அண்மையில் நாணயம் விகடனும், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து `மியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு... நாளைய வெகுமதி!’ என்ற நிகழ்ச்சியை கும்பகோணம் மற்றும் திருச்சி ஆகிய ஊர்களில் நடத்தின.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஏன் முதலீடு செய்ய வேண்டும், அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் எந்த வகையில் உதவும் என்பது குறித்து ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் திருச்சி கிளை முதன்மை மேலாளர் டாக்டர் பி.சுரேஷ் பாண்டியன் பேசினார். எஸ்.ஐ.பி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு விதிக்கப்படும் வருமான வரி விதிப்பு பற்றி முதலீட்டு ஆலோசகர் அழகப்பன் ராமநாதன் பேசினார்.

`மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி முதலீடு... இந்த இரண்டில் எது லாபகரமானது’ என விழிப்புணர்வுக் கூட்டத்தில் விளக்கிச் சொல்லப்பட்டது.

நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து தமிழகம் முழுக்க நடத்தும் தொடர் நிகழ்வு கும்பகோணத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. டாக்டர் பி.சுரேஷ் பாண்டியன், அழகப்பன் ராமநாதன் , நாணயம் விகடன் வாசகிகள் கிருத்திகா, ரத்தினாம்பாள் மற்றும் விகடன் ஏஜென்ட் ஜி.கண்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றினார்கள்.

சுரேஷ் பாண்டியன் பேசும்போது, நம் முதலீட்டைப் பணவீக்க விகிதம் எப்படி காலி செய்கிறது, எது உண்மையான சொத்து ஆகியவை குறித்து உதாரணங்களுடன் விளக்கிப் பேசினார். `கடன் வாங்கி முதலீடு செய்வது நல்ல அணுகுமுறை கிடையாது’ என்பதை வலியுறுத்தினார்.

`மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி முதலீடு - எது லாபகரமானது’ என்பதை அழகப்பன் ராமநாதன் விளக்கினார். ஈக்விட்டி, ஹைபிரிட், டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது, டிவிடெண்ட் விநியோக வரியைத் தவிர்ப்பது எப்படி, அதிக லாபம் சம்பாதிப்பது எப்படி ஆகியவை குறித்து விளக்கிப் பேசினார் அவர்.

கேள்வி பதில் நேரத்தில் முதலீட்டாளர்கள் ஏராளமான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.