Published:Updated:

சிறுசேமிப்பு வட்டி அதிரடி வீழ்ச்சி..! - இப்போது என்ன செய்வது?

சிறுசேமிப்பு
 திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுசேமிப்பு திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டமான ‘செல்வமகள்’ சேமிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 9.6% வட்டி வழங்கப்பட்டது.

ஞ்சல் அலுவலக சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.

2020, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்துக்கு வட்டி 0.80% முதல் 1.40% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. சேமிப்புக் கணக்குக்கான வட்டி மட்டும் 4 சதவிகிதமாக அப்படியே தொடர்கிறது.

சிறுசேமிப்பு
சிறுசேமிப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) வட்டி 7.9 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு ஆர்.டி-க்கான வட்டி அதிகபட்சமாக 1.40% குறைக்கப்பட்டு, 7.2 சதவிகிதத்திலிருந்து 5.80 சதவிகிதமாக இருக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக முதலீடு செய்யும் ஆர்.டி-க்கு இவ்வளவு குறைவாக வட்டி வழங்கப்படுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சிறுசேமிப்பு வட்டி அதிரடி வீழ்ச்சி..! - இப்போது என்ன செய்வது?
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான திட்டமான ‘செல்வமகள்’ சேமிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 9.6% வட்டி வழங்கப்பட்டது.

அது இப்போது 7.6 சதவிகிதமாக இருக்கிறது. வருமான வரிச் சலுகை அளிக்கும் ஐந்தாண்டு மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 8.6 சதவிகிதத்திலிருந்து 7.4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கிசான் விகாஸ் பத்திர முதலீட்டுக்கான வட்டி 7.6 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலீடு இதற்கு முன்னர் 113 மாதங்களில் இரட்டிப்பானது; இப்போது 124 மாதங்களில் அதாவது, 10.4 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். வரிச் சேமிப்பு அளிக்கும் தேசிய சேமிப்புப் பத்திர (என்.எஸ்.சி) முதலீட்டுக்கு வட்டி 7.9 சதவிகிதத்திலிருந்து 6.8 சதவிகிதமாகவும், மன்த்லி இன்கம் அக்கவுன்ட்டுக்கான வட்டி 7.6 சதவிகிதத்திலிருந்து 6.6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுவாக, மத்திய அரசு பி.பி.எஃப் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அவ்வளவு சுலபமாக குறைக்காது. காரணம், இவை முறையே ஓய்வுக்காலச் சேமிப்பு மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சேமிப்பாகும். எனினும், இந்தத் திட்டங்களுக்கான வட்டி கணிசமாகக் குறையக் காரணம், இந்திய அரசின் பத்து ஆண்டுகளுக்கான பாண்ட் வருமானம் மிகவும் குறைந்ததுதான். தற்போதைய நிலையில், இந்த பாண்டின் வருமானம் கடந்த மூன்று மாத சராசரி 6.51 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதனால்தான் இந்தத் திட்டங்களுக்கான வட்டி கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

சிறுசேமிப்பு
சிறுசேமிப்பு

`சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீட்டைத் தொடர்வதே நல்லது’ என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களைவிட வங்கித் திட்டங்களில் குறைவான வட்டி கிடைப்பதும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ரிஸ்க்காக மாறியிருப்பதுமே இதற்குக் காரணங்கள்.