Published:Updated:

பணவீக்க விகிதத்தைத் தாண்டி முதலீட்டில் அதிக வருமானம் பெறும் வழிகள்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

பணவீக்க விகிதத்தைத் தாண்டி முதலீட்டில் அதிக வருமானம் பெறும் வழிகள்!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இந்தியர்கள் பணவீக்கத்தைப் (Inflation) புரிந்துகொள்ளாமல் 100% பாதுகாப்பு என ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்தார்கள்; தொடர்ந்து செய்தும் வருகிறார்கள். அல்லது முதலீட்டைப் புரிந்து கொள்ளாமல், 100% ரிஸ்க் உள்ள ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ், கிரிப்டோகரன்சி போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், https://www.vbuildwealth.com/

கடன் வாங்காமல் நிதி இலக்குகள் நிறைவேற...

ஒருவர் முதலீட்டின்மூலம் பணவீக்க விகித்தைத் தாண்டி அதிக வருமானம் பெற்றால்தான் கடன் வாங்காமல் அவரின் முக்கியமான நிதி இலக்குகளான பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் ஆகியவற்றை நிறைவேற்ற முடியும். பணவீக்க விகிதத்தை நம் முதலீட்டை விழுங்கும் பூதம் என்று சொல்லலாம். இது பணத்தின் மதிப்பை மிகவும் குறைத்து விடுகிறது. உதாரணமாக, நீண்ட கால ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 5% என்று வைத்துக் கொள்வோம். இன்றைய 30,000 ரூபாயின் உண்மையான மதிப்பு (Real value) 20 ஆண்டுகள் கழித்து சுமார் 11,000 ரூபாயாகத்தான் இருக்கும். அதே நேரத்தில், இன்றைக்கு ரூ.30,000-க்கு வாங்கும் பொருள்களை 20 ஆண்டுகள் கழித்து வாங்க கிட்டத்தட்ட ரூ.80,000 தேவைப்படும். பணவீக்க விகித பாதிப்பிலிருந்து விடுபட, அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்.

முதலீட்டின் மூலம் கிடைக்கும் உண்மை யான வருமானம் (Real Return) என்பது, கிடைக்கும் வருமானத்திலிருந்து பணவீக்க விகிதத்தைக் கழிப்பதாகும். உதாரணமாக, ஒரு முதலீட்டின் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைக்கிறது. நீண்ட கால சராசரி பணவீக்க விகிதம் 5% எனில், உண்மையான வருமானம் (12-5=) 7% ஆகும்.

பணவீக்க விகிதத்தைத் தாண்டி
முதலீட்டில் அதிக வருமானம் பெறும் வழிகள்!

பிரித்து முதலீடு...

பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் பெற முதலீடுகளைப் பிரித்து மேற்கொள்ள வேண்டும். கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (வங்கி எஃப்.டடி, கம்பெனி எஃப்.டி, கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்), பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (நிறுவனப் பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்), ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ரெய்ட் (Real Estate Investment Trust - REIT), டிஜிட்டல் தங்கம் (கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு பாண்டு) ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்யும்போது நீண்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகிதத் துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. முதலீட்டை இப்படிப் பிரித்து செய்யும்போது, ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றின் அடிப் படையில் முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

தங்கத்தில் முதலீடு...

முதலீட்டுக் காலம் சுமார் ஐந்து ஆண்டு களுக்கு மேற்படும்போதுதான் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக, உலக அளவில் கெட்ட விஷயங்கள் (நாடுகளுக்கு இடையே போர், கொரானா போன்ற பெரும் தொற்று, உலக அளவில் நிதி நெருக்கடி போன்றவை) நடக்கும் போது தங்கத்தின் விலை உயரும். இந்தக் கால கட்டத்தில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும்.

தொடர்ந்து நிலையற்றதன்மை காணப்படும் காலத்தில் கடன் சார்ந்த திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்கள், தங்கம் ஆகியவற்றில் சமமாக முதலீட்டைப் பிரித்து முதலீட்டை மேற்கொண்டால் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் பெற முடியும்.

பொதுவாக, உலக அளவில் நிச்சயமற்ற நிலைமை காணப்படும்போது பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல் படாது. அந்தக் காலகட்டத்தில் தங்கத்தின் விலை ஏற ஆரம்பிக்கும். தற்போது உக்ரைன் – ரஷ்யா போரால் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியப் பங்குச் சந்தை 15 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதே நேரத்தில், இந்த அளவுக்குத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. முதலீட்டுக் கலவையில் எதிரெதிர் திசையில் வருமானப் போக்கு இருக்கும் முதலீடு இருக்கும்போது, அந்த முதலீட்டுக் கலவை சராசரியாக 10% அளவுக்கு எப்போதும் வருமானம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

நாம் மேலே குறிப்பிட்ட முதலீடுகளில் கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரி யாக 6% வருமானம் கிடைக்கக்கூடும். பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதமும் (இதைவிட பல பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் மிக அதிக வருமானம் தந்து வருகின்றன), ‘ரெய்ட்’டில் 12 சதவிகிதமும் தங்கத்தில் 10 சதவிகிதமும் வருமானம் கிடைக்கக்கூடும். ஆக, நீண்ட காலத்தில் மேற்கண்ட முதலீட்டுக் கலவை சராசரியாக 10% வருமானம் தரக் கூடும். இதில் பணவீக்க விகிதம் 5% கழித்தால், உண்மையான வருமானம் சுமார் 5% கிடைக்கும். முதலீட்டுக் காலம் சுமார் மூன்று ஆண்டு என்கிறபோது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள் சரியாக இருக்கும். மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட காலத்தில் வரிக்குப் பிந்தைய நிலையில் கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கும்.

ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் உண்மையான வருமானம் மூன்று சதவிகிதத் துக்கு மேல் கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். ரிஸ்க் எடுப்பது மூலம் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிக வருமானத்தை நீண்ட காலத்தில் பெற முடியும்.

பணவீக்க விகிதத்தைத் தாண்டி
முதலீட்டில் அதிக வருமானம் பெறும் வழிகள்!

இறக்குமதியாகும் பணவீக்க விகிதம்..!

இந்தியாவை பொறுத்தவரை, பணவீக்க விகிதத்தை இறக்குமதி செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். நம் பெட்ரோல், டீசல் போன்றவற்றை சுமார் 83% இறக்குமதி செய்தே பயன்படுத்துகிறோம். தங்கத்தை கிட்டத்தட்ட 100% இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம். இதன் மூலம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கணிசமாக வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற இறக்குமதிகளால் நாட்டில் விலைவாசி உயர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. ரஷ்யா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்துக்கு உயர்ந்திருக்கிறது. இதனால், நாட்டில் பணவீக்க விகிதமும் அதிகரித்து வருகிறது. நாட்டின் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிக்கும்போது, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறையும். இதனாலும் பணவீக்க விகிதம் அதிகரிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism