Published:Updated:

ஒரு தொழிலதிபரின் வெற்றிக்கு வித்திட்ட கே.பாலசந்தரின் கதாநாயகி கதாபாத்திரம்!

ரம்யா, ரவீணா, ஸ்வேதா, சரளா, ரவிச்சந்தர்
ரம்யா, ரவீணா, ஸ்வேதா, சரளா, ரவிச்சந்தர்

இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தின் நாயகி கதாபாத்திரம்தான். இந்த ஆச்சர்யத்துடன், அந்த ஆணின் வெற்றிக் கதையையும் தெரிந்துகொண்டால் நமக்கும் நம்பிக்கை பிறக்கும்.

தியேட்டரிலிருந்து திரும்பி வரும்போது இவருக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கு" என்கிற சரளாதான், கணவரின் வெற்றிக்குக் காரணமான இரண்டாவது பெண்.தன் குடும்பத்துக்காகவும் சகோதரிகளின் நலனுக்காகவும் போராடிய ஓர் ஆண், தொழிலதிபராக உயர்ந்த கதை இது. இவரின் வெற்றிக்கு மூன்று பெண்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் முதல் பெண்ணான நந்தினி, இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தின் நாயகி கதாபாத்திரம்தான். இந்த ஆச்சர்யத்துடன், அந்த ஆணின் வெற்றிக் கதையையும் தெரிந்துகொண்டால் நமக்கும் நம்பிக்கை பிறக்கும்.

அந்த ஆண், ரவிச்சந்தர். கைவசம் வேலை ஏதுமின்றி தவிப்பில் இருந்தவருக்குப் பெரும் ஊக்கம் கொடுத்துள்ளது 'நந்தினி' கதாபாத்திரம். எனவே, உணவகத் தொழில் தொடங்கியவர் அடுத்தடுத்து தொடங்கிய எல்லா உணவகத்துக்கும் அந்தப் பெயரையே வைத்திருக்கிறார். பெங்களூரில் முன்னணி ஆந்திர உணவகமான 'நந்தனா பேலஸ்' குழும உரிமையாளராகப் புகழ்பெற்றுள்ளார்.

"... கைவசம் எந்த வேலையும் சேமிப்பும் இல்லை. இரண்டாவது அக்காவின் கல்யாண வாழ்க்கையில பிரச்னை. தங்கைக்குக் கல்யாணம் செய்யணும், பெற்றோருக்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யணும். அடுத்து என்ன செய்வதுன்னு தவிப்பில் இருந்தவர், ரிலாக்சேஷனுக்காக 'மனதில் உறுதி வேண்டும்' படம் பார்க்கப் போயிருக்கார்.

தியேட்டரிலிருந்து திரும்பி வரும்போது இவருக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கு" என்கிற சரளாதான், கணவரின் வெற்றிக்குக் காரணமான இரண்டாவது பெண்.

குடும்ப பாரங்களையும் பிரச்னைகளையும் தனியாளாக எதிர்த்துப் போராடும் அந்த நந்தினி கதாபாத்திரம், துவண்டுபோய் இருந்த ரவிச்சந்தருக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாள்கள் இடைவெளியில் மீண்டும் இரண்டு முறை அந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பாசிட்டிவ் எனர்ஜியுடன், ரவிச்சந்தருக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் வசமாகியுள்ளன.

முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > மூன்று பெண்களால் கிடைத்த வெற்றி இது! - மனதில் உறுதி வேண்டும் https://bit.ly/2VwNdc8

இவருக்குச் சொந்தமான 15 ரெஸ்டா ரன்ட்டுகளும், இரண்டு மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் ஆறும் பெங்களூரில் செயல்படுகின்றன. 1,200 ஊழியர்களுக்கு முதலாளியான ரவிச்சந்தர், ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார். மூத்த மகள் ஸ்வேதா, பிரபல 'அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்ஸ்' நிறுவன குடும்பத்தின் மருமகள். இளைய மகள் ரம்யா, பிரபல 'சங்கீதா மொபைல்ஸ்' நிறுவன குடும்பத்தின் மருமகள். கடைசி மகள் ரவீணா பள்ளி மாணவி. மூத்த மகள்கள் இருவரும் அப்பாவின் தொழிலிலும் கவனம் செலுத்தி, ஊக்கம் கொடுக்கின்றனர்.

சுஹாசினி என்ன சொன்னார்?

" 'மனதில் உறுதி வேண்டும்' படத்தைப் பார்த்ததில் இருந்து, அந்தப் படத்தின் நாயகி சுஹாசினியை நேரில் பார்த்துப் பேசணும்னு ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பு அமையவேயில்லை. எங்க உணவகங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாடிக்கையாளர்களாக வருவாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்பு எங்க உணவகத்துக்கு யதேச்சையா சுஹாசினி மேடம் சாப்பிட வந்தாங்க. அவங்க சாப்பிட்டுட்டு இருக்கும்போது அவங்களை நானும் யதேச்சையா பார்த்தேன். எனக்கு இன்ப அதிர்ச்சி. அவர்கிட்ட என் தொழில் வளர்ச்சிக்குக் காரணமான, 'நந்தினி' கேரக்டர் பத்திச் சொன்னேன்.

சுஹாசினி
சுஹாசினி

ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. 'இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டா, என்னைவிட கே.பாலசந்தர் சாரின் மகள் புஷ்பா கந்தசாமி ரொம்பவே சந்தோஷப்படுவாங்க'ன்னு சொன்னாங்க. எங்க உணவகத்தின் புதிய கிளையைச் சென்னையில் விரைவில் திறக்கப்போறோம். சுஹாசினி மற்றும் புஷ்பா மேடம் இருவரின் தலைமையில்தான் திறப்பு விழா நடக்கும்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவிச்சந்தர்.

- குடும்பத்துக்காக ஆரம்ப காலங்களில் இவர் எதிர் கொண்ட சிரமங்கள், அவற்றிலிருந்து மீண்டு வெற்றி பெற்ற நம்பிக்கை கதையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > மூன்று பெண்களால் கிடைத்த வெற்றி இது! - மனதில் உறுதி வேண்டும் https://bit.ly/2VwNdc8

அடுத்த கட்டுரைக்கு