நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

என்.பி.எஸ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி..! அதிகரிக்க என்ன காரணம்...?

என்.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
என்.பி.எஸ்

NPS

நிம்மதியான ஓய்வுக்காலப் பலன்கள் வழங்குவதில் என்.பி.எஸ் (நேஷனல் பென்ஷன் ஸ்கீம்) பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் முக்கியமான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஏழு மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இந்தத் திட்டத்தின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம், பங்குச் சந்தையின் உயர்வைக் குறிப்பிடலாம்.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தத் திட்டத்தின் மூலம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலும் ரூ.5 லட்சம் கோடி சொத்தை நிர்வகிக்கும் மிகப்பெரிய திட்டமாக வளர்ந்துள்ளது.

என்.பி.எஸ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி..! அதிகரிக்க என்ன காரணம்...?

இந்தத் திட்டத்தில் நிர்வகிக்கப்படும் ரூ.6 லட்சம் கோடியில் 85% மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பங்களிப்பாகும். மீதமுள்ள 15% தனியார் நிறுவன ஊழியர்களின் பங்களிப்பாகும். இந்தத் திட்டம் நிர்வகிக்கும் பெரும்பாலான முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக வருமானம் கொடுத்து வருகின்றன.