Published:Updated:

9 மாதங்களில் 93 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள்..! கலக்கும் மியூச்சுவல் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

F U N D I N V E S T M E N T

இந்தியாவில் 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதக் காலத்தில் புதிதாக 93.3 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 8% அதிகம் ஆகும். 2020 டிசம்பரில் மட்டும் புதிதாக 14.2 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

அதே நேரத்தில், 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் 63.4 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 26% அதிகமாகும். 2019 டிசம்பரில் முடிக்கப்பட்ட கணக்குகள் 7.76 லட்சமாக உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

கூட்டிக் கழித்துப் பார்த்தால், எஸ்.ஐ.பி கணக்குகள் 2020 ஏப்ரல் – டிசம்பரில் 29.85 லட்சம் அதிகரித்திருக்கிறது. எஸ்.ஐ.பி கணக்குகள் முடிக்கப்பட்டதற்கு, அதிக லாபத்திலிருந்த முதலீடுகள் முற்றிலும் வெளியே எடுக்கப்பட்டது மற்றும் சரியாகச் செயல்படாத திட்டங்களின் எஸ்.ஐ.பி-களிலிருந்து வெளியேறியதாகும். இந்த முதலீட்டாளர்கள் மீண்டும் வேறு ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி கணக்கை ஆரம்பித்திருப்பது, புதிய எஸ்.ஐ.பி கணக்குகள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் தொகை தொடர்ந்து அதிகரித்து, 2020 டிசம்பரில் ரூ.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.