Published:Updated:

ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள்... நீண்ட காலத்தில் லாபம் பெற உதவுமா?

ஃபண்ட் முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

ஆனந்த் ராதாகிருஷ்ணன், எம்.டி & சி.இ.ஓ – எமெர்ஜிங் மார்க்கெட்ஸ், ஈக்விட்டி – இந்தியா, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்

முதலீட்டு மொழியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் முரண்பாடான விஷயம் - ‘எச்சரிக்கையான நம்பிக்கை’ (Cautious optimism). இது தற்போது பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்களின் உணர்வாக இருக்கிறது. 2020 மார்ச் பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பிறகு, கடந்த 18 மாதங்களாக சர்வதேச மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகளின் ஏற்றம், முக்கிய இண்டெக்ஸ்களை அவற்றின் வாழ்நாள் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

ஆனந்த் ராதாகிருஷ்ணன் 
எம்.டி & சி.இ.ஓ – எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் 
ஈக்விட்டி – இந்தியா, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்
ஆனந்த் ராதாகிருஷ்ணன் எம்.டி & சி.இ.ஓ – எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் ஈக்விட்டி – இந்தியா, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்

முக்கியக் குறியீடான பி.எஸ்.இ சென்செக்ஸ் சமீபத்தில் வரலாற்று உச்சமாக 60000 புள்ளியைத் தொட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துவருவது மற்றும் முக்கியமான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு, தொழில் துறைக்கு ஊக்கச் சலுகை அறிவிப்பு கள் போன்றவை பணப்புழக்க நிலைகளை உயர்த்தியுள்ளது. இது பங்குச் சந்தையின் உலகளாவிய வலுவான ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது. கூடுதலாக, இந்தியா வில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், பங்குச் சந்தைச் சரிவை சரிசெய்ய உதவியதுடன், நீண்ட ஏற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் பிரிவு 18 மாத பங்குச் சந்தை ஏற்றத்தில் முக்கியமான இடத்தைப் பிடித் திருந்தது. 2018-ம் ஆண்டின் தொடக்கத் திலிருந்து நீண்ட காலமாக, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளைவிட லார்ஜ்கேப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன. பிறகு, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன.

இந்தத் திருப்பத்தால் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியடைந்தாலும், ‘இந்த ஏற்றம் எவ்வளவு தூரம் செல்லும், இந்த நிலைகளில் லார்ஜ்கேப்களில் முதலீடு செய்வது பாதுகாப்பான வழியாக இருக்குமா, ஸ்மால் கேப்களில் ஆல்பா (alpha) உருவாக ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா, மிட்கேப் பாதுகாப்பான முதலீடாக இருக்குமா, பங்குச் சந்தை உச்சத்திலிருந்து இறங்கும் வரை காத்திருக்க வேண்டுமா...’ என்பன போன்ற ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார்கள்.

தற்போதைய சந்தையின் ஏற்றம் என்பது எந்த ஒரு பெரிய இறக்கமும் இல்லாமல், உயர் சந்தை மதிப்பீட்டு நிலைகளைப் படிப்படியாக எட்டியுள்ளது. மேலும், பெருநிறுவனங்களின் வருவாய் மீண்டுவந்திருப்பது மற்றும் புதிய பொருளாதார வளர்ச்சி முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எந்தவொரு புள்ளியிலும் பங்குச் சந்தையின் நகர்வுகள் அல்லது பங்குச் சந்தை மூலதனப் பிரிவுகளின் (லார்ஜ்கேப். மிட்கேப், ஸ்மால் கேப்,) செயல்திறனை யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. சந்தையின் நேரம் மற்றும் போக்கைக் கணிப்பது கடினம் மற்றும் பயனற்றது. சந்தை மூலதனப் பிரிவுகளுக்கு இடையில் அதாவது, லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு சரியான நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.

ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள்...
நீண்ட காலத்தில் லாபம் பெற உதவுமா?

என்னதான் தீர்வு?

லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் கலந் திருக்கும் நெகிழ்ச்சியான (Flexible) முதலீட்டுப் பிரிவைத் தேர்வு செய்வது சரியான முதலீட்டு உத்தியாக இருக்கும். அதாவது, பங்குச் சந்தை யில் உருவாகும் மாற்றங்களின் அடிப்படையில் அனைத்துப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

கலவையான பங்குகளே பெஸ்ட்...

எந்த ஒரு மார்க்கெட் கேப்பிட்டைலேஷன் கொண்ட பங்கும் எப்போதும் சிறப்பாகச் செயல்படாது. உதாரணமாக, லார்ஜ்கேப் பங்கோ, மிட்கேப் பங்கோ, ஸ்மால்கேப் பங்கோ எப்போதும் சிறப்பாகச் செயல்படாது. இவற்றில் ஒரு பிரிவு சிறப்பாகச் செயல்படும்போது, மற்றப் பிரிவு சுமாராக செயல்படலாம் அல்லது மோசமாகச் செயல்படலாம் அல்லது சிறப்பாகச் செயல்படலாம். நிஃப்டி 500 குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் லார்ஜ்கேப் பங்குகள், மிட்கேப் பங்குகள், ஸ்மால்கேப் பங்குகள் இணைந்து கலவையாக செயல்பட்டு வருகின்றன. (பார்க்க அட்டவணை)

ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள்...
நீண்ட காலத்தில் லாபம் பெற உதவுமா?

ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகள்...

இந்தப் பெயர் குறிப்பிடுவது போல, நெகிழ்வுத் தன்மையின் நன்மையாக இந்த ஃபண்டுகள் இருக்கின்றன. இந்த ஃபண்ட் பிரிவு நிறுவனங்களின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கேற்ப பல்வேறு பங்குச் சந்தை மதிப்புகொண்ட பங்குகளில் அதாவது, லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் திரட்டப்பட்ட நிதியை நெகிழ்வான அணுகுமுறையைப் (Flexible approach) பின்பற்றிப் பிரித்து முதலீடு செய்கிறது. இந்த ஃபண்டில் எந்தப் பிரிவு பங்குகளில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு கிடையாது என்பது சிறப்பு. ஃபிளெக்ஸிகேப் அடிப்படையிலான ஃபண்டுகள் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நீண்ட காலமாக இருந்தபோதிலும், செபி அமைப்பு இந்த வகையை ஃபிளெக்ஸிகேப் என 2020-ம் ஆண்டில் பெயரிட்டது. செபி வரையறையின்படி, இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யும் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்புக்கு (மார்க்கெட் கேப்பிடைலேஷன்) ஒதுக்கீடு மற்றும் உள்வரம்புகள் எதுவும் கிடையாது.

ஈக்விட்டி ஃபண்டுகளில் இரண்டாவதாக அதிகம் நிதி நிர்வகிக்கப்படும் ஃபண்ட் இது. 28 ஃபண்டுகளில் மொத்தம் ரூ.2 லட்சம் கோடி (2021 ஆகஸ்ட் 31 நிலவரம்) நிர்வகிக்கப்படு கிறது. பாதிக்கும் மேற்பட்ட ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள் பத்தாண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வருகின்றன.

ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் எப்போது ஏற்றதாக இருக்கும்?

நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறது என்றாலும், நீங்கள் நன்கு பரவலாக்கப்பட்ட பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டத்தை விரும்புகிறீர்கள் என்றாலும், ஐந்து வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டுக் காலத்தைக் கொண்டுள்ளீர்கள் என்றாலும், லார்ஜ்கேப் பங்கு களின் முதலீட்டுடன் கூடுதலாக மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் கூடுதலாக முதலீடு செய்து ஆல்பாவைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்றாலும் ஃபிளெக்ஸிகேப் ஏற்றது.

சூழ்நிலைக்கு ஏற்ப முதலீடு...

ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளிலும் சூழ்நிலைக்கு ஏற்ப பிரித்து முதலீடு செய்கிறது. இந்த ஃபண்டில் நிதி மேலாண்மை ஆக்டிவ் வகையாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் மிட்கேப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டது. 2019–ம் ஆண்டு மிட்கேப் பங்குகளில் முதலீடு குறைக்கப்பட்டது. அதன் பிறகு, இப்போது 2021-ம் ஆண்டில்தான் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்ற சூழல்தான் ஸ்மால்கேப் பங்குகளிலும் காணப்படுகிறது.

ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளின் முக்கிய லாபங்கள்...

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் ஃபிளெக்ஸிகேப் ஃபண்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிடலைசேஷனில் 96 சத விகிதத்துக்கும் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது. (nseindia.com–ல் குறிப்பிட்டுள்ளபடி நிஃப்டி 500 இண்டெக்ஸின் மார்க்கெட் கேப். கவரேஜ் ஆகும்)

பங்குச் சந்தையின் போக்கு மாறும்போது, லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் சுழற்சியில் செயல்படுகின்றன. அதற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுவதால், இந்த ஃபண்ட் முதலீடு அனைத்துக் காலத்துக்கும் ஏற்றதாக இருக்கிறது.

பங்குச் சந்தையானது கரடியின் பிடியிலிருந்து காளையின் பிடிக்கு உறுதியாகத் திரும்பும்போது,​ பெரிய நிறுவனப் பங்குகளின் விலை முதலில் ஏறத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து படிப்படியாக மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் விலை ஏறத் தொடங்கும். கிடைக்கக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஏற்ப எந்த மார்க்கெட் கேப். கொண்ட பங்குகளிலும் முதலீட்டை எளிதாக்க இந்த ஃபண்டில் செய்ய முடியும். இதனால், லாபத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மிட்கேப் அல்லது ஸ்மால்கேப் பங்குகளில் முழுவதும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளைவிட இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவு. இந்த ஃபிளெக்ஸிகேப் ஃபண்டைப் பொறுத்தவரையில், அடிப்படையில் வலுவான பங்குகளை எந்தப் பங்குச் சந்தை மதிப்பிலும் முதலீடு செய்வதற்கான முழுச் சுதந்திரம் ஃபண்ட் மேனேஜருக்கு இருக்கிறது.

அனைத்துத் துறை பங்குகளிலும் அனைத்து மார்க்கெட் கேப்பிடைலேஷன் கொண்ட பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், இந்த ஃபண்ட் எந்தக் காலத்திலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட முதலீட்டுக் காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி, பங்குச் சந்தை கொடுக்கும் வருமானத்தை இந்த ஃபண்டில் எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு