Published:Updated:

திவால் டு பில்லியன் டாலர்... ஃபீனிக்ஸ் பறவையாக மீண்ட டி.டி.கே!

இல்லத் தலைவிகள் சமையலறையில் படும்பாட்டைத் தெரிந்துகொண்டு சமையலை எளிதாக்கும் வகையில் 1959-ம் ஆண்டு 'ப்ரஸ்டீஜ் ப்ரஷர் குக்கரை' அறிமுகப்படுத்தினார் டி.டி.ஜெ.

டி.டி.கே
டி.டி.கே

தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களில் 'டி.டி.கே'-வுக்குத் தனியிடம் உண்டு. 91 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 'ஆல்போலத் தழைத்து அறுகுபோல் வேரோடி' இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.

இன்றைக்கு டி.டி.கே குழுமத்தின் சேர்மனாக இருக்கும் டி.டி.ஜெகநாதன் (டி.டி.ஜெ), அமெரிக்காவில் கார்னல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். "நமது நிறுவனம் சிக்கலிலிருந்தால், அதை மூடிவிட்டு இங்கு வந்து என்னோடு நிம்மதியாக இருங்கள்'' என்று டி.டி.ஜெ தன் பெற்றோர்களிடம் சொன்னார். ஆனால், நரசிம்மனோ, "நிறுவனத்துக்காக நாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் வரை நான் இந்தியாவை விட்டு வர மாட்டேன்'' என உறுதியாகச் சொல்லிவிட, உடனே சென்னைக்கு வந்து டி.டி.கே நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பித்தார் டி.டி.ஜெ.

மூன்று தலைமுறைகள் சம்பந்தப்பட்ட வணிகக் கதை. நூறு ஆண்டுகளில் இந்த நிறுவனம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பதை விவரிப்பது. பிசினஸில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் படிக்கலாம்

ஏறக்குறைய திவால் நிலையிலிருந்த அந்த நிறுவனத்தை பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழச் செய்து, அதை பில்லியன் டாலர் கம்பெனியாக உயர்த்தினார் டி.டி.ஜெ.

இல்லத் தலைவிகள் சமையலறையில் படும்பாட்டைத் தெரிந்துகொண்டு சமையலை எளிதாக்கும் வகையில் 1959-ம் ஆண்டு 'ப்ரஸ்டீஜ் ப்ரஷர் குக்கரை' அறிமுகப்படுத்தினார் டி.டி.ஜெ. ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 15 மில்லியன் குக்கர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் டி.டி.கே நிறுவனத்தின் பங்கு சுமார் 5 மில்லியன். குழும வருமானத்தில் டி.டி.கே ப்ரஸ்டீஜ் நிறுவனத்தின் பங்களிப்பு சுமார் 35% ஆகும். இன்றைக்கு இந்த நிறுவனம் வீட்டுக்கும், சமையல்கட்டுக்கும் தேவைப்படும் வகையில் சுமார் 600 பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தக் குழுமத்தின் பிரதான நிறுவனமாக இருக்கும் டி.டி.கே ப்ரஸ்டீஜ் சொந்தமாக ஐந்து தொழிற்சாலை கள், 23 கிடங்குகள், பல இடங்களில் புதுமை யாக்க மையங்கள், இந்தியாவெங்கும் 50,000 வணிகர்கள், சர்வதேச அளவில் பிரதிநிதித்துவம் எனப் பரந்துவிரிந்து செயல்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டு இதன் வருமானம் ரூ.100 கோடி, 2013-ம் ஆண்டு இதன் வருமானம் ரூ.1,300 கோடி. பங்குச் சந்தையிலும் இந்த நிறுவனப் பங்கு 4,000 ரூபாயில் ஆரம்பித்து, 2017-ம் ஆண்டு 6,500 ரூபாயைத் தொட்டு, இன்றைக்கு சுமார் ரூ.8,000 வரை பரிவர்த்தனையாகி வருகிறது. இதன் சந்தை மூலதனம் ரூ.10,000 கோடிக்குமேல்.

> டி.டி.கே.வின் கட்டளைகள்...

* நஷ்டத்துக்கு வணிகம் செய்யக் கூடாது.

* வணிகத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.

* தயாரிப்புகள் குறித்து உண்மையான கருத்துகளை அறிய முகவர்களை, நுகர்வோர்களைச் சந்திப்பது அவசியம்.

* தொழில் செய்யும் வழிமுறையைப் புதுமையாக மாற்றுங்கள்.

திவால் டு பில்லியன் டாலர்... ஃபீனிக்ஸ் பறவையாக மீண்ட டி.டி.கே!

* இலக்குகள் மாறலாம்; ஆனால், மாற்றத்துக்கான செயல்பாடுகள் மாறாது.

* வியாபாரம் வளர உங்கள் 'ஈகோ'வை மூட்டைகட்டி வையுங்கள்.

* உங்கள் பிராண்ட்மீது யாரும், மறக்க முடியாத ஒரு 'கதை'யை உருவாக்குங்கள்.

* வெற்றி பெறும்வரை அடுத்தடுத்த யோசனைகளை முயன்று பாருங்கள்.

டி.டி.கே குழுமம் கடந்துவந்த பாதையைப் பற்றி வெளிவந்திருக்கும் புத்தகம்தான், 'டிஸ்ரப்ட் அண்ட் கான்குயர் (Disrupt & Conquer – How TTK Prestige Became a Billion Dollar Company)'. டி.டி.ஜெகநாதனும் சந்த்யா மெண்டோன்காவும் இணைந்து எழுதிய இந்தப் புத்தகத்தை பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. டி.டி.கே நிறுவனத்தின் வரலாற்றைத் துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்துச்சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் மூன்று தலைமுறைகள் சம்பந்தப்பட்ட வணிகக் கதை. நூறு ஆண்டுகளில் இந்த நிறுவனம் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பதை விவரிப்பது. பிசினஸில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் படிக்கலாம். - இதன் சிறப்பு அம்சங்களை விவரிக்கும் நாணயம் விகடன் இதழில் புதிய தொடர் கட்டுரை முழுமையாக வாசிக்க > மூன்று தலைமுறை பிசினஸ் சாம்ராஜ்யம்! - ஃபீனிக்ஸ் பறவையாக மீண்ட டி.டி.கே! https://www.vikatan.com/news/general-news/how-ttk-came-back-strong-new-series-part-1

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |