Published:Updated:

அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற எஸ் & பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற எஸ் & பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப்..!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

சிந்தன் ஹரியா, தலைவர், திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

கோவிட்-19 பாதிப்புக்குப் பிறகு 2021-ம் ஆண்டு வணிகங்கள் மற்றும் பள்ளிக் கூடங்கள் மீண்டும் திறக்கத் தொடங்கியதால், மக்கள் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றனர். இந்தியப் பங்குச் சந்தை அதன் ஏற்றத்தைத் தொடர்ந்தது. டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை கூடியது. பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பு அதிகரித்தது.

சிந்தன் ஹரியா, 
தலைவர், திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
சிந்தன் ஹரியா, தலைவர், திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

இதற்கிடையில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு, ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவற்றால் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானது. முதலீட்டாளர்களின் பேராசை மற்றும் பயம் காரணமாக பங்குச் சந்தைகள் அதிக வீழ்ச்சி அடைந்தன. அதிக நிலையற்றத்தன்மையைக் கருத்தில்கொண்டு, பல முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதில் கவலை கொண்டனர். மேலும், அவர்களால் சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியாமல் திணறினார்கள். ஏற்ற இறக்கம் மிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சவாலான வேலையாகவே இருந்தது.

ஆனால், நாம் மறக்கக் கூடாது முக்கியமான விஷயம், பங்குச் சந்தை முதலீடுகள் நீண்ட கால வருமான வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களாகும். பங்கு சார்ந்த திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானத்தைப் பெற உதவும். மேலும், வளரும் நாடுகளில் இந்தியா ஒரு பிரகாசமான இடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தியப் பங்குச் சந்தை நீண்ட காலத்தில் பயனடையும். அது பங்கு முதலீட்டாளர் களுக்கு லாபமாக அமையும்.

பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கச் சூழலில் சரியான முதலீடு களைத் தேர்வு செய்வது எளிதானதல்ல. பரந்த எஸ்&பி பி.எஸ்.இ 500 ஃபண்டில் (S&P BSE 500 Index) முதலீடு செய்வது இந்தத் தடையை சமாளிப்பதற்கான எளிதான வழியாக உள்ளது. அதாவது, இந்தக் ஃபண்டு திட்டத்தில் மொத்தம் 500 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

எஸ்&பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப்...

எஸ்&பி பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழி, எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (Exchange Traded Funds - ETF) ஆகும். முதலில், இ.டி.எஃப்-கள் என்றால் என்ன, அவை ஒருவரின் முதலீட்டுப் பயணத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற எஸ் & பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப்..!

இ.டி.எஃப் என்றால்...?

இ.டி.எஃப் என்பது ஒரு முதலீட்டுக் கலவை (Investment Portfolio) போர்ட்ஃபோலியோ ஆகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படைக் குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பங்குகளில் அதே விகிதாசாரத்தில் முதலீடு செய்வதாகும். இதன் விளைவாக, அடிப்படைக் குறியீட்டின் மதிப்பு உயரும் போது, இ.டி.எஃப்பின் மதிப்பு அதிகரிக்கிறது. இதேபோல், இண்டெக்ஸின் மதிப்பு குறையும்போது, இ.டி.எஃப்பின் மதிப்பும் குறையும்.

அடிப்படைக் குறியீடு மற்றும் இ.டி.எஃப்பின் செயல் திறனுக்கு இடையே உள்ள சிறிய வேறுபாடு, கண்காணிப்புப் பிழை (Tracking Error) எனப்படும். இதற்குக் காரணம், இ.டி.எஃப்பில் ஏற்படும் செலவுகளாக இருக்கலாம். உதாரணமாக, எஸ்&பி பி.எஸ்.இ 500 குறியீட்டைக் பின்பற்றும் இ.டி.எஃப்-ஆனது எஸ்&பி பி.எஸ்.இ 500 குறியீட்டின் அனைத்து நிறுவனப் பங்குகளிலும் அதே விகிதாசாரத்தில் முதலீடு செய்யும். இதன் விளைவாக, இ.டி.எஃப்பின் லாபம் மற்றும் இழப்பின் அளவு குறியீட்டைப் போலவே இருக்கும்.

மேலும், எஸ்&பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப்பின் யூனிட்டுகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பங்குச் சந்தை யின் வர்த்தக நேரத்தில் இதன் யூனிட்டுகளை எளிதாக வாங்கலாம், விற்கலாம். இதனால் நினைத்த நேரத்தில் முதலீடு செய்யவும் முடியும்; முதலீட்டை விற்று வெளியேறவும் முடியும்.

நல்ல முதலீட்டுத் தேர்வு...

பங்குச் சந்தையில் பல இ.டி.எஃப் வர்த்தகமாகி வரும்போது, தற்போதைய பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கச் சூழ்நிலையில் எஸ்&பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப் ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாக இருக்கும்.

இந்த இண்டெக்ஸ், வெவ்வேறு பங்குச் சந்தை மதிப்பு, பல்வேறு துறைகள் ஆகிய இரண்டிலும் இயற்கையாகவே பரவலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இண்டெக்ஸ், லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளைக் கொண்டுள்ளது.

இந்த இ.டி.எஃப்பில் இடம்பெற்றிருக்கும் லார்ஜ்கேப் பங்குகள் போர்ட்ஃபோலியோ ஸ்திரத்தன்மையைப் பரா மரிக்கும். அதே வேளையில், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் மூலம் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இது லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யலாமா என்கிற குழப்பத்தை அறவே நீக்குகிறது.

அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது...

எஸ்&பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப் என்பது பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக்கு புதிய முதலீட்டாளர்கள் மற்றும் அனுபவமுள்ள முதலீட் டாளர்கள் அனைத்து முதலீட் டாளர்களுக்கும் ஏற்ற சிறந்த முதலீட்டுத் தேர்வாக இருக்கும்.

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பற்றி ஒருவர் கவலைப்படுகிறார் எனில், பங்குச் சந்தை சார்ந்த முதலீட் டில் எச்சரிக்கையுடன்அவர் இறங்க வேண்டும். இப்படிப் பட்டவருக்கு மிகப் பொருத்த மான முதலீட்டுத் திட்டமாக இ.டி.எஃப் திட்டமாக எஸ்&பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப் செயல் படுகிறது.

அதேசமயம், ஒருவர் அனுபவமுள்ள முதலீட்டாளராக இருந்தால், போர்ட் ஃபோலியோ பல்வகைப் படுத்தலை மேம்படுத்த இந்த இ.டி.எஃப் அவருக்கு உதவக் கூடும்.

இ.டி.எஃப்கள், பொதுவாக குறைந்த செலவு, எளிதில் பணமாக்கும் தன்மை மற்றும் வெளிப்படையானவை ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்டவை ஆகும்.

இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஒருவருக்கு எங்கே முதலீடு செய்வது என்று தெரியவில்லை எனில், அவர் தற்போதைய பங்குச் சந்தை சூழலில் எஸ்&பி பி.எஸ்.இ 500 இ.டி.எஃப்பில் தாராளமாக முதலீடு செய்யலாம்.