பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் கடன் சந்தை முதலீடுகள்!

பாண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
பாண்ட் முதலீடு

பாண்ட் முதலீடு

கஜேந்திர மணவாளன், ஃபண்ட் மேனேஜர், Composite Investments Pvt Ltd, Bangalore

உலகம் முழுவதும் பணவீக்கம் பெரும் பிரச்னையாகத் தலைதூக்கி இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எரி பொருள் சார்ந்த அனைத்துமே விலை உயர்ந்திருக்கின்றன.இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அனைத் துமே பணவீக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் மக்களின் அன்றாட செலவு பட்ஜெட் உயர்ந்துகொண்டே வருகிறது.

கஜேந்திர மணவாளன் 
ஃபண்ட் மேனேஜர், 
Composite Investments Pvt Ltd, 
Bangalore
கஜேந்திர மணவாளன் ஃபண்ட் மேனேஜர், Composite Investments Pvt Ltd, Bangalore

இதனால் ஏற்பட்ட பண வீக்கத்தைச் சமாளிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் கணிச மாக உயர்த்தி வருகின்றன. இந்தியாவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்தி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத் தின் (IMF) கணிப்புப்படி, 2022 இறுதியில் சர்வதேச பணவீக்கம் 8.8% அளவுக்கு உச்சத்தை எட்டும் என்றும், அதன்பிறகு சில காலத்துக்கு அந்த நிலையிலேயே நீடித்து பின்னர் படிப்படியாகக் குறைந்து, 2024-ம் ஆண்டில் 4.1 சதவிகிதமாகக் குறையும் என்றும் கூறியுள்ளது. மேலும், முக்கியப் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா ஆகியவை அனைத்தும் தொடர்ச்சியாக சரிவைச் சந்திக்கும் என்றும், 2023 உலகில் பரவலான மக்கள் பொருளாதார மந்தநிலையால் பாதிப்பை உணர்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால்
அதிகரிக்கும் கடன் சந்தை முதலீடுகள்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே பல சவால்கள் இருக்கின்றன. டாலர் வலுவடைந்து வருவ தால், உள்நாட்டு விலைவாசி யில் குறிப்பிடத்தக்க பாதிப்பு உண்டாகிறது. இதனால் வாழ்க்கை நடத்துவதற்கான செலவு அதிகரிக்கிறது. இதனால் கொரோனா பெருந் தொற்றுக் கால நெருக்கடி யிலிருந்து மீண்டு வந்த பொருளாதரம் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியிருக்கிறது.

பணவீக்கம் உயரும் அதே சமயம் கடன் பத்திரங்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. பொருளாதாரத்தில் ஏற்பட உள்ள நெருக்கடி, பணவீக்கம் மறும் விலைவாசி உயர்வு போன்ற காரணங் களால் பாதுகாப்பான முதலீடுகள் நோக்கி முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியுள்ளது.

முக்கியமாக, கடன் பத்திரங்களின் மீது முதலீட் டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். காரணம், வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படை யில் கடன் பத்திரங்களின் மதிப்பு சந்தையில் உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் 10 வருட கருவூல பத்திரங்களின் மதிப்பு இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.5 சதவிகித மாக இருந்தது, தற்போது 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் அரசின் கடன் பத்திரங்களின் மதிப்பு ஜூன் 2022-லிருந்து 7.10 - 7.60% என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்தப் பத்திரங்களின் மீதான ஏற்றமானது மே 2021-ல் 6 சதவிகிதமாக இருந்தது ஜூன் 2022-ல் 7.61 சதவிகிதமாக உள்ளது. 10 வருட அரசு பத்திரம் 2022 நவம்பர் 2-ம் தேதி 7.40% என்கிற அளவில் வர்த்தகமானது.

இந்தியாவில் உணவுப் பொருள்கள் சாகுபடி பல்வேறு காரணங்களால் சில நெருக்கடிகளைக் கொண்டிருக்கும் அதே சமயம், உள்நாட்டு சந்தை ஓரளவுக்கு ஸ்திரமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம், சர்வதேச புவி அரசியல் சூழலும் சுமுகமாக இல்லாததால், கச்சா எண்ணெய் போன்ற எரிபொருள் சார்ந்தும் பொருளாதாரத்துக்கு சிக்கில்கள் உள்ளன.

இதனால் டாலர் தொடர்ந்து வலுவடையும் பட்சத்தில் பணவீக்கமும் விலைவாசியும் உயரும் சூழலே நிலவுகிறது. உள்நாட்டு ஜி.டி.பி வளர்ச்சி கணிப்பு 2022-23 நிதி ஆண்டுக்கு 7.0 சதவிகிதமாகவும், நிதிப் பற்றாக்குறை 6.4 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, 10 வருட அரசு கடன் பத்திரங்களின் மதிப்பு அடுத்த 2 - 4 மாதங்களில் அதன் உச்சநிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, முதலீட்டாளர்கள் அடுத்த 2 - 4 மாதங் களுக்கு தொடர்ச்சியாக நீண்ட கால முதிர்வு கொண்ட அரசுக் கடன் பத்திரங்கள், மாநில அரசு கடன் பத்திரங்கள் போன்றவற்றில் கணிசமான முதலீட்டை மேற்கொண்டு வரலாம்.

சர்வதேச பொருளாதாரம் சற்று மந்தநிலைக்கு ஆளாக உள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரமும் அதனால் கணிசமாகப் பாதிக்கப்படும். விரைவில் பணவீக்கம் கட்டுக்குள் வந்தால் வளர்ச்சியை நோக்கி நாடுகளின் கவனம் திரும்பும். அப்போது மீண்டும் கடன் பத்திரங்களின் மதிப்பு குறையலாம் என்பதை கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் அவசியம் உணர வேண்டும்!

தமிழில்: ஜெ.சரவணன்