Published:Updated:

NPS: மாதம் ₹3,000 முதலீடு, ₹1 கோடி இலக்கு; ஓய்வுக்காலத்தை வளமாக்கும் பென்ஷன் திட்டம்!

Investment
Investment

என்.பி.எஸ் திட்டத்தில் அனைத்து இந்திய மக்களும்சேர முடியும் என்பதால் அனைவரும் சேமிக்க முன் வருவது நிம்மதியான ஓய்வு வாழ்க்கையை அளிக்கும்.

நிம்மதியான ஓய்வுக் கால பலன்கள் வழங்குவதில் என்.பி.எஸ் (நேஷனல் பென்ஷன் திட்டம்) பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் முக்கிய திட்டமாக விளங்குகிறது. இந்த திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக இந்தத் திட்டம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 7 மாதத்தில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இந்தத் திட்டத்தின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதற்கு ஒரு காரணமாக, பங்குச் சந்தையின் உயர்வைக் குறிப்பிடலாம்.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தத் திட்டத்தின் மூலம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலும் ரூ. 5 லட்சம் கோடி சொத்தை நிர்வகிக்கும் மிகப் பெரிய திட்டமாகக் குறுகிய காலத்தில் என்.பி.எஸ் வளர்ந்துள்ளது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உயர்ந்தது.

Investment
Investment
Image by Steve Buissinne from Pixabay

மேலும் இந்தத் திட்டத்தின் பல்வேறு புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்:

1. மொத்த முதலீட்டு தொகையில் என்.பி.எஸ் ரூ. 5.87 லட்சம் கோடியும் மற்றொரு பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் திட்டத்தில் ரூ.16,570 கோடியும் நிர்வகிக்கப்படுகிறது.

2. 4.28 கோடி மக்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். இதில் 1.45 லட்சம் வாடிக்கையாளர்கள் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். பென்ஷன் திட்டம் விரும்பும் மூன்றில் ஒருவரின் விருப்பமாக என்பிஎஸ்இருக்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

3. இதில் அதிகமாக பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் 52.28 லட்சம் அரசு ஊழியர்களும் 2.18 கோடி மத்திய அரசின் ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர்.

4. என்.பி.எஸ் திட்டத்தில் நிர்வகிக்கப்படும் ரூ. 6 லட்சம் கோடியில் 85% மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களால் மேற்கொள்ளபட்டுள்ளது.

5. தனியார் ஊழியர்கள் மற்றும் இதர பொது மக்கள் இந்தத் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில் 15% முதலீடு செய்துள்ளனர்.

இந்தத் திட்டம் நிர்வகிக்கும் பெரும்பாலான திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக வருமானம் கொடுத்து வருகின்றன. என்.பி.எஸ் என்பது மிக நீண்ட கால திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் 25 வயதில் ஒருவர் சேமிக்கத் தொடங்கினால் அவரின் 60 வயதில்தான் அந்தப் பணத்தைத் திரும்ப பெற முடியும். அதனால் நீண்ட கால கூட்டு வளர்ச்சி / வட்டி மிக அதிக வருமானத்தை அளிக்கும் என்பதால் இது ஓய்வு காலத்துக்கு மிக சிறப்பான திட்டமாகும்.

ரூ.1 கோடி வேண்டுமா?

நம்மில் பலர் ஒய்வுக் காலத்துக்குள் ரூ.1 கோடி சேமிப்பு இலக்கை அடைய வேண்டும் என்பதை பெரும் லட்சியமாகக் கொண்டுள்ளோம். 25 வயதில் இந்தத் திட்டத்தில் ஒருவர் சேமிக்கத் தொடங்கினால் இந்தத் திட்டம் சுமார் 10% வருமானம் கொடுக்கும் என்கிற அடிப்படையில் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணை மூலம் நாம் அறிய முடியும்.

என்.பி.எஸ். முதலீடு
என்.பி.எஸ். முதலீடு

மேலே உள்ள அட்டவணையின் மூலம் மாதம் ரூ. 3,000 நீண்ட கால நோக்கில் சேமிப்பதன் மூலம் எளிதாக ஒருவரின் ஓய்வுக் காலத்தில் ரூ.1 கோடிக்கு மேல் கிடைக்க கூடும் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் என்பிஎஸ்சின் சில ஆப்ஷன்களில் பங்குச் சந்தையில் குறிப்பிட தகுந்த அளவில் முதலீடு செய்யப்படுவதால் 10%க்கு மேல் வருமானம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

வரிச் சலுகை

மேலும் என்.பி.எஸ் திட்டத்தில் நிதி ஆண்டில் செய்யப்படும் ரூ.50,000 வரையிலான முதலீட்டுக்கு 80CCD (1B) பிரிவின் கீழ வருமான வரி விலக்கு கிடைக்கும். 30% வரி வருமான படிநிலைகளில் வருபவர்கள் இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 15,000 சேமிக்க முடியும்.

மேலே அறியப்பட்ட தரவுகளில் 85% அரசு ஊழியர்கள் மட்டுமே என்.பி.எஸ் போன்ற ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால், நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மிக குறைந்த அளவினரே அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் அரசு வேலைகளில் இல்லாத பெரும்பாலான மக்கள் ஓய்வூதியத்துக்கான எந்தத் திட்டத்திலும் சேரவில்லை என்பதை அறிய முடிகிறது. ஓய்வூதிய பலன்கள் இல்லாத காரணத்தால் வயதான காலத்தில் உடல் வலிமை இழக்கும்போது பிறரை நம்பி வாழ வேண்டி வருகிறது.

Investment (Representational Image)
Investment (Representational Image)
PPF-ல் முதலீடு செய்து `கோடீஸ்வரர்' ஆவது எப்படி?

உடல் வலிமையோடு இருக்கும் காலத்தில் உழைக்கும்போது ஒய்வுக் காலத்துக்கு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். என்.பி.எஸ் திட்டத்தில் அனைத்து இந்திய மக்களும்சேர முடியும் என்பதால் அனைவரும் சேமிக்க முன் வருவது நிம்மதியான ஓய்வு வாழ்க்கையை அளிக்கும். அதனால், அனைவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் பெற முன் வர வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு