதுவே நிறுவனத் தின் முக மதிப்பு ரூ.1 என்கிற நிலையில் 100% டிவிடெண்ட் எனில், முதலீட்டாளருக்கு கிடைக்கும் டிவிடெண்ட் பங்கு ஒன்றுக்கு ரூ.1 ஆகும். முதலீட் டாளர்களுக்கு டிவிடெண்ட் விஷயத்தில் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக டிவி டெண்டை ரூபாய் மதிப்பிலும் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என செபி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

பங்கு முதலீட்டில் டிவி டெண்ட் லாபத்துடன் அந்தப் பங்கின் விலையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகை யில், பங்கு முதலீட்டில் டிவி டெண்ட் லாபம் மற்றும் மூலதன ஆதாயம் என்கிற இரு பலன் கிடைக்கும்.

டிவிடெண்ட் யீல்டு ஃபார்முலா...

ஒரு நிறுவனம் எத்தனை சதவிகிதம் டிவிடெண்ட் தருகிறது என்பதைவிட ‘டிவிடெண்ட் யீல்டு’ என்கிற டிவிடெண்ட் மகசூலைப் பார்ப்பதுதான் சரியாக மற்றும் லாபகரமாக இருக்கும்.

இதற்கான ஃபார்முலா - டிவிடெண்ட் யீல்டு = (பங்கு ஒன்றுக்கான டிவிடெண்ட் / பங்கின் சந்தை மதிப்பு) X 100.

உதாரணமாக, நிறுவனம் ஒன்று ரூ.10 டிவிடெண்ட் அறிவித்திருக்கிறது. பங்கின் விலை இப்போது ரூ.100-ஆக உள்ளது. இந்தப் பங்கின் டிவிடெண்ட் யீல்டு என்பது (10/100) X 100 = 10% ஆகும்.

‘டிவிடெண்ட் யீல்டு’ என்பது பங்கின் விலையுடன் தொடர்பு டையது என்பதால், அதைப் பார்த்து, தொடர்ந்து அதிக ‘டிவிடெண்ட் யீல்டு’ உள்ள பங்குகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

பங்குச் சந்தை... டிவிடெண்ட் முதலீடு லாபகரமானதா?

டிவிடெண்ட் வழங்கு விகிதம் (Dividend Payout Ratio)

அடுத்து பார்க்க வேண்டியது, டிவிடெண்ட் வழங்கு விகிதம் (Dividend Payout Ratio) ஆகும். அந்த நிறுவனம் ஈட்டும் நிகர லாபத்தில் எத்தனை சதவிகி தத்தை டிவிடெண்டாக வழங்கு கிறது என்பதாகும்.

இதற்கான ஃபார்முலா - டிவிடெண்ட் வழங்கு விகிதம்= (வழங்கப்பட்ட மொத்த டிவி டெண்ட் / நிகர லாபம்) X 100

ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,000 கோடி இருக் கிறது. இதில் ரூ.500 கோடியை டிவிடெண்டாக வழங்கியிருக் கிறது எனில், வழங்கு விகிதம் (500/1000) X 100 = 50% ஆகும். இந்த விகிதம் எந்தளவு அதிக மாக இருக்கிறதோ, அந்தளவு நல்லது.

ஒரு நிறுவனம் வேகமான வளர்ச்சியில் இருக்கிறது எனில், அதற்கு அதிக நிதி தேவைப்படும். அது போன்ற நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்காது. நிகர லாபத்தை அதன் வளர்ச்சிக்குத்தான் அதிகம் பயன்படுத்தும். ஒரு நிறுவனம் பெரிதாக வளர்ந்துவிட்டது. இனி விரிவாக்கம் தேவைப்படாது எனில், அதிகமாக டிவிடெண்ட் வழங்க வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலான லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகள் இந்தப் பிரிவின்கீழ்தான் வரும். அதிகம் டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி விகிதம் மற்றும் பங்கு விலை ஏற்றம் என்பது சராசரியாகவே இருக்கும்.

பங்குச் சந்தை... டிவிடெண்ட் முதலீடு லாபகரமானதா?

வருமான வரி...

பங்கு நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டுக்கு வருமான வரி உண்டு. ஒருவரின் இதர வருமானமாக டிவிடெண்ட் எடுத்துக்கொள்ளப்படும். இந்த டிவிடெண்ட் தொகைக்கு ஒருவர் எந்த அடிப்படை வருமான வரி வரம்பின்கீழ் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30 சதவிகிதமாக உள்ளது. புதிய வரி முறையில் 5%, 10%, 15%, 20%, 25% மற்றும் 30 சதவிகிதமாக உள்ளது. டிவிடெண்ட் வருமானம் நிதி ஆண்டில் ரூ5,000-ஐ தாண்டும்போது 10% மூலத்தில் வரி (Tax Deducted at Source - TDS) பிடிக்கப்படும்.

பங்கு முதலீட்டில் ஓரளவு ரிஸ்க் எடுத்து லாபம் ஈட்ட நினைத்தால், பங்கு டிவிடெண்ட் முதலீடு ஏற்றதாக இருக்கும்.