Published:Updated:

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் யார்? மற்ற தொழில்களிலிருந்து வேறுபடுவது எப்படி?

ஆபரணம் விற்பது என்பது சாதாரணத் தொழில்முறை என்றால், ஆபரணம் விற்பதில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதே திவ்யா தேர்ந்தெடுத்த ஸ்டார்ட்அப் தொழில்முறை.

ஸ்டார்ட்அப்
ஸ்டார்ட்அப்

சர் வில்லியம் கோல்டிங் இப்படி குறிப் பிட்டிருக்கிறார்... 'பெண்கள் தங்களை ஆணுக்கு நிகரானவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் ஆண்களை விட மேலானவர்கள்!'

உண்மைதான்... இன்று பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமலேயே, சமூகத்தோடு போராடி எட்டிக்கொண்டிருக்கிற உச்சங்கள் அதை நிரூபிக்கும்படியே இருக்கின்றன. அப்படி உலக அளவில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு துறை ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் என்பவர் யார்?

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் எனப்படுபவர், 'சாதாரணச் சூழ்நிலையில் களைத்துப்போய், புதிய வழிகளின் மூலம் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு நல்லிணக்கத்தைத் தேடுபவர்' என்று சொல்லலாம்.

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் யார்? மற்ற தொழில்களிலிருந்து வேறுபடுவது எப்படி?

ஸ்டார்ட்அப் எவ்வாறு மற்ற தொழில்களிலிருந்து வேறுபடுகிறது?

ஓர் உதாரணம்... குமார் மற்றும் திவ்யா இருவரும் ஆபரணத் தொழிலில் இறங்க முடிவுசெய்கிறார்கள். விற்பனைக்கான இடம் ஒன்றைப் பிடித்து, அந்தப் பகுதியில் சந்தைப்படுத்தி விற்பனை செய்வதே குமாரின் முறை (பிசினஸ் மாடல்).

திவ்யாவின் பிசினஸ் மாடல் வேறுவிதம். ஆபரணம் வாங்குபவர்களின் உண்மையான பிரச்னை என்ன... அதை எந்த வகையில் புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு கையாளலாம் என்பதை அவர் கண்டறிகிறார். அதாவது... செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் (Artificial Intelligence) மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிதல், அதற்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு ஆபரணங்களை அளித்தல்... இதுவே திவ்யாவின் செயல்முறை. ஆபரணம் விற்பது என்பது சாதாரணத் தொழில்முறை என்றால், ஆபரணம் விற்பதில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதே திவ்யா தேர்ந்தெடுத்த ஸ்டார்ட்அப் தொழில்முறை.

செயல்முறையில் வேறுபாடுகள்:

குமாரின் தொழில்முறையானது அடிப் படையில் கடை வாடகை, ஊழியர் ஊதியம், கொள்முதல் செலவு, வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அடுத்ததாக... வருமானம் மூலம் கடையை விரிவுபடுத்துவது அல்லது அருகிலுள்ள ஏரியாவில் மேலும் ஒரு கடையை திறப்பது.

திவ்யாவின் தொழில்முறையானது... நிறுவனத்தின் வலைதளம் மூலமும் சமூக வலைதளங்கள் மூலமும் ஒருமித்த கருத்துள்ள வாடிக்கையாளரின் பிரச்னைகளைத் தீர்த்து, அதன்மூலம் விற்பனையைப் பெருக்குவது.

பொருளாதார வேறுபாடு

குமார் தனது சொந்தப் பணத்தின் மூலமும், நண்பர்கள் மற்றும் வங்கிகள் மூலமும் மூலதனத்தைத் திரட்டி தொழிலைத் தொடர்ந்து நடத்த வேண்டிய பிரிவைச் சேர்ந்தவர்.

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் யார்? மற்ற தொழில்களிலிருந்து வேறுபடுவது எப்படி?

திவ்யா தொழிலின் முதல் கட்டத்தை சொந்தப் பணத்தில் தொடங்குவார் அல்லது நண்பர்கள் மூலமாகத் திரட்டுவார். அடிப்படையான பிசினஸ் மாடல் தயாரானவுடன் முதலீட்டாளர் மூலம் மூலதனத்தைப் பெற்று தொழிலை வளர்ப்பார்.

ஸ்டார்ட்அப் ஒரு தொடக்கப்புள்ளி மட்டும்தானா?

ஸ்டார்ட்அப் ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே என்பதல்ல. வழக்கமான தொழில்முறையிலிருந்து விடுபட்டு, பிரச்னைக்குத் தீர்வு காண்பதையே முதல் குறிக்கோளாகக்கொண்டு, தேவையான நிபுணர்களின் ஆலோசனையோடு, அதற்கேற்ற முதலீட்டை முதலீட்டாளரிடம் பெற்று உரிய வளர்ச்சியை எட்டும் முறையே ஸ்டார்ட்அப்.

ஸ்டார்ட்அப் தொடங்க விரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கிறார், ஸ்டார்ட்அப் மற்றும் பிசினஸ் ஆலோசகர் காஜா மைதீன். அந்த வழிகாட்டுதலை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு! - ஸ்டார்ட்அப்... சக்சஸ்! https://www.vikatan.com/business/women/the-success-story-of-startup

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |