மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முக்கியமானது, வேல்யூ ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம், 2022 ஜூன் 3-ம் தேதி நிலவரப்படி, கடந்த ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு மற்றும் பத்து ஆண்டுக் காலத்தில் முறையே 11%, 23%, 13% மற்றும் 20 சதவிகிதமாக உள்ளன.

அது என்ன வேல்யூ ஃபண்ட்?
மதிப்பு அடிப்படையிலான முதலீட்டுப் பாணி என்பது நல்ல நிறுவனப் பங்கு இப்போது மதிப்பு குறைவான/ மலிவான விலையில் வர்த்தக மாகி வருகிறது, எதிர்காலத் தில் நல்ல வளர்ச்சி காணும் என்கிறபட்சத்தில் அந்தப் பங்கில் இப்போது முதலீடு செய்வதாகும்.
முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் பணம், மதிப்பு அடிப்படையிலான முதலீட்டுப் பாணியில் (Value Investment Strategy) நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தில் நிறுவனப் பங்கு களில் குறைந்தபட்சம் 65% முதலீடு செய்ய வேண்டும்.
இந்த ஃபண்ட் பிரிவு ஓப்பன் எண்டட் வகையைச் சார்ந்ததால், முதலீட்டா ளர்கள் எப்போது வேண்டு மானலும் முதலீடு செய்ய லாம்; எப்போது வேண்டு மானாலும் முதலீட்டை விற்று பணமாக்கலாம்.

நீண்ட கால முதலீடு..!
இந்த ஃபண்ட் பிரிவு பெரும்பாலும் உடனடியான அதிக வருமானத்தைத் தராது. பொதுவாக, முதலீட்டாளரின் மூலதனத்துக்கு பாதுகாப் பானதாக இருக்கும். பங்குச் சந்தை மிக வேகமாக உயர்ந்து உச்சநிலையை அடையும் பட்சத்தில், இந்த ஃபண்ட் திட்டத்தின் என்.ஏ.வி மதிப்பு அதிக இறக்கம் காணும்.
இந்த வேல்யூ ஃபண்ட் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் கொண்டது என்றாலும் நீண்ட காலத்தில் அதிக லாபம் தரும் ஃபண்ட் திட்ட மாக இருக்கும். அந்த வகை யில், ரிஸ்க் எடுக்கக்கூடிய மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டைத் தொடர நினைப்பவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

நல்ல வேல்யூ ஃபண்டைத் தேர்வு செய்வது எப்படி?
ஒரு நிறுவனப் பங்கின் விலை அதன் உள்ளார்ந்த மதிப்பைவிட (Intrinsic value) குறைவாக இருந்தால், அது வேல்யூ பங்காகும். ஃபண்ட் மேனேஜர்கள், அடிப்படைப் பகுப்பாய்வை (Fundamental Analysis) மிகவும் ஆழமாகச் செய்துதான் வேல்யூ பங்குகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்வதுடன், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியையும் கவனித்து முதலீட்டு முடிவை எடுக்கிறார்கள்.

கடந்த காலத்தில் கிடைத்த வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும் கடந்த 3, 5 ஆண்டு களில் வேல்யூ ஃபண்டுகள் என்ன வருமானம் தந்துள்ளன என்பதைக் கவனிப்பது அவசியம். பணவீக்க விகிதத்தைவிட 3 - 4% அதிக வருமானம் தந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்வது நல்லது.
மேலும், வேல்யூ ஃபண்டின் போர்ட்ஃபோலி யோவில் இடம்பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகள் பல்வேறு துறை சார்ந்ததாக அதாவது டைவர்சி ஃபைட்டாக இருப்பதுடன், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் எனக் கலவையாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ரிஸ்க் குறைவாக இருக்கும்.