நடப்பு
Published:Updated:

ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டிய எஸ்.ஐ.பி முதலீட்டு மதிப்பு..! அதிகரிக்க என்ன காரணம்..?

எஸ்.ஐ.பி
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி

M U T U A L F U N D

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்பது சிறு முதலீட்டாளர்கள் மற்றும் மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு லாபகரமான ஒன்றாக இருக்கிறது. காரணம், குறைவான மாத முதலீட்டுத் தொகை (மாதம் ரூ.100 கூட முதலீடு செய்யலாம்), எப்போது வேண்டு மானாலும் ஆரம்பித்து, நிறுத்தும் வசதி எனப் பல நன்மைகள் கிடைக்கும்.

ஹசன் அலி 
ஆலோசகர், 
Siptiger.com
ஹசன் அலி ஆலோசகர், Siptiger.com

ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டி...

கடந்த பிப்ரவரி மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு மதிப்பு முதல் முறையாக ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டி யுள்ளது. அதாவது, பிப்ரவரி மாதத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டின் மதிப்பு 7.97% அதிகரித்து, ரூ. 4.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிதாகச் செய்யப்பட்ட எஸ்.ஐ.பி முதலீடு ரூ.7,528 கோடியாக உள்ளது. ஆனால், அந்த மாதத்தில் எஸ்.ஐ.பி மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.31,128 கோடி அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புக்கு மிக முக்கியக் காரணம், இந்தியப் பங்குச் சந்தையின் உயர்வுதான். பிப்ரவரி மாதத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1250 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி

ரெகுலர் பிளான், டைரக்ட் பிளான்...

பிப்ரவரி மாதத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டில் விநியோகஸ்தர்கள் மூலம் முதலீடு செய்யும் ரெகுலர் பிளான் மூலம் ரூ.6,163 கோடியும் நேரடியாக முதலீடு செய்யும் டைரக்ட் பிளான் மூலம் ரூ.1,365 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட், எஸ்.ஐ.பி முதலீட்டில் விநியோகஸ்தர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மொத்த எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கை (ஃபோலியோ), 2021 ஜனவரி மாதத்தில் 3.55 கோடியாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 3.63 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஜனவரி மாதக் கடைசியில் ரூ.3.9 லட்சமாக இருந்தது.

கடந்த பிப்ரவரியில் மட்டும் புதிதாக 15 லட்சம் எஸ்.ஐ.பி கணக்கு கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் 7.8 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன அல்லது நிறுத்தப்பட்டுள்ளன என இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆஃம்பி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஈக்விட்டி ஃபண்ட் எஸ்.ஐ.பி...

எஸ்.பி.ஐ கணக்குகளில் சுமார் 85% ஈக்விட்டி ஃபண்ட் சார்ந்ததாக இருக்கின்றன. அதாவது, 3.07 கோடி கணக்குகள் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு உரியதாக உள்ளன. எஸ்.ஐ.பி ஈக் விட்டி ஃபண்டுகளின் மதிப்பு பிப்ரவரியில் 8% அதிகரித்து, ரூ.3.7 லட்சம் கோடியாக உள்ளன. லிக்விட் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு 0.8% குறைந்து, ரூ.277.33 கோடியாக உள்ளது.

வீட்டுக்கு ஒரு எஸ்.ஐ.பி கணக்கு தொடங்கப்பட வேண்டும் என்பதை நாணயம் விகடன் நீண்டகாலமாக தொடர்ந்து சொல்லி வருகிறது. இன்றைய இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, வேலைக்குச் சேர்ந்த வுடன் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இன்றைய இளைஞர்களும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகளை சரியாகப் புரிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். இனி வரும் ஆண்டு களில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகும் தொகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்!