Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீட்டில் புதிய சாதனை..!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

எஸ்.ஐ.பி முதலீட்டில் புதிய சாதனை..!

மியூச்சுவல் ஃபண்ட்

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீடு செய்யும் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் அதிகரித்திருக்கிறது.

2021 ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.9,609 கோடி எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக 23.79 லட்சம் கணக்குகள் எஸ்.ஐ.பி முதலீட்டுக்காகத் தொடங்கப்பட்டிருக்கிறது. மொத்த எஸ்.ஐ.பி கணக்குகள் 4.17 கோடியாக அதிகரித்துள்ளது.

எஸ்.ஐ.பி முதலீட்டில் புதிய சாதனை..!

முன்பை விட சிறு முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆரம்பித் திருப்பதே இந்த அதிகரிப்புக்கு காரணம் என இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி-யின் முதன்மைச் செயல் அதிகாரி என்.எஸ்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், அதன் புதிய ஃபண்டான ஃப்ளெக்ஸிகேப் திட்டம் மூலம் ஜூலையில் ரூ.9,800 கோடி திரட்டியிருக்கிறது. இதுவும் ஜூலையில் எஸ்.ஐ.பி முதலீடு அதிகரிக்க முக்கியமான காரண மாகும். கடந்த ஜூலையில் மொத்தம் 15 என்.எஃப்.ஓ-க்கள் மூலம் ரூ.17,332 கோடி திரட்டப் பட்டிருக்கிறது. ஜூலையில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை ரூ.1 லட்சம் கோடி அதிகரித்து மொத்தம் ரூ.35.15 கோடியாக உள்ளது.

எஸ்.ஐ.பி பற்றி நாணயம் விகடன் யூடியூபில் வெளியான வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=bfpHRpYseDU