Published:Updated:

வணிகர் ஒருவர் அமேசானில் பொருள்களை எப்படி விற்பது? - ஓர் எளிய பதில்

இ-காமர்ஸ்
இ-காமர்ஸ்

நம் நாட்டு உள்ளூர் வணிகர்களின் வணிகத்தை மேம்படுத்த, நம் நாட்டிலிருக்கும் பல வணிக அமைப்புகளுடனும் பங்குதாரராக இணைந்திருக்கிறது அமேசான் நிறுவனம்.

"அதற்கு குறிப்பிட்ட அளவு இடவசதி வேண்டும்; 'குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்' என்ற விதிமுறை எதுவும் இல்லை. ஒரே ஒரு பொருளைத் தயாரிப்பவர்கூட அமேசானில் விற்பனையாளர் ஆகலாம். அமேசானின் விற்பனையாளர் தளத்தில் உங்களுக்கென ஒரு சுயவிவரப் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, நீங்கள் விற்க விரும்பும் பொருள்களை புகைப்படம் எடுத்து அந்தத் தளத்தில் சேர்க்க வேண்டும். உங்கள் பொருள் நுகர்வோர் பார்வைக்கு அமேசான் பக்கத்தில் தோன்றும். நுகர்வோர் ஆர்டர் செய்ததும், நாங்களே உங்களிடம் வந்து பொருளைப் பெற்றுக் கொள்வோம். பொருளுக்கான பணம் இந்திய ரூபாய் மதிப்பில் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்."

- இந்த பதிலை நமக்கு அளித்தவர், அமேசானின் இந்திய விற்பனையாளர் சேவைப் பிரிவின் துணைத் தலைவர் கோபால் பிள்ளை.

உலக அளவில் இ-காமர்ஸ் வணிகம் மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருந்தாலும், நம் நாட்டு உள்ளூர் வணிகர்கள் இதன் மூலம் பொருள்களை விற்பது சில ஆண்டுகள் வரை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. தற்போது இந்த நிலைமை வேகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. சிறு நகரங்களிலிருந்துகூட சிறு வணிகர்கள் பலர் இணைய வணிகத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். இன்னும் சில வணிகர்களுக்கு இதில் ஈடுபட ஆர்வம் இருக்கிறது; ஆனால், எப்படிச் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

நம் நாட்டு உள்ளூர் வணிகர்களின் வணிகத்தை மேம்படுத்த, நம் நாட்டிலிருக்கும் பல வணிக அமைப்புகளுடனும் பங்குதாரராக இணைந்திருக்கிறது அமேசான் நிறுவனம்

நாம் நினைக்கும் அளவுக்கு இ-காமர்ஸ் தளங்களில் வணிகம் செய்வது அவ்வளவு சிரமமான காரியம் கிடையாது. இந்தியாவில் உற்பத்தியாகும் எல்லாப் பொருள்களுக்கும், எல்லாப் பகுதிகளிலும் நிறைய தேவை இருக்கிறது. பல பொருள்களுக்கு நம் நாட்டைத் தாண்டி, பல உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பிருக்கிறது. இந்த வணிக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நம் வணிகர்களின் கைகளில்தான் இருக்கிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2wjtBy9

நம் நாட்டு உள்ளூர் வணிகர்களின் வணிகத்தை மேம்படுத்த, நம் நாட்டிலிருக்கும் பல வணிக அமைப்புகளுடனும் பங்குதாரராக இணைந்திருக்கிறது அமேசான் நிறுவனம். திருப்பூர் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன், கரூர் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் தஞ்சாவூரில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜி ஆகியவை இவற்றில் அடங்கும். அமேசான் மூலம் இந்தியாவின் 36 முக்கியமான நகரங்களிலும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு வணிகர்களுக்கு இருக்கிறது.

வணிகர் ஒருவர் அமேசானில் பொருள்களை எப்படி விற்பது? - ஓர் எளிய பதில்

2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை அமேசான் நிறுவனத்துக்கு இந்தியாவிலிருந்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை 30,000-க்கும் கீழே. தற்போது 5.5 லட்சம் விற்பனையாளர்களுக்கு மேல் அமேசானில் வணிகம் செய்கிறார்கள். அந்த அளவுக்கு விற்பனையாளர்கள் உயரக் காரணமாக இருந்தவர் கோபால் பிள்ளை.

அமேசானின் இந்திய விற்பனையாளர் சேவைப் பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் அவர், கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். அமேசான் நிறுவனம் இந்திய விற்பனையாளர்களுக்காக எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், இணையத்தைப் பற்றி தெரியாதவர்கள்கூட மின்வணிகத்தில் எப்படி வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நம் கேள்விகளும் அவர் பதில்களும்... நாணயம் விகடன் இதழில் வாசிக்க > லாபத்துக்குக் கைகொடுக்கும் இ-காமர்ஸ்! - சிறு வணிகர்களுக்கான டிப்ஸ் https://www.vikatan.com/business/news/tips-for-retailer-about-e-commerce

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு