Published:Updated:

டிஜிட்டல் தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு..! என்ன காரணம்..?

GOLD

பிரீமியம் ஸ்டோரி

தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சென்ற ஏப்ரல் மாதத்தில் ரூ.184 கோடியையும், கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.680 கோடியையும் இந்திய மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

2020-21-ம் நிதியாண்டில் தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.3,200 கோடியும், கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.1,900 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் செய்யப்பட்ட முதலீடுகள் கடந்த மூன்று ஆண்டு களில் 13 - 14% வரை வருமானம் அளித்திருக்கின்றன. இது வங்கி எஃப்.டியைவிட மிக அதிகம். தங்கத்தை ஆபரணமாக வாங்கிச் சேர்ப்பதைவிட இது போன்ற டிஜிட்டல் திட்டங்களில் முதலீடு செய்வதால் செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற செலவினங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

டிஜிட்டல் தங்கத்தில் அதிகரிக்கும் 
முதலீடு..! என்ன காரணம்..?

கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவைப்படும். தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அடிப்படைத் தகவல்களைக் கொடுத்து முதலீடு செய்ய முடியும். எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்ய முடியும்.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும்போது தங்கம் சார்ந்த திட்டத்தில் அதிகம் முதலீடு செய்திருப்பது தங்கம் ஒரு சிறந்த முதலீடு என நம் மக்கள் நினைப்பதையே நமக்கு உணர்த்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு