Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்! லாபம் தரும் முதலீட்டு உத்திகள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

M U T U A L F U N D

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்! லாபம் தரும் முதலீட்டு உத்திகள்

M U T U A L F U N D

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) மூலம் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்பட்ட முதலீடு ரூ.4,335 கோடியாக இருந்தது. இந்தத் தொகை 2019 மார்ச் மாதத்தில் ரூ.8,055 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2021 மார்ச்சில் 9,182 கோடியாக உயர்ந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பெரும்பாலானவர்கள் விரும்பித் தேடி வருவதையே இந்த வளர்ச்சி காட்டுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீண்டகாலத்தில் லாபம் சம்பாதிக்க ஐந்து முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன?

சதீஷ்குமார் 
மியூச்சுவல் 
ஃபண்ட் 
விநியோகஸ்தர், 
http://
sathishspeaks.
com/
சதீஷ்குமார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், http:// sathishspeaks. com/

1. ஃபண்ட் தேர்வு

ஒருவரின் நிதித் தேவையை நிறைவேற்றும் சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கிட்டத்தட்ட 8,000-க்கும் மேற்பட்ட ஃபண்டுகள் இருந்தன. நமக்குத் தேவையான ஃபண்டுகளைத் தேர்வு செய்ய மிகவும் கடினமாக அப்போது இருந்தது. ஆனால், இப்போது செபியின் புதிய வரையறை மற்றும் மாற்றத்துக்குப் பிறகு, தற்போது சில நூறு ஃபண்டுகளாகக் குறைந்து விட்டன. இந்த ஃபண்டுகளில் சரியான ஒன்றை நாம் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்யும் போது, நம் முதலீட்டு நோக்கம் என்ன, எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்யப்போகிறோம், எதிர்பார்க்கும் வருமானம் என்ன என்பதை மனதில்கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

2. வருமானம்

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க நினைப்பவர்கள் எப்போதும் குரோத் ஆப்ஷனைத்தான் தேர்வு செய்ய வேண்டும். முதலீட்டுக்கு நீங்கள் தேர்வு செய்யப்போகிற ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளாக, ஆண்டுக்கு சராசரியாக என்ன வருமானம் தந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். பத்தாண்டுகளில் பங்குச் சந்தை குறைந்தபட்சம் ஒரு பெரிய ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்திருக்கும். அந்தக் கால கட்டத்தில் அந்த ஃபண்ட் தந்த வருமானத்தை அடிப்படையாக வைத்து, அந்த ஃபண்டைத் தேர்வு செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யலாம். குறுகிய காலத்தில் குறிப்பாக, கடந்த ஓராண்டுக் காலத்தில் ஒரு ஃபண்ட் தந்த வருமானத்தை வைத்து மட்டுமே அந்த ஃபண்டில் முதலீடு செய்யும் முடிவை எடுக்கக் கூடாது

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்! லாபம் தரும் முதலீட்டு உத்திகள்

3. ரிஸ்க் எவ்வளவு எடுக்கலாம்?

எத்தனை ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடரப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்து எந்த வகையான ஃபண்டை முதலீட்டுக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தெளிவாகும். உங்களின் முதலீட்டுக் காலம் குறுகியதாக இருந்தால் கடன் ஃபண்டுகளிலும் நடுத்தரக் காலமாக இருந்தால், ஹைபிரிட் ஃபண்டு களிலும் நீண்டகாலமாக இருந்தால், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும். இதை மாற்றி செய்யும் போது முதலீட்டில் ரிஸ்க் அதிகரிக்கிறது.

மியூச்சுவல் ஃபண்டில் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு அதிக ரிவார்டு அதாவது, அதிக வருமானம் கிடைக்கிறது. அதே நேரத்தில் குறுகியகாலத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் மூலதன இழப்புகூட ஏற்படும். அதைத் தாங்கும் சக்தி இருப்பவர்கள்தாம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. செலவு விகிதம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நிறுவனத்துக்கு பல்வேறு செலவுகள் இருக்கின்றன. அந்தச் செலவுகளை நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்துதான் பெற்றுக்கொள்கின்றன.

உதாரணத்துக்கு, நிர்வாகக் கட்டணம் தொடங்கி நிறுவனத்தின் பணியாளர்கள் சம்பளம் வரை மியூச்சுவல் ஃபண்ட் கொடுக்கும் வருமானத்தில்தான் எடுக்கப்படுகிறது. மொத்த செலவு விகிதம் என்ற ஒன்றை அண்மை ஆண்டு களில் செபி அமைப்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, சுமார் 0.25% என்பதில் தொடங்கி, 2.5% என்பது வரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான செலவு விகிதம் இருக்கும். ஒரு ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதற்கேற்ப செலவு விகிதம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் சில திட்டங்களில் செலவினத்தைக் குறைவாக வைத்திருப்பார்கள். உங்களுடைய வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 12%, செலவு 2% எனில், கிடைக்கும் வருமானம் 10 சதவிகிதமாகக் குறைந்துவிடும். அந்த வகையில் செலவு விகிதத்தையும் கவனிப்பது அவசியம். அதே நேரத்தில் அபரிமிதமாக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செலவு விகிதம் அதிகமாக இருந்தாலும் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை வெளியே எடுக்கும்போது வெளியேறும் கட்டணம் ஏதும் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்குள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை வெளியே எடுக்கும்பட்சத்தில் 0.5% முதல் 1% வரை வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டிவரும். இதையும் கருத்தில்கொண்டு செயல் படுவது லாபகரமாக இருக்கும்.

5. வருமானவரி

பொதுவாக, எந்தவொரு முதலீடாக இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி உண்டா, எவ்வளவு வரி, வரி அனுகூல வசதி உண்டா போன்ற வற்றைக் கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வுசெய்யும் பட்சத்தில் டிவிடெண்ட் வருமானத்துக்கு வருமான வரி வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டி வரும். இதுவே குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யும் போது ஓராண்டு கழித்து வெளியே எடுக்கும்போது, நீண்டகால மூலதன ஆதாயத்தில் ரூ.1 லட்சம் வரை வரி கட்ட வேண்டி இருக்காது. அதற்கு மேற்பட்ட தொகைக்கு 10% மட்டுமே வரி கட்ட வேண்டியிருக்கும். பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்ட மான இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யும்போது முதலீட்டு தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்கிறது. மேலும், மூலதன ஆதாயத்திலும் ரூ.1 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கிறது.

இதுவே கடன் ஃபண்டுகள் என்கிறபோது மூன்று ஆண்டு களுக்கு மேற்பட்ட முதலீடுகளின் யூனிட்டுகளை விற்கும்போது பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும். கடன் ஃபண்டுகளில் மூன்றாண்டுகளுக்கு முன் யூனிட்டுகளை விற்றால் லாபத் துக்கு, அவரவர் வருமான வரி வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டிவரும்.

இந்த ஐந்து அம்சங்களை மனதில் கொண்டு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது லாபகரமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism