Published:Updated:

முதலீட்டுக் கலவையில் கமாடிட்டிகள் ஏன் அவசியம்?

முதலீட்டுக் கலவை
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டுக் கலவை

முதலீட்டுக் கலவை

முதலீட்டுக் கலவையில் கமாடிட்டிகள் ஏன் அவசியம்?

முதலீட்டுக் கலவை

Published:Updated:
முதலீட்டுக் கலவை
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டுக் கலவை

நிதின் கபாடி, தலைவர் - இ.டி.எஃப் பிசினஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

ஒரு முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்கும்போது, சரியான சொத்து ஒதுக்கீடு (Asset allocation) மிக முக்கிய மானதாகும். ஏனென்றால், வெவ்வேறு சொத்துப் பிரிவுகளில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சொத்துப் பிரிவில் ஏதேனும் வருமானக் குறைவு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முதலீட்டுக் கலவை உதவும்.

நிதின் கபாடி 
தலைவர் - இ.டி.எஃப் பிசினஸ், 
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
நிதின் கபாடி தலைவர் - இ.டி.எஃப் பிசினஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

மேலும், ஒவ்வொரு சொத்துப் பிரிவுக்கும் முதலீட்டுக் கலவையில் ஒரு தனித்துவமான பங்களிப்பு உள்ளது. முதலீட்டுக் கலவையில் இடம்பெற்றிருக்கும் ஈக்விட்டி (Equity) மூலதன மதிப்பு அதிகரிப்புக்கு உதவும். அதே வேளையில், கடன் சார்ந்த முதலீடுகள் மிகவும் தேவை யான வருமான ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற கமாடிட்டிகள் (Commodities) பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன.

கமாடிட்டிகளின் தேவை...

முதலீட்டாளர்கள், கமாடிட்டிகளின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதால், அவர்களின் முதலீட்டுக் கலவையில் கமாடிட்டிகளுக்கான ஒதுக்கீடு பெரும்பாலும் குறைவாகவே இருக்கிறது. நிச்சயமற்ற காலங்களில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) போன்ற சொத்துகள் மிகவும் நிலையற்றதாக மாறும். அப்போது கமாட்டிட்டிகளின் தேவை அதிகரித்து அவற்றின் விலை அதிகரிக்கும். கமாடிட்டி சார்ந்த முதலீடுகள், சொத்து ஒதுக்கீட்டின்படி முதலீட்டுக் கலவையில் இடம்பெற்றிருக்கும் போது, முதலீட்டுக் கலவையின் மதிப்பு உயர்வை முதலீட்டாளர்கள் உணர்ந்திருப்பார்கள். இதற்கு சமீபத்திய உதாரணங்கள், கோவிட் 19 தொற்று நோய் பரவல் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் ஆகும். ஒருவரின் முதலீட்டுக் கலவையில் கமாடிட்டிகள் இடம்பெறும்போது, மூன்று தனித்துவமான பலன்கள் கிடைக்கின்றன.

1. முதலீட்டுக் கலவை பரவலாக்கம்...

பங்குச் சந்தை சீரான ஏற்றத்தில் இருக்கும்போது, முதலீட்டாளர் ஒருவர், அவரின் முதலீட்டுத் தொகையின் பெரும்பகுதியை நிறுவனப் பங்குகளுக்கு ஒதுக்க முடிவு செய்கிறார் எனில், இந்த நிலையில், அவரின் சொத்து ஒதுக்கீட்டை மனதில்கொண்டு, அவர் பங்குகளில் அதிகமாக முதலீடு செல்வதைத் தவிர்க்கிறார். சில நாள்களுக்குப் பிறகு, எதிர் மறையான மாற்றத்தின் காரணமாக பங்குச் சந்தையின் சென்டிமென்டுகள் மாறுகின்றன; பங்குகளின் விலையும் குறைகிறது. இதனால், பங்குச் சந்தை செய்யப்பட்ட முதலீட் டின் மதிப்பும் குறைகிறது. அதே நேரத்தில், முக்கிய கமாடிட்டியான தங்கம் ஒரு பாதுகாப்பான மற்றும் வலுவான லாபத்தைத் தருகிறது. இதன் விளைவாக, பங்கு சார்ந்த முதலீடுகளில் ஏற்பட்ட இழப்புகளைக் கணிசமான அளவில் ஈடுகட்ட தங்கத்தின் விலை ஏற்றம் உதவுகிறது. இதைத்தான் முதலீட்டுப் பரவலாக்கம் (Portfolio diversification) உறுதி செய்கிறது. குறிப்பாக, முதலீட்டாளர் அஸெட் அலொகேஷன்படி, கமாடிட்டிகளிலும் முதலீடு செய்து வரும்போது அவரின் முதலீட்டுக் கலவை அதிக இறக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்கும்.

முதலீட்டுக் கலவையில் கமாடிட்டிகள் ஏன் அவசியம்?

2. பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு

கமாடிட்டிகளில் முதலீடு செய்வது பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பைத் தாங்கிக் கொள்ள ஒரு முதலீட்டாளருக்கு உதவுகிறது. காரணம், பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலை களில், பொருள்களின் தேவை அதிகரிக்கிறது; கூடவே, விலை களும் உயர்கின்றன. இந்த நிலையில், விலைவாசி உயர்வில் இருந்து உங்கள் முதலீடுகளை கமாடிட்டிகளின் விலை உயர்வு பாதுகாக்கிறது; அதாவது, முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றிருக்கும் கமாடிட்டிகளின் மதிப்பு உயர்வால் முதலீட்டுக் கலவையின் வருமானம் உயர் வதுடன், பாதுகாக்கவும்படுகிறது. கமாடிட்டிகள் பணவீக்கத்துக்கு எதிராக பாதுகாப்பு அளிப் பதுடன், அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நல்ல ஹெட்ஜ்-ஆகவும் செயல்படுகிறது.

முதலீட்டுக் கலவையின் வருமானத்தை அதிகரித்தல்

உலகளாவிய தேவையின் காரணமாக, கமாடிட்டிகளில் செய்யப்பட்ட முதலீடுகள், முதலீட்டுக் கலவையின் வருமானத்தை உயர்த்த உங்களுக்கு உதவும். வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய ஏற்ற, இறக்கம் ஆகியவற்றின் காரணமாக கமாடிட்டி களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகின்றன. ஆனால், அதிக தேவை கமாடிட்டிகளின் வருமானத் தில் ஒட்டுமொத்த உயர்வை உறுதிசெய்கிறது.

தங்க இ.டி.எஃப் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்

கமாடிட்டிகளில் முதலீடு செய்ய எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் என்கிற இடிஎஃப் (ETF) சிறந்ததாக இருக்கிறது. இந்தப் பிரிவில் வரும் தங்க இ.டி.எஃப் மற்றும் வெள்ளி இ.டி.எஃப் (Gold ETF or Silver ETF) சுலபமான வழிமுறையாக இருக்கிறது. நம்மில் பலர் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய விரும்பு கிறோம். ஆனால், அவற்றைப் பாதுகாப்பாக வைத் திருப்பது மற்றும் அவற்றின் தரம் கவலைக்குரிய விஷயங்கள் என்பதால், உண்மையான கமாடிட்டிகளை (Actual / Physical commodities) வாங்குவதில் சிக்கலைச் சந்திக்க விரும்பவில்லை. இத்தகைய சூழ்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாக இருக்கின்றன. ஏனென்றால், இ.டி.எஃப்-கள் டீமேட் வடிவத்தில் வைக்கப்படுவதால், அவற்றின் மூலம் முதலீடு செய்வதால், திருட்டு மற்றும் தரம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

இரண்டாவதாக, வாங்குவதற்கான செலவு குறை வாக உள்ளது. செய்கூலி கட்டணம் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் இல்லை என்பது சிறப்பு அம்சமாகும். மூன்றாவதாக, வாங்கி, விற்பதில் உள்ள நெகிழ்வுத்தன்மை. அதாவது, இ.டி.எஃப்-கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளதால், முதலீட் டாளர்கள் வர்த்தக நேரத்தில் எப்போது வேண்டுமானா லும் வாங்கி, விற்க முடியும். நான்காவதாக, லாக்இன் காலம் இல்லை. எனவே, வாங்கி எப்போது வேண்டு மானாலும் விற்கலாம். ஐந்தாவதாக, முதலீட் டாளர்கள் இ.டி.எஃப் வழியில் தங்கம் அல்லது வெள்ளியை சிறிய தொகையில்கூட வாங்கிக் குவிக்க ஆரம்பிக்கலாம்.

நீங்கள் டீமேட் கணக்கு இல்லாத முதலீட்டாளராக இருந்தால், கோல்டு ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் மற்றும் சில்வர் ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகளில் (Gold Fund of Fund & Silver Fund of Fund) முதலீடு செய்யலாம்.

ஒரு முதலீட்டாளர் தங்கத்தின் எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டால், உதாரணமாக, மகள் திருமணத்துக்கு இந்த கோல்டு ஃபண்ட் உதவும். அத்தகைய முதலீட்டாளர் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) முறையில் மாதம்தோறும் ரூ.1,000 முதலீடு செய்துவரலாம். இதே போல், வெள்ளி ஃபண்டிலும் முதலீடு செய்து வரலாம். அண்மையில், இ.டி.எஃப்-கள் கமாடிட்டி சந்தையில் முதலீடு செய்வதை எளிதாக்கி இருக்கின்றன மற்றும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய உதவுகின்றன. இதனால், அவை முதலீட்டுக் கலவையைப் பரவலாக்க உதவுகின்றன.

நம் மக்கள் விலை மதிப்பற்ற தங்கம் போன்ற உலோகங்களை அதிகமாக வாங்கி வந்துள்ளனர். இப்போது, இந்த கமாடிட்டிகளின் அடிப்படையிலான இ.டி.எஃப்-களைப் பயன்படுத்தி, ஒருவரின் முதலீட்டுக் கலவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism